அதர்மம்!

புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : 0

மனிதங்கள்

மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......

நட்பு
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
 
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!

நீதயும்
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!

ஏறிட்ட
மதர்ப்பு!
மோசமானது
கற்பு ...!

ஞாயிறு, 9 ஜூன், 2013 0

இருளை நீக்கிட
தேவையென
அணுவுலையமைத்தது
கூடங்குளத்தில்
அணு-மின் நிலையம்
சக்தி {வளம்}நாட்டிற்கு
சாதகம் உயிருக்கு பாதகம்
தமிழ்நாட்டிற்கு
இடிந்தக்கரை நச்சு
கசிந்தால் சடலம்
புதைக்குழியாக எழும் கரை !

தேவை !

Category : 0

தேவை !

ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !

நற்பண்பு !

Category : 0

நற்பண்பு !

தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !

வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !