Home > ஜூலை 2012

ஜூலை 2012

திறமை !

ஞாயிறு, 22 ஜூலை, 2012 Category : 0


இலக்கால்
இலட்சியத்தையடைய 
முடியாது !- முயற்சி 
ஆர்வத்தோடு திறமையை 
வெளிப்படுதினாலே ..
 முயன்று வெற்றிப்படிகள்
எட்டிப்பிடிக்கும் இலக்கு !

மனிதநேயம் !

சனி, 21 ஜூலை, 2012 Category : 0

பெருகிட்ட ஆழ்குலத்தில்
மூழ்கிட்டால் குளம்
 மூழ்கடிக்கும்-வாழவைக்காது !-
 கைக்கொடுக்கும் மனிதன்
குலத்தை மறந்த
மனிதநேயம் ! 

இதுதான் நம் தமிழ் சங்கம்

வியாழன், 19 ஜூலை, 2012 Category : 0


சரணம் !

இது நம் குடும்பம்
அழகிய பூங்காவனம்
உறவுக்குள்ளே உணர்விருக்கும்
உள்ளங்களை ஒன்றிணைக்கும் !

இதுதான் நம் தமிழ் சங்கம்
தமிழர்களின் இதுவோர் அங்கம்
ஒழுக்கம்தான் உயர் பழக்கமாய்
ஒன்றிணைந்து செயல்படுவதுவே நம்வழக்கம் !

{இது }
பல்லவி !

சாதிகள் நமக்குள்ளேயில்லை - பெருகும்
 இந்த வியாதிகளின் பெருந்தொல்லை !
தர்மம்தான் தலை காக்கும்  -நமக்குள்ளே
நேர்மைக்கு மட்டும் வழிக்கொடுக்கும் !

துன்பங்கள் வந்து நேர்ந்தாலும் .-கண்ணீரில்
 சிந்தும் கவித் தூறலாகும்  !இன்பத்தில்
ஆழத்தில் வீழ்ந்தாலும் நல்ல
படைப்புகளாக அலை பெருக்கும்  !
{இது}
பல்லவி 2 !

வள்ளுவன் ,அவ்வை ,கம்பர் ,இளங்கோ
பிறந்த பரம்பரையாமாவோம் !தந்த
தமிழை உயிருடனுள்ளவரை
சிறந்து வளர பேணிக்காப்போம் !

சங்ககால பெருமையினை எக்காலமும்
தொடத்திடுவோம் இதன் உண்னதத்தை
உலகிலே பரப்பிடுவோம் !செம்மொழியே...
 எம்மொழிஎன்று பெருமையினைக்
கொண்டிடுவோம்!- தமிழையே
 உயிராக உயர்வாக மதித்திடுவோம்  !அதையொன்றே
சுவாசிப்போம் உண்மையாக நேசிப்போம்!

பொறாமை !

Category : 0

காதல் மோகத்தால் 
மொட்டு மலர்ந்திட ....
இதமாய் இதழ்
விரித்து இதழோடு
தேனுரிக்கும் வண்டு
உரசி உறவாட ...
நாணத்தால் சாய்ந்தக்குடை
அவமானத்தோடு ஆகாயம் !
வெட்டவெளியில் ஊடல்கொள்வதால்பொறாமைப்படுகிறது
நீர்,நிலம் ,காற்று ,வயல் ,!

பிரிவு !

புதன், 18 ஜூலை, 2012 Category : 0


இதயத்தில் நுழைந்து 
கீறிட்டு இரணமாக்கி 
வெளியேறியக் காதல் 
 நினைவு ஊசியால் 
தைக்கையில் ... 
கனக்கிறது உணர்வு    !
தாங்காது வலியால்   
 துடிக்கிறது கண்ணீர் 
வடிககிறது விழிகள் !

பாரதி - யார் ?

Category : 0


துன்பத்திலே துவண்ட 
துயரத்திலே பிரண்ட
 வறுமையிலே வளர்த்த 
குலத்தினிலே பிறந்தவர் .

உயிர் நேசத்தினாலே 
கொண்ட பாசத்தினாலே 
தமிழ் சுவாசித்தினாலே 
புரட்சியாய் எழுந்தார் !

