Home > 2011

2011

செவ்வாய், 15 நவம்பர், 2011 Category : 0

யாரவள் ?

முதன் முதலில்
அவளை பார்க்கையில்
அவளழகு
தீண்டிச்சென்றது !

கொள்ளா ஆசையால்
நிறைந்த மனது
கண்கள்
பின் தேடிச்சென்றது !

முன்னே தோன்றிய
மீனாய் அவள் !
சிக்காமல்
கையிலிருந்து நழுவியது .!

தூண்டில் போடும்
விழிகளிரண்டு
வருவதை
எதிர் நோக்கும் பார்வை.!

இளமை !

குழாயில் ...
சீறிப்பாய்ந்து
வந்த தண்ணீர்
வரவில்லை வாடி
நிற்கும் கிணறு .!-பழுதடைந்து
துரும்பாகி நிற்கிறது !
எதற்கும் உதவாத
இரும்பு .!

புதன், 2 நவம்பர், 2011 Category : 0


இலக்கியனின்.... புதல்வன் .... காணும் 5 தாவது  பிறந்தநாள் !
HAPPY BIRTHDAY SON!!!


மகனே ...!
எங்களுடைய   வாழ்வில் ,,,
மங்காது தீப ஒளியாய்..!
தந்து கொண்டிருக்கும் 
மகிழ்ச்சி .!

மனமெனும் ...
நந்தவனத்தில் பூர்த்து !
இன்பமெனும் பூங்காவனத்தில் 
எழில் தரும் மலராய் வகிக்கிறாய் ..!

நாங்கள் பெற்றெடுத்த 
வளங்களில் விளங்கும் 
ஈடற்றச்செல்வனாய் ...
திகழும் புதல்வன் !

இறையருள் பொழிய 
நபி வழியறிய ...!-புதுமை 
கவி மொழியில் ..
வாழ்த்துகிறேன் !

இந்நாள்போல் -எந் நாளும் 
பல்லாண்டு பிறந்த 
நாள் விழாக்களை காண 
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!

எங்களுடைய ...
தாய் தந்தை !
கண்ட கனவை !-தற்போது 
உன்னுடைய ,,,தாய் தந்தை 
காண்கிறது .!

அதை ஏற்று ..
நிறைவேற்ற ...ஏக வல்லோன் !
துணைப்புரிவான் .!- பிறந்த நாள் 
வாழ்த்துக்களுடன் அடுத்த வருடம் 
முன்னேற்றத்தை எதிர்நோக்கும்!

பாசமிகு பெற்றோர்கள் !

இன்று இவ்வார்த்தைகள் 
கடுமையாக  இருக்கலாம் 
நாளை எளிமையாக இருக்கும்!
தன்னம்பிக்கையுடன் ..
உனது பெற்றோர் !

Category : 0



நிலையில்லா வாழ்க்கை !
நிரந்தரமான மண்ணறை.!

கலியுலக வாழ்வு நிரந்தரமல்ல !
மண்ணற வாழ்வே நிரந்தரம் !
வருமுன்னே எதையும் 
கொண்டு வருவதில்லை ..
இறந்த பின்பும் எதையும் 
கொண்டு செல்வதில்லை 
பிறந்தப்போது அறியா குழந்தை  
வளர்ந்தபொழுது ஒரு மனிதன் .-தனிமையாய் 
இறையடி சேர்வோம் .!

இறைவன் தரும் செல்வங்கள் யாவும் 
சோதனையே ...அறிந்திட்டால் 
உன்னைவிட சிறந்தவன் 
உலகிளில்லையே ...!
இருக்கையில் நம்மிடம் 
இருக்கட்டும் நல்ல குணம்  ..
இருப்பதை தந்தால் வள்ளல் 
சொல்லிடும் பல மனம் !

இருக்கையில் போற்றி....
உதடுகள் உச்செரிக்காவிட்டாலும் ..
வாங்கி சுவைத்த நாக்கால் ..
குடல்களும் சொல்லும் 
உள்ளம் மறைத்த உவமைகள்
உயர்வாகி அங்கே நிற்கும் ..!

நீ செய்த தர்மங்கள்தான் 
நரகத்தை வெல்லும் ..!
செய்த நற் செயல்கள்தான் 
சொர்க்க கதுவை ...
திறந்து முன் செல்லும் .!

இறை வழிப்பாதை .. 
இறையடி சேர்க்கும் ..
நபி போதித்த ஞானம் ...
நல் வழிப்படுத்தும் ..!

சிந்திப்போம் ..! தர்மம் செய்வோம் ! நன்மைகள் சேர்ப்போம் !
இறைஞ்சிடுவோம் !அவனை பணிந்திடுவோம் !சொர்கத்தை அடைந்திடுவோம் !
தீர்ப்பு நாளன்று ..சொர்க்க வாயல் ..  நமக்காகும் ...!
சொர்க்க கத வுகள் திறந்து வரவேற்கும் ..!

சனி, 22 அக்டோபர், 2011 Category : 0

பொல்லாதவன்  ஒருவன் !
சொல்லாமல் வந்தான் !
செல்லாத காசை ..-தந்து 
வாக்கை  கொள்ளையடித்து சென்றான் ! ,,


கல்லாதவராய் நாங்கள்..!
கள்ளாமையாச்சு ..-  ஏந்தாத
கரத்தில் பிச்சை ..!
வாய்த்தது சில்லரையாச்சு..!

இல்லாததொன்றை..
முரணாக செய்வான்  ..!
வராததொன்றை முன்னின்று 
வரவேர்ப்பான்  .!நம்பியவரை 
கழுத்தையும் அறுப்பான் !

நுழையாத வீட்டுக்குள்ளே ..
மறைந்து வந்த ஆமை ..!
மாசு அடையவைத்துவிட்டு ..!
வீதியிலேஅறியாமல் போகும் ..!

வரலாற்றில் கண்டிடாதொன்றை
காணவும் வைப்பான்  /!
நிர்வாணமாக்கிய அங்கத்தை யும்
தயங்காமல் காண்பிப்பான்  ,,!

அரசியலுக்கு வந்தால் ...
ஆண்டியாகத்தான் ஆவார் ..!
சொல்லியக்கூற்றை உடைக்க
ரௌடியாகி நிர்ப்பான்  ...!

ஓட்டுப்போட்ட மக்களுக்கு
பாதுகாக்க மறுப்பான்     ,,,!
ரூபாய் நோட்டுக்காக வந்து  ..
\பூட்டையும் உடைப்பான் ..!

தட்டிக்கேட்க போனால் ...
தடியடி விழும் ..!
சண்டைகளிட்டால்   நம் ..!
மண்டைகல்தான் உடையும்..!

விடையின்றி போகும் ...
போக்கு தடையின்றி யாகும் ..!
ஆளும்வரை ஆயிரம்
உயிர்கள் பலப் போகும்..!

 தேர்தலாகும் மறு முறை    ..
ஆடும்வரை ஆட்டம்..- எண்ணுவான் !
பணத்தை இரைத்தால் .
எல்லாமே  விசுவாசத்தைகாட்டும் !

தேர்தலோர் ....
ஆடுக்கலாமாகும் ..!
சூழ்ச்சி செய்தால் ...
போர்க்களமாகும்.. ..!

தந்திரவாதிகளுக்கு
அதுவோர்
மந்திரமாகும் ..!
சமுதாயம்!

 சிந்திக்காமல்
 போனால் ..
ஊரே
சீரழிந்துப்போகும் ...

செயளிழுந்து
செயல்பட்டால் !
பழுதாகிப்போகும்
மனித நேயம்..!
\
நல்லவர்களை
தேர்ந்தெடுப்போம் ..!
சமூகம் முன்னேற
வழி வகுப்போம் !

உண்மைகள்
 வென்றால்
நன்மைகளாகும்
 வீட்டயும்- ,நாட்டையும்Publish Post
அது பாது காக்கும் .!

வெள்ளி, 21 அக்டோபர், 2011 Category : 0

தியாகம்..!(குர்பானி )


இறைவன் நாடினான் !
மனம் கொடுக்க நாடியது
பலி இட்டது மகனை ..
பலி கெடவானது ஆடு ..!

Category : 0



முத்தாக பெற்றெடுத்தார்கள் ..
பெற்றோர்கள் ..!
விலை மதிப்பற்ற 
சொத்தாக ...அவர்கள் !
நிலைத்து கொடுக்கும் 
வளர்ச்சியில்..!வித்தாக என்றும்..
ஊட்டச்சத்தாக இருக்கிறார் .!
பலன் தரும் வளர்ச்சில் ..
வளம் சேர்க்கும் உரமாய் ..!
 நிலை தடுமாறும் வயதில் 
உள்ளம் தடுமாறாது 
பொழியும் பாசம் ..!