வீதிதோரம் மரங்கள் 
மரத்தினுள்ளே கிளைகள் 
துண்டாய் சிதறுவதைக்கண்டு
அதில் முளைத்த  தண்டாய் செழிந்தார் !

தீண்டாமை ,தீயணைக்க
பாட்டினிலே சிறுத்துளிநீர்
 கசைய...இதயகுளத்திலே
 பாசனை குழாயமைத்தார் 
 பற்றியநெருப்பினை ...

தன்னெழுத்து ஆக்கத்தாலும் 
வீர இசை முழக்கத்தாலும் 
 பாட்ட்டாலே பரவியத்
தீயை அணைத்தார்..! 

அன்னைதேசத்தை அந்நியன் 
கூரையமைத்திருப்பதை 
கண்டு எழுச்சியாக 
எழுந்தவர் பாரத -தீ !-யாக ...!

எதிர் படைப்பாகவும் 
வீரநெருப்பாகவும் பற்றிட்டார் 
தமிழ்பெருமையினை உயர்த்திட்டார் !-
உலக வரலாற்றிலே பதிந்திட்டார் .!




கள்ளக்காதல் !

Category : 0



விழியிலே கர்ப்பமுற்று
இதையத்திலே கருவுற்று
மாதங்களாய் சுமந்த
காதல் பிரசவமானது உதட்டில் !

இருக்கையில் ஏளனம் செய்யும்
பேச்சு வசைப்பாடி ,உள்ளத்தால் வாடி
கூடியப்போது பல நேரம் உறவு
அறந்து சுவடாய் ரணத்தோடு பிரிவு !

உண்மையாய் ,நேசமாய் ...அன்பாய் ,பாசமாய் சுவாசமாய் உள்ளே நுழைந்தும் வாசித்தும் ,சுவாசித்தும் இறுதிவரையில் ஏக்கத்தோடு வாடி இறக்கையில் !

உலகம்தூற்றி தூக்கிஎறிய...
திரையிட்டு மறைவற்று வெளிச்சமாய் !
சுதந்திரம் தந்து பறக்கும் பறவையாய்
விடுதலையோடு உலாவர ...!

விழிகள் விழிகள் பேசாமல்
உள்ளம் உள்ளம் பரிமாறாமல் !
உணர்வுகளால் எழுந்த ஆசை
மோகத்தில் சிக்கிக்கொள்ள !

ஏனோ ஆபாசத்திற்கு அவலப்பெயர் தந்திடஉடல்கொண்டுநாடகக்கொள
ளும் அவலத்திற்கு கள்ளக் காதலென்று அவலப்பட்டம் சூட்டியதோ ஏனோ ?!

உண்மையாகிருந்து ,சூழ்நிலையில் பிரிந்து கற்ப்பு நெறியுடன் வாழ்ந்து
காலம் வாழும் வரையில் புனிதமாய்
வாழும் ஆயுள் வரைக்காதல் !

கள்ளர்களுக்கும் ,விபச்சாரிகளுக்கும்
குருடர்களுக்கும் ,குமாரிகளுக்கும்
அவலப்பசியால் ருசியறிய நட்பைக்கொண்டு உறவுக்கே துரோகமிட்டு உடல் கொண்ட காதல் !

எப்படி காதலானதோ ?இவ்வுண்மை அறிந்த அறிஞர்கள் ஏனோ !தவறாய் சூட்டிய பட்டத்திற்கு தானோ !ஏற்க வேண்டும் !புனிதத்திற்கு மதிப்பும் மரியாதையும் சாய்க்க வேண்டும் !

இளமையிலையே மோகம்
எழுப்பும் தேகம் உணர்வாய் தாகம்
எழுப்பியும் அடக்கமிருக்கும் ஒழுக்கம்
காக்கும் நெறியே காதலாகும் பழக்கம் !

கள்வர்களுக்கு திருட்டுத்தனமாய்
விபச்சார வியாபாரத்திற்கு
கொல்லும் உறவு கொள்ளும் மறைவு
உடலும் உடலுமிணைந்து நடனமாடும் !