ஆசை .

Category : 0


ஆசை ..!- எனக்கு
சிலையாகவில்லை
நிலையாகவேண்டும் ..!
எனதுப்பெயர்!
ஒரு கனமொன்றேப்போதும்..!
இறப்பதற்கு ..!
தயாராகவும் உள்ளேன் ..!
இவ்வுலகை விட்டுச்செல்ல …!
இவ்வுலகிற்கு 
நான் செய்ததென்ன?

எப்போதும்..!
நிலைத்து நிற்கும்
எனது பெயர்…!-இறந்தும் 
போற்றிச்சொல்லும்..!

குவைத் வசந்தம் மாத இதழுக்கு அனுப்பபட்டக் கவிதை .

Category : 0

குவைத் வசந்தம் மாத இதழுக்கு அனுப்பபட்டக் கவிதை .
வாருங்கள் உயர் சமுதாயமே அதரவுத்தாருங்கள் !
"கண்டால் மனித நேயம்  உருகும்" !"கதறும் பஞ்சம் "விடும் கண்ணீர் ஓலம் சோமாலியா !


வசந்தம்
வந்தது என்னுள்ளே...!
புது வசந்தம் பிறந்தது!
இன்பம் நிறைந்தது.!

ஏந்திய கரங்கள்
பூர்த்தது கண்கள்!
கண்ட மாத இதழின்
மேல் அட்டைப்படம்.!

களித்த கண்களோ..
கனத்து குளமாகியது!
கலங்கி... கண்ணீர்
துளியாகி சிதறியது!

எதிர்பார்த்த உள்ளத்தை
உறுகிட வைத்தது!
கண்ட காட்சியினால்...
உலைதல வைத்தது!

நமக்கு இங்கே...
பிறிவு மட்டும்...!
தொடர்ந்திடும் நல்லுறவும்
பண வரவால்...
மன நிறைவும் தருகிறது!

வறுமையின்றி...
வாழ்க்கையோடம்
வளமுடனும் - நலமுடனும்
உருண்டோடிக்கொண்டுள்ளது!

காலம் தவறாது
மூவேளைச்சோறும்
தாகத்திர்த்திடும்  தண்ணீரும்
அளவற்று கிடைக்கிறது!

தேவைக் கேற்ப ..
நாகரீக வண்ண வண்ண
உடுத்தும் உடைகள்
கிடைக்கவே செய்கின்றது!

சொமாலிய மக்களின்
நிலமை நாளுக்கு நாள்!
நொடிக்கும் ஒவ்வொரு நொடியும்
யுகங்களாகிறது.!

வறுமயினாலே ...
அவர்களின் வாழ்க்கை
போர்க்களமாக..
மாறி வருகிறது.!

சின்னஞ் சிறு குஞ்சுகளின்
கண்ணீர் குவலம்!
முடமாகிடும் ...பிஞ்சுகளின்
பெரும் அவலம் .!

உயிரற்ற சடலங்களாக
விழுந்து சரிகிறது.!
பிணமாகி .. புழுவுக்கு
உணவாகிறது.!

எம் சமுதாயமே...
நற்மனித நேயமே ...
இவர்களுக்கு.
நற்கருணைக்காட்டுங்கள்!
வறுமையினை மீட்டுங்கள்!

தட்டுங்கள் ....
பலரின் உள்ளக்கதவை
திறந்திட வைத்திடுங்கள்
அவர்களின் மனக்கதவை!

நெஞ்சத்தினுள்ளே ..
சிருத்துளி.. ஈரமிருந்தால்...!
அவர்களுடைய ! - அந்த
சிரமத்தை எண்ணிப்பாருங்கள்!

மனமுவந்து உதவிட
முன் வாருங்கள்!
அவர்களை உயர்த்திட
பேராதரவைத் தாருங்கள்.!

அள்ளிக்கொடுக்க..
இயலா விட்டாலும்...!
கிள்ளிக்கொடுக்காவது
முயன்றிடுவோம்.!

இவன்.,

Category : 0



எடுத்துக்காட்டு..கவிதை!
மனக்கதவை திறந்து வை…
இன்பம் குடியேறும்!
துயரம் விடைப்பெறும்..
நாடும் விடியலுமுன்னைத் தேடும்..
நுழைவாயல் அலங்கேறும்..
வாழ்க்கை எழிலாகும்.!
பூர்க்கும் கண்களுக்காகும்
பூந்தோட்டம்.!- நாட்டம்
வேடிக்கை காணும் ..
ஆனந்தம்!
அழகிய வீடு..!-குடும்பம்
அன்பின் வெளி பாடு.!
பாசத்தோடு பழகு
ஒற்றுமைக்காகுமாது விழுது.!

Category : 0


உணர்வுகளை அடக்கி
உறங்குகையில்…
எழுகிறது சிந்தனை.!
உள்ளத்தினுல்..
ஆழ்த்துகிறது…
மிகுந்த வேதனை.!
காலை.. முதல் மாலை
வரை…
ஓயாது உழைப்பு..!
துவளாமல்..தினம்.!-
பணிக்கு சென்றால்…
மட்டுமே..சீராய் ஓடும்
குடும்ப பிழைப்பு.!
நோயின் தாக்க்ம்..
தாங்கி கடந்தால்..
ஓய்வு நாட்களுக்கு..
ஓடாய் உழைத்தால்
மட்டுமே..மாத சம்பளம்.!
நாட்கள் நெருங்க..
தந்திடும் முக மலர்ச்சி..
மீட்டிடும் மாதம்
போக்கிடும் வறட்ச்சி..!
கையில் பெருமுன்..
கடங்காரன் நினைப்பு..!
இருப்பு இல்லை
தந்திடும் வெறுப்பு.!
கடனை அடைத்தால்
மட்டுமே …
பிரச்சனைக்கு சுதந்திரம்.!
தர இயலாவிடில்..
சண்டைகல் நிறந்த்தரம்.!
விடிவு நோக்கிடும்..
அடுத்த மாத சம்பளம்.!
தந்து முடிக்காவிட்டால்
அவமானம் அம்பலம்.!

Category : 0


உரிமையாக
பழகிய
உன்னிடம்
உண்மை வேண்டும்.!
நேர்மையான மனிதனாக
நான் இருப்பேன்.! …….
என்றும் உண்மையாக ,
நீ இருந்தால்
வளமாகும் நம் நட்பு..!

Category : 0

விளை நிலம்
விலை நிலமாக்கியதால்..
இன்பம் தரகர்களுக்கு ..
தடுமாறும் விவசாயி …
தடுமாற்றம் நிலம் -வறுமை
பஞ்சத்தில் ஏழ்மை.

Category : 0


அரசுயல் ...!
ஊட்டச்சத்து தேவை
ஆரோக்கியம் உடலுக்கு ..
ஆயுர்வதம் சொன்ன
நல்ல மருத்துவம் !
சந்தைக்கு போனேன்
அழகாய் தெரிந்தது
இனிமையாக இருக்குமென்று
ஆப்பிளை வாங்கினேன் ,,
நல்லதென்று நினைத்தேன்
கடித்தபபிறகுதான் தெரிகிறது
அழுகிய ஆப்பிலேன்று ..!எதற்கும்
உதவாது அதுவோர் குப்பை !-

Category : 0



உண்மையின் நெருடல் …
உள்ளத்தின் குமுறல்..
தலை குனிந்த எழுதுகோல் – அவலங்களால்
தலைநிமிர்த்திட்ட எழுத்துக்கள் ..!
தர மிழுந்த தரகர்களின்
தராதிர அரசியல்..!
வரையற்ற போக்கு
தடம்புரளும் சொற்கள் !
கண்ணியத்தை விலைப்பேசி
நேர்மை யை அடகுவைத்து –
பணத்தி மீது மோகத்தால்
ஆசை நாற்காலி வாங்கினான்
அரசியலில் அமர்வதற்கு ..!
வியாபார சந்தையில்
பிடித்த வாக்குகள் …
இலாபம் குறிக்கோளால்
வேட்டையாடும் நரிகளாய் !
கோட்டையை பிடித்தால் மட்டுமே
ஆட்டையே போடமுடியும் ..!
நாட்டை பலியாக்கிட
தேடும் ஆதாயம் !எட்டாதவரை
சமூதாயம் நலம் பெற
நினைக்மாட்டான் …
தேவையானது கிடைக்காதவரை
உண்மை வாக்கும்
நிறை வேற்றமாட்டான் ..!
ஏமாற்றம் மக்களுக்கு
இழிவு சமுதாயத்திற்கு
மதுபோதையாய் ஆட்சி
அருந்திய பேதகன்
மதி மயக்கத்தில் ,,
தொடரும் பிரச்சனையை ..
. அறியாத மனசாட்சி ..!
தெளியாதவரை.-எவருக்கும்
விடியாது நன்மை …!