பிழைகள் வாழ்க்கை சீரடிக்குமே ஒழியே ...!
காதல் சீரழிந்துப்போகாது !பிறர்
ஏற்படுத்தினாலும் பதிந்த கறைகள்
கரையேறும் குப்பை குப்பைத்தொட்டியில் !

வெற்றியாளர்களை உணரவைத்து
திருந்த வைத்து இல்லறம் நல்லறமாக
தொடரும் நட்போ கைக்கொடுக்கும்
வளமான வாழ்க்கைக்கு தனித்து நிற்கும் !

தோல்வியாலர்களுக்கு படிப்பினை வழங்கி ஞானியாக்கி ..குருவாகவும் ஆசானாகவும்வழிநடத்திஅறிஞராக்கி இன்பத்தோடு புன்னகைக்கும் கவிதைகளாக ஆகும் விதைகள் !

வாழ்க்கைக்கு உரமாய் வளர்ச்சியை கொடுக்கும் அறவாழ்க்கை !நெறிவாழ்க்கை உலகமே
கரத்தில் கொண்டு வந்து பிறக்கும்
உணர்வு வாழும் வரைக்கும் உள்ளுக்குள்ளே வாடி நகைக்கும் !

மழலையாக இருக்க விருப்பம் !

Category : 0

பிறந்தக்குழந்தையாக இல்லாமல் 
தவழும் குழந்தையாகவே 
இருக்க விரும்புகிறேன் !எப்போதும் 
ஏனெனில் அறியா உலகம் புதுமையாக !

பொறாமையறியா ,பொல்லாப்பறியா..
மதங்கலறியா , குலங்களறியா
உண்மையறியா ..நன்மையறியா,
தீமையறியா..ஒழுக்கமறியா...!

விழப்பமறியா ,கொழப்பமறியா
கள்ளக்கபடமற்ற ..உள்ளம் ...
வெள்ளை நீரோடை பார்ப்பவர்களுக்கு
கொள்ளைகொள்ளும் எழில் !

அழவும் ,அடம்பிடக்கவும்
விளையாடவும் ,மனம்போனபோக்கும் !
இனம் ஒன்று ,மனம் ஒன்று !
பாலரே ,,,,தன் வகையென்று !

அடித்தாலும் ,உதைத்தாலும்
மெய்மறந்த குணத்தாலும்
புன்னகைத்தே சேர்ந்துக்கொள்ளும்
நட்பின்றி ,உறவின்றியாகும் ஈர்ப்பு !

மழலை மொழிப்பேசி ..
இசைப்பாடியே அன்புத்
திசைநோக்கியே நடைபபோடும்
துள்ளி ,குதித்து தாய் மடியேறும் !

மானாய் ,மயிலாய்...காண்பவருக்கும்
ஈர்க்கும் !தொட்டுப்பழகவும் எடுத்துக்
கொஞ்சவும் ,நித்த ,நித்தமாய்
வாங்கும் முத்தம் சொந்த உறவினறி..!

தேடலில் புதுமைப்பழக்கம் ...வாடிக்கையாகும் !
கண்டு ரசிப்பவர்களியும் புன்னகைத்து
கை அசைக்கும் !வஞ்சகமுள்ள ...
உலகில் அறியாது சிறுப் பிள்ளையாய் !

உண்மை அன்பே பார்க்கும்
நல்லவர் ,தீயவர் போதித்தாலும்
தடையின்றியாகும்!-அனைவர்
உள்ளத்தில் குடியேறும் வாஞ்சுள்ளம் !

அழகிய தொகுப்பு தமிழின் சிறப்பு !

Category : 0



இலகிய மனது உயரியப்பெருபான்மை
சிறிய எழுத்தானாலும் பெருத்த 
கருத்தேயாகும் தமிழ் !
சுத்த வைடோரியத்திற்குத்தன் தற்பெருமையறிந்திருக்குமோ?
பெற்ற ஒருவனுக்கு ஒப்பற்ற பெரும்பொருளே ...!