Category : 0


நமக்குள் பிரச்சனை
எதிர் பார்ப்பவருக்காகுமது
தூவும் அர்ச்சனை .!
வரவேற்று கண்டு மகிழ்வார்
பின்னே சென்று இகழ்வார் ..!
இழிவாகும் நம் சமூதாயம்
பழிவாங்கும் பங்கு ..!
பிளந்த ஒற்றுமை
கண்ட சகோதரத்துவம்
உடைந்த சமுத்துவம்
தேடினாலும் மீண்டும்
கிடைக்காது இந்த நட்பு ..!
மறு தேர்தலில்
நமக்குள் தேவை ஒற்றுமை
நாடினால் மட்டுமே -தனிமையாகும்
இனிமை!

Category : 0


அன்பான வேண்டுகோளை
பண்பாக சொன்னாய் ..!
தவறுதனை சுட்டிக்காட்டி
தவறை அறியவைத்தாய் ..!
பொறுமையை காத்தால்
விவேகத்தை சொல்லும்..!
வேகத்துடன் செயல்பட்டதால்
செயளிழுக்கச்செய்யும்..!
ஒழுக்கமென்பதை ..
ஒழுக்கம்தான் வெல்லும்..!
வழக்கமான மாண்பு ..-
விழிக்க விழுப்பம்தானாகும்..!
அறியாத தவறுக்கு
கள்ளாமை காரணம் ..!
பொல்லாத எழுத்துக்களால்
மனம் வாடிக் கொல்லும்.!
கொ( ல் )ள்ளாமல் சொல்வது
இயல்பானது உன்வழக்கம்..!
தவறு செய்யும் முன்பே ..
மன்னிப்பை தேடுவது தான் என் பழக்கம் .!
ஊசியால் குத்தினால் ..
வலி ஊசிக்கில்லை ..
ஊசியாக நானா நினைக்கையில்
வருடுமுள்ளம் நெருடுகிறது …
துன்பம் ஒன்று கண்டால்
துடித்து எழுபவன் ..!- துவலாமலிருக்க
பிறரின் கண்ணீரை துடைப்பவன் ..
மகிழ்ச்சியை கண்டு நெகிழ்ச்சியடைபவன் ..!
உன் வலியைத்தாங்கி ..!
கனமான என்னுள்ளம் ..!
மனமார .. மன்னிப்பை நாடும்
உலமார்ந்து கொடுப்பாயா?
வலியுடன் …. இலக்கியன் …!

Category : 0

தவறை ஏற்ப்பவன்
பண்பன் .!- முன்னே
மன்னிப்பை கொடுப்பவன்
நண்பன்..!

வியாழன், 20 அக்டோபர், 2011 Category : 0


அன்பான வேண்டுகோளை 
பண்பாக சொன்னாய் ..!
தவறுதனை சுட்டிக்காட்டி 
தவறை அறியவைத்தாய் ..!

பொறுமையை காத்தால்
விவேகத்தை சொல்லும்..! 

வேகத்துடன் செயல்பட்டதால் 
செயளிழுக்கச்செய்யும்..!

ஒழுக்கமென்பதை ..
ஒழுக்கம்தான் வெல்லும்..!
வழக்கமான மாண்பு ..- 
விழிக்க விழுப்பம்தானாகும்..!

அறியாத தவறுக்கு 
கள்ளாமை காரணம் ..!
பொல்லாத எழுத்துக்களால் 
மனம் வாடிக் கொல்லும்.!

கொ( ல்  )ள்ளாமல்  சொல்வது 
இயல்பானது உன்வழக்கம்..!
தவறு செய்யும் முன்பே ..
மன்னிப்பை தேடுவது தான் என் பழக்கம் .!