தமிழன்னை மொழியை ,சுவாசிப்பில் நேசித்த
ஒற்றை கவி நீயின்றி வே(ர்)றில்லை
விழுதாய் தாங்கும் படைப்பில் ,
தேன் கூடாகும் பருகுவோருக்கு அமிர்தமே ...!

தமிழ் சதிராடும் எழுத்துக்கள் கதிராகிய
பண்பு மொழி ,செம்மொழியென விளக்கித்தாலும்
செழிக்க,உதவும் நீராய் ஈர்முளைத்து -அதன்
வளர்ச்சிக்கு பெருதுவக்காகும் நல்லுறவாகும் !

தமிழலை கடலில் விழுந்திட்ட யாம் சிறு குப்பை!
மிதந்திடும் தமிழுணர்வு சிற்றட்டை..!
கரையேறினாலும் நனைந்து அதிலூறி 

கரையொதுங்கும்  மட்டை வறுமையின் 
கவியடுப்பில் ஏறும்  ?

சிறியவனாகிருந்தாலும் மொழி வாழ்த்துக்கு

 உரியவனா  ?-அறியாத வாழ்த் விரைந்தனுப்பிய
பதிலுக்கும் கனத்த நன்றியோடு வேறொன்றுமில்லை
என்னிடம் பசுவை நாடும் கன்றாகிய 

தமிழ் பசியில் ஏக்கத்தில்....!

கிடைத்த நல்லுரவிலும் ,உம்வரவிலும் ஆனந்தத்தில்
துள்ளி குதித்து இன்புற செய்திட்ட உம்மடல்
நீர் தமிழ் கடலாகிருந்தாலும் சங்கமிக்குமிடம் சமுத்தரமே ..!
நிலைத்து உமது பெயர் சிறத்து விளங்கிட வரமளித்திடும் தமிழன்னை !


இறுதி முதுமைக்கு உறவாகும் கைத்தடி !

Category : 0

பாதைகள் பலக்கடந்தாலும் 
லட்சியப்பாதை கடப்பது 
கடகளவும் கடினமில்லை 
தாய்மைக்கு வறுமையோடு வாழுகையில் !

அதன்தவிப்பை விட வேறெதுவும்
பெரிதில்லைத்தனிமை !-இனிமை
வாழ்க்கைக்கு திறமையோடு பயணிக்க
ஊன்றுகோலாய் உதவும் தடியே ...!

இறுதிவரைக்கும் உடனிருக்கும்
உன்னத உறவு நிறைவாய்
உயிரற்று மூச்சு பிரிகையிலாகும்
 ஆதரவின்றி தவிக்கும் உன்னத உறவாகும் !

வாழ்க்கையில் இளமையாய்
நடைப்போட நிமிர்ந்திடவாகும்
தன்னம்பிக்கை விழுதுகோல்  !
தடி அலட்சியத்திற்கு திறவுகோல் !-

தன்னிலையில் தன்னிறைவில்லை
உறவுகள் பிரிந்தாலும் தாங்கும் உறவாய்
இறுதிவரையில் பெருதுவக்க. கைக்கொடுக்கும் !
வெற்றிப் பயணம்!- தடுமாறி விழுகையில் ..!

விழுந்தாள்  பேரிழப்பாகும்!-உயிரற்ற கைப்பிடியே
தனிமையோடு இறப்பாகும் ஆயுள் !
பிரிவினால் அடுப்பேறும் வறண்ட கட்டை
வறுமைக்கு உலைஎரிய விறகாகும் கரிக்கட்டை !

தமிழுக்கோர் மடல் !

Category : 0



ஊற்றெடுத்த உன்நெழுத்தில் நீரோடையாய்
பெருக்கெடுத்த தமிழலை ஓயாது 
உணர்வுக்குள்ளே தேரோட்டமாய் 
ஓடிக்கொண்டிருக்க வித்திட்ட விதை ....!

பூந்தோட்டத்தில் பூத்த பூக்களாய்
வண்டீர்த்திட இணைத்திட்ட பூச்செண்டுகளாய்
அழகியப்படைப்பு !உள்மனதில் தைத்து !-பிடித்து
ஆர்வத்துடன் படித்துப்பார்த்ததிலே உருவானது !

கருவிலே விதையுற்ற சிசுவும்
உணரவேண்டும் பைந்தமிழே அன்னைமொழி
அதுவென பற்ப்பல பொன்மொழிகளை வழங்கிடுவே !
ஞானம் பெற்ற போதிமரத்தடியில் தினந்தோறும் ஏக்கத்தோடு !

வந்தவர்கலனைவருமே மரத்தைக் கூருப்போடவந்தவர்களே
கூரையிலே அமர்ந்தவனாய் கூறுகெட்டு போவதைக்கண்டு
வீறெடுத்த எதிர் போராளியாய் களத்திலிறங்க முயற்சித்தவனாய் !-அப்போது !
வறுமைதனை இறுக்கிட்டு பாலையிலே குருடனாய் தள்ளிவிட்டது !

பாவம் சாதனைகள் பலச் செய்ய யாம்செய்ததென்னவோ ......
வேதனையால் வந்துதிர்த்த போதனைகள் ஆனதுவோ
வெண்பாக்கள் !பந்தியிலே வயிறார உண்டிடுவே ...
தமிழுணர்வு பருகிடுவே ...!உறங்காமல் பிரிவோடு வருந்துகிறேன் !

கரத்தினிலே பணமிருந்தால் தமிழை கரையைசேர்த்திருப்பேன்
தமிழனாகிருந்தும்கூட தமிழக்கு பிழைக்கவழியில்லையே ...!
வந்த மனங்கள் நந்தவனம் கூறிடவே கற்பனையை மேருகேற்றிடவே
யாம் கொள்ளும் முயற்சிகளோ எல்லைஇன்றி நீண்டிடுவே ..!

காலமேன்னைப் பிரித்தாளும் தன்னம்பிக்கையில் வாழ்ந்திடுமே
என்னைப்பெற்றுடுத்த தமிழன்னைக்கு அரபுலகம் ஏற்றுடுமே !
புகழோங்கி பெற்றிடவே ...அரியணையில் உயரேற்றிடவே
படும் கட்டங்களுக்கு பலனாய்கிட்டிடுமே .முயற்சியோடு ...!

உதடு பேசுமொழியாக உருதுமொழிஎனதுவே ...!
உயிர்நேசம்கொண்டதிலே தமிழ்மொழியானதுவே !
உறவாகிருப்பவர்கள் ,உயிரோடு கலந்தவர்கள் !-எம்முயிர்
பிரிகையிலே சிறிதுளிக்கண்ணீர் என்னைஎண்ணியாவது விடுவிரோ?

பலர் பொழுதைபபோக்கிகொள்ள,எழுத்தாக்கிக்கொள்ள ...
எம்மேழுத்தோவாகும் பொழுதுப்போக்குகிற சிந்தனையிலே
காலம்கடந்தோடும் வேளையிலே மூலைமுடுக்குகளெல்லாம்
விளைக்கும் விதையாகும் வெண்பாவாய் முளைத்து நிற்கும் !

படைப்பாலநோக்கிடும் லட்சியங்கள் வேறெதுவோ
அதுவாகிருந்திடுவே மெய்மறந்து !-அப்போதே
இன்பத்தில் என்னின் நாடித்துடிப்பு நின்றிடுமோ?
ஆவல்தன்னை வைத்துள்ளேன் தமிழலையே நிறைவேற்றுவீரா?

இளமையிலே வருமைப்பெற்றேன் வருத்தத்தாலே
வாழ்க்கையைக்கற்றேன் பள்ளிவாயல் போகலையே
ஆசானைப்பார்க்களையே ...ஒழுக்கம்கற்பித்த வேதனைகள்
தந்திட்டப்பக்குவங்கள்....!சொற்க்களிலாகும் தத்துவங்கள் !

உம்பகுதியிலே அமைத்திட்டது விலையிலா நிலங்கள்
இனியதை பிறர் விழியிலே மெருகூட்டுவதும்
அவர்வழியிலே உயிரூட்டுவதும் உமபொருப்பு
எம்மிருபபு உமக்கு வழங்குகிறேன் பரபபிடுவீறோ ?

தலைமுடி !