ஊசியால் குத்தினால் ..
வலி ஊசிக்கில்லை ..
ஊசியாக நானா நினைக்கையில்
வருடுமுள்ளம் நெருடுகிறது ...

துன்பம் ஒன்று கண்டால்
துடித்து எழுபவன் ..!- துவலாமலிருக்க
பிறரின் கண்ணீரை துடைப்பவன் ..
மகிழ்ச்சியை கண்டு நெகிழ்ச்சியடைபவன் ..!


உன் வலியைத்தாங்கி ..!
கனமான என்னுள்ளம் ..!
மனமார .. மன்னிப்பை நாடும்
உலமார்ந்து கொடுப்பாயா?

                            வலியுடன் .... இலக்கியன் ...!





Category : 0

வேடிக்கை பார்ப்பவன் 
எழுத்தாளனல்ல ..!
கற்பவன் ஆசிரியரள்ள..!
மற்றவர்களை கற்பிப்பவனே
நல்லதோர் ஆசான் ,!

சொல்லால் முடியாதவை
எலலாம் எழுதுகோலால் முடியும் 
பொய்யை  தவிர்த்து ..
உண்மையை  எழுதுபவனக்கு 

நேர்மையாளன் பட்டம் 
வழங்காவிட்டாலும் ,,
உள்ளம் உணர்த்தும் 
உருக்கி திருத்தும் 

திருத்துபவன் ஆசிரியன்.! 
  

Category : 0

ஊட்டச்சத்து தேவை 
ஆரோக்கியம் உடலுக்கு ..
ஆயுர்வதம் சொன்ன 
நல்ல மருத்துவம் !


சந்தைக்கு  போனேன் 
அழகாய் தெரிந்தது 
இனிமையாக இருக்குமென்று 
ஆப்பிளை வாங்கினேன் ,,

நல்லதென்று  நினைத்தேன் 
கடித்தபபிறகுதான் தெரிகிறது 
அழுகிய ஆப்பிலேன்று ..!எதற்கும் 
உதவாது அதுவோர் குப்பை !-

Category : 0

நமக்குள்  பிரச்சனை 
எதிர் பார்ப்பவருக்காகுமது 
தூவும் அர்ச்சனை .!


வரவேற்று கண்டு மகிழ்வார் 
பின்னே சென்று இகழ்வார் ..!
இழிவாகும் நம் சமூதாயம் 
பழிவாங்கும் பங்கு ..!

பிளந்த ஒற்றுமை 
கண்ட சகோதரத்துவம் 
உடைந்த சமுத்துவம் 
தேடினாலும் மீண்டும் 
கிடைக்காது இந்த நட்பு ..!

மறு தேர்தலில் 
நமக்குள் தேவை ஒற்றுமை 
நாடினால் மட்டுமே -தனிமையாகும் 
இனிமை!

Category : 0

உண்மையின் நெருடல் ...
உள்ளத்தின் குமுறல்.. 
தலை குனிந்த எழுதுகோல் - அவலங்களால் 
தலைநிமிர்த்திட்ட  எழுத்துக்கள் ..!

தர மிழுந்த தரகர்களின் 
தராதிர அரசியல்..! 
வரையற்ற  போக்கு
 தடம்புரளும் சொற்கள் !

கண்ணியத்தை விலைப்பேசி 
நேர்மை யை  அடகுவைத்து - 
பணத்தி மீது மோகத்தால் 
 ஆசை நாற்காலி வாங்கினான் 
அரசியலில் அமர்வதற்கு ..!

வியாபார சந்தையில் 
பிடித்த வாக்குகள் ...
இலாபம் குறிக்கோளால் 
வேட்டையாடும் நரிகளாய் !

கோட்டையை பிடித்தால் மட்டுமே 
ஆட்டையே போடமுடியும் ..!
நாட்டை  பலியாக்கிட  
தேடும் ஆதாயம் !எட்டாதவரை   


சமூதாயம் நலம் பெற 
நினைக்மாட்டான்  ...
தேவையானது கிடைக்காதவரை 
உண்மை வாக்கும் 
 நிறை வேற்றமாட்டான்  ..!