Category : 0

இருக்கையிலே
 இளைமையை
சேர்க்கும்
அழகு முடி !
உதிர்கையில் ....
வழக்கையாய்
வளிமையை
இழக்கும் தலை !
வெளிப்படுத்தும்
தோற்றத்தை
முதுமையான
வாலிபம் !

வியப்பு !

Category : 0


சுமையோடு நடந்து 
வலிமையை கடந்து 
வளிமையை இழந்து !

எளிமையோடு பெற்றெடுத்த 
எம்மண்ணை நீயோ ..!
நீ கதற கண்ணீரிட்டு 
உலகத்தை கண்டிடவைத்தவளோ !

இளமையை மறந்து 
பருவத்தை துறந்து 
எம்முயிரை நேசித்து 
உம்முயிரையும் துறக்க துணிந்தவளோ !?

உயிரோடு ஈன்றெடுத்த 
கருனையுள்ளமே ....
பாசத்தோடு பரிவனை 
செய்யும் நேசத்துரும்பிடமே ..!

ஈன்றெடுத்துபின்  முதன்முதலாய் 
உம்மைக்காணுகையில் ....
வியக்கிறது எம்பார்வை !
தவமெடுதது பெற்றுடத்ததால் 
உம்விழி ஒளியால் ஈர்க்கிறது எம்மகம் !
  

பாடல்

செவ்வாய், 17 ஜூலை, 2012 Category : 0


சரணம் !


நெசமா,,,நெசமா ,,,தூங்கயிலே ....
கண்ண ரெண்டும் மூடிக்கிட்டேன்
இருட்டு மூழ்கி சூழ்கையிலே
மனசு மட்டும் தூங்கலையே ...!

இதயத்தில் ஒருக்குருவி கூடுகட்டி இருக்கிறதே ...!
கனவிலே பட்டாம்பூச்சி விண்ணிலே பறக்கிறதே ....!
{நெசமா }

பல்லவி !

எனக்குள்ளே மாற்றங்கள் தானாக வந்திடவே
என் வழியின் மூடியஜன்னல்கள் திறந்து வைத்திடவே!
விழியோரம் விழிவைத்து அவள்வரவை எதிர்காத்திடவே
ஏக்கங்களால் தவிக்கையிலே இமைகள் பூர்த்திடவே ...!

எங்கே ..எப்போ ..?காலம் சொல்லு வரேன் நில்லு
என்னை அல்லு என்னுணர்வுகள் சொல்கிறதே ....!-{எனக்குள்ளே }
{நெசமா}

பல்லவி 2 !

இதுதான் வாழ்க்கையென்று காதல் நூலை திறந்திடவே -பார்த்தால் ...
சுலபமில்லை கடினமென்று ஆகிடவே ...!படிக்கும் பாடம் கனத்திடவே ...!
தினந்தோறும் மனப்பாடம் செய்கிறேன் !
மறந்திடுவேன் என்றெண்ணி .ஏனோ ?உள்ளத்தில் சுமக்கிறேன் ....!

இப்போ ,அப்போ ,எப்போதுமே நினைவுக்கொள்ள-கொல்ல.கொல்ல ...
இல்ல ..இல்ல !இதுக்கற்பனையாக சிறகடித்துச் செல்ல ...!

நான் விழித்துப்பார்க்கைலே ....பூமி மவுனங்கள் காக்கிறதே
இருண்ட உலகத்திலே நிலவும்மட்டும் அழகாய் தெரிகிறதே ..!
வறண்ட நிலத்தினிலே கொடியொன்று புதிதாய் முளைத்திடவே ....!
ஆசை ஊற்றினிலே ...வந்த இரவும் பகலாகிறதே ...!

அங்கே .அப்போ ..!மெய்மறந்து நிற்க ! அவளை பராமரிக்க ....!
தண்ணீரை ஊற்றி உயிரத்தந்து காதலை வளர்க்கிறேன் !
எவர் விழியிலும் அகப்படாமலிருக்க மூடியே மறைக்கிறேன்
தெரிந்தாலும் கவலையில்லை அவளுக்காவே நான் இருப்பேன்

அவளை மறக்க சொன்னால் ,,ஜடமாக நான் இருப்பேன் {இதுதான் } (நெசமா )

நண்பன் உயிரின் இருப்பிடம் !