ஏமாற்றம் மக்களுக்கு 
இழிவு சமுதாயத்திற்கு 
மதுபோதையாய் ஆட்சி 
அருந்திய பேதகன் 
மதி மயக்கத்தில் ,,

தொடரும் பிரச்சனையை ..
. அறியாத மனசாட்சி ..!
தெளியாதவரை.-எவருக்கும் 
விடியாது நன்மை ...!









புதன், 19 அக்டோபர், 2011 Category : 0


கனவாக்கிய  கடன்காரன் !
வசந்த தேடிகளின்
அவலங்கள் கண்ணீர்.
சிந்தும் எழுத்துக்கள்..!.
கொ ட்டும் அருவிகளாகும்
கவிதைகள்.!
உணர்வுகளை அடக்கி
உறங்குகையில்…எழுகிறது சிந்தனை.!
உள்ளத்தினுல்..ஆழ்த்துகிறது…
மிகுந்த வேதனை.!
காலை.. முதல் மாலை
வரை…
ஓயாது உழைப்பு..!
துவளாமல்..தினம்.!-
பணிக்கு சென்றால்…
மட்டுமே..சீராய் ஓடும்
குடும்ப பிழைப்பு.!
நோயின் தாக்க்ம்..
தாங்கி கடந்தால்..
ஓய்வு நாட்களுக்கு!..
ஓடாய் உழைத்தால்
மட்டுமே..மாத சம்பளம் கரங்களுக்கு .!
நாட்கள் நெருங்க..
தந்திடும் முக மலர்ச்சி..
மீட்டிடும் மாதம் வருமானம்    ..!
போக்கிடும் வறட்ச்சி..!
கையில் பெருமுன்..
கடங்காரன் நினைப்பு..!
இருப்பு இல்லை நிரந்திரமாய்
தந்திடும் வெறுப்பு.!
கடனை அடைத்தால்
மட்டுமே …
பிரச்சனைக்கு சுதந்திரம்.!
தர இயலாவிடில்..
சண்டை கல் நிறந்த்தரம்.!
விடிவு நோக்கிடும்..
அடுத்த மாத சம்பளம்.!
தந்து முடிக்காவிட்டால்
அவமானம் அம்பலம்.!
தரமிழுந்த அரசியல் அழிவை நோக்கி  ..!
காலம் நெருங்கி டுச்சி
அரசாங்கம்.. தேதியை..
அறிவிச்சிடுச்சி..!
ஐந்து ஆண்டுகளுக்கோர் முறை..
வறண்ட மண்ணுக்கு..
தண்ணீர் ஊற்றாச்சி..
வாடிய வயலுக்கோ..
தெறலாய் இதமாச்சி.!
புது விதை..
களத்தில் அறிமுகமாச்சி..
புதுமையென்று..மக்கள்
நிராகறித்தாச்சி..!
கேலிக்கூத்து வியப்பளிப்பு..
சித்திரங்களின் நகைப்பு.!
நட்சத்திரங்களின் ”படை”ப்பு
சொல்லிடும் தனிச்சிறப்பு!
தெருக்களில் கட்டிய
அழகு தோரணங்கள்.!
விண்ணில் பறக்கும்
வண்ணக்கொடிகள்.!
சுவரொட்டியால் எழிலாகிய
வண்ணச்சுவறு..!
கவரும் முகப்பொருந்திய பலகை
குப்பைத்தொட்டி விளம்பரம் படுத்தியது!
அரங்கேறும் அரசியல்
அந்தரங்கம்.!-தந்தரமாய்
விலைப்பேசும் கூட்டணி கள்
விலைப்ப்போகும் கட்சிகள்.!
செய்யும் ஊரெங்கும் பிரச்சாரம்
குடி- மான்களுக்கு மகிழ்வாரம்.!
நாக்குகள் இங்கே தடுமாறும்.!
வாக்குகளிங்கே பணமாகமாறும் .!
வென்றவர்கள் கையிலாட்சி
சட்டம் மேல் பை யிலாட்சி
விருப்பத்திற்கேற்ப மனசாட்சி
வழி நடத்திடும் அரசாட்சி.!
கையிலேந்திய விளக்கு.-எரியும்.
பிரகாசமாய் வெளிச்சம்
தனக் கென்று கருதினால்..
இருட்டில் வாடும் உலகு.!

அறியாத வரை..நாட்டிற்கு கேடு.. !
அறியமுன்னே .துண்டாக்கிட 

விளைப்பேசிடும் கறுப்பாடு..!
 .குத்துகைக்கு இல்லை விரைவில் .
நம் இந்தியா விற்பனைக்கு...

Category : 0



நானும் என் எழுத்தும்.!
காற்றை கையில் பிடிக்கயிலாவிட்டாலும் ..
காலம் தாண்டி வாழ்ந்திடுவேன் ..!
நிலவு வெளிச்சம் முகவரிதராவிட்டாலும் ..
எழுத்துக்களாக இவ்வுலகில் நானிருப்பேன் ..!

வான வில்லின்  தோற்றத்தின் அருமை 
பூமிக்கு அப்போது தெரியாது ..
மேக மூட்டமாக சொன்னாலும் ..
புரியாது இந்த மண்ணிற்கு !மழை பொழியும் வரை ..!

தமிழ் அன்னைத் தொட்டிலில் 
தமிழ் பாடி தாலாட்ட  
நான் உறங்குவேன்
 எவ்வித கவலையின்றி ….!

வார்த்தைகளால் சொல்லமுடியாவிட்டாலும் 
என் கவியால் ...தொடரும் 
ஆதங்கத்தை அதில் படைப்பேன் !

கவிஞனாக வர முடியாவிட்டாலும்..
கவிதையாக உலா வருவேன் .
இருக்கும் வரை மட்டுமல்ல -
இறந்தப்பின்பும் பண்பை விளக்கிடும் 
என் எழுத்துக்கள். உயிரோடு .!



சனி, 15 அக்டோபர், 2011 Category : 0


அழிவை நோக்கி ஆராய்ச்சி



உலக அழிவுக்கு..
பாதகமளித்திடும்..
மனிதனின்
ஆராய்ச்சி.!

அறிவியல்
முன்னேற்றங்கள்
கண்டிடும்..அறிவியல்
வளர்ச்சி.!

ஊனப்பிறவிகளாய்..
மானிடம்.!-அறிய
கண்டு பிடிப்புகளாய்
மருந்து.!

வியப்பிளாழ்த்திடும்
பலப் புதிய ...
நோய்கள்.-
பூமியில்.!

விண்ணில்
 சாதனை தொடக்கம்.!
மண் புதையும்
வேதனை.முற்று!

சுற்று சூழலைக்காக்க சூளுரைப்போம்.!


மண்ணிலிருந்து
விண்ணைத்தொட்டது
விஞ்ஞானம்.!

பூமியின்
சேட்டையால்
ஓசோனிலோட்டை.!

சீர்கெட்டு
கேடு விளைவித்தது
மாசுக்கேடு..!

கட்டிய வீடு..
வெட்டியக்காடானது
விறகுக்கட்டை.!

சாய்ந்துறங்கிய
நிழல்..வெட்டவெளி
பாலைவனமானது.!

சுடுகாடானது
காடுகள்
நி(ர்)(று)வனமானது.!

தொழிலுட்பமானது
அனுவுலை..
உ(ற்)(ரு)பத்தி.!

சிறு உதவியது
பொசுங்குவதற்காகிய
ஊதுவத்தி.!

புகை-
வாகன(ப்)ம்-
போக்குவரத்து!

நெரிசல்..
விரிசலானதால்..
புகைத்தது..!

புகை
உடலுக்கு பகை
பூமிக்கு.!

சிறந்தது மூலிகை
மகத்துவமானது
மருந்துவம்.!

உருவானது
பல நோய்கள்-முன்னேறிய
மருந்து.!

யுக்திகளானது!
எரிவாயு சக்தி
எரிந்தது ,,

கருத்த கதிர்வீச்சால்
கருகியது
மேகம்.!

ஏற்றமும்-தாழ்வும்
மனித இனத்தில்..!
போர்க்களமாய்..!

பிளந்த பூமி..
கண்டுஇரசித்த
வானவேடிக்கை.!

கிழிந்த விண்திரை
திகைப்பை..
வெளிப்படுத்தியது!

தீய..-கதிர்-
அணுசக்தியால்
ஓட்டையானது.!

கற்ற ஞானம்
மரம்..
போதித்தது.!

கற்றிட..கட்டிட
பள்ளிக்கூடங்களின்று
போதிக்கிறது!

பெற்ற ஞனம்
போதையானது.!
மதுபானம் மேதையானது.!