Category : 0




நண்பனே....நண்பனே பழக்கத்திற்கு அளவில்லையே ...!
அன்பிற்கு அணைப்போட்டால் பண்பாலே உடைப்பவனே !
வழக்கம் மாறாமல் உடனிருப்பான்...விருப்பத்திற்கேற்ப வழி நடப்பான் !
துயரம் நெருங்கினாலும் !விரைந்து தாங்கிப்பிடிப்பான் !

கண்ணீர் சிதைப்பதைக்கண்டால் !கண்களாக இருந்திடுவான் 
இன்பத்தில் சிரித்திட்டால் ,..புன்னகையாக மலர்ந்திடுவான் !
நட்பில் சாதி,மத,பேதமில்லை ஒற்றுமையே ...உணர்த்திடுவான் !
வேறுபாடின்றி பழகுவதால் சகோதரத்துவம் நிலைத்திடுவான் !

கள்ளம் ,கபடம் மனதிளில்லையே ,...ஆதரப்பதில் கருணையில் 
சிறுப் பிள்ளையே !-நட்புக்கு ஏதாவதென்றால் உயிரும்கூட பெரிதில்லையே !
உணவில் உப்பின்றி ஆகிவிட்டால் சப்பாகிப்போவதைப்போல 
தப்பாக பழகநினைத்தால் ஒப்புக்கு செப்பாக செதுக்குபவனே  !

நட்புக்கு உயிருமில்லை ,கொள்ளும் நட்புக்கு இறப்புமில்லை !
இருந்தாலும் உடனிருப்பான் !பிரிந்தாலும் உள்ளமாகிருப்பான் !
தாயாகி ,சேயாகி .கருவாக சுமந்திடுவான் !-வாங்கும் 
சுவாசிப்பில் காற்றாக உள்ளே நுழைந்திடுவான் !

மூச்சு முட்டு பிறக்கையிலே கண்டிருந்தால் துடித்திருப்பான் !
தவழத்தான் பழகையிலே தாய்க்கு நிகராக கண்டிருப்பான் !
நட்பைத்தான் தொடருகையில் பசிக்கூட மறந்திடுவான் !
உறவாக பழகுவதற்கு உள்ளத்தைவிட வேறேதவும் தேவைல்லையே !


என்னருமைத்தாய் !

திங்கள், 16 ஜூலை, 2012 Category : 0


மாதங்களாய் சுமந்து 
சுமையோடு நடந்து 
வலிமையை கடந்து 
வளிமையை இழந்து !

எளிமையோடு பெற்றெடுத்த 
எம்மண்ணை நீயோ ..!
நீ கதற கண்ணீரிட்டு 
உலகத்தை கண்டிடவைத்தவளோ !

இளமையை மறந்து 
பருவத்தை துறந்து 
எம்முயிரை நேசித்து 
உம்முயிரையும் துறக்க துணிந்தவோ ?

உயிரோடு ஈன்றெடுத்த 
கருனையுள்ளமே ....
பாசத்தோடு பரிவனை 
செய்யும் நேசத்துரும்பிடமே ..!

ஈன்றெடுத்துபின்  முதன்முதலாய் 
உம்மைக்காணுகையில் ....
வியக்கிறது எம்பார்வை !
தவமெடுதது பெற்றுடத்ததால் 
எம்மகம் காண்கிறது உம்முகம் !
  

"தாய்மை"!

ஞாயிறு, 15 ஜூலை, 2012 Category : 0


  • அன்பும் ஆதரவும் பெருக்கெடுத்து 
அரவணைப்பாய் உள்ளங்கலிரு உறவாடுகையில் 
புடைத்தெடுத்த பரிமாணம் உருகுளுகையில் 
இன்ப ஆனந்தத்தில் விழும் சிறுத்துளிநீர் !

  • ஓடையில் விழுந்திடுகையில் கற்பநிலத்திற்காகும்  
பாசனை !-அவ்வீ(நீ )ரில் உருவெடுக்கும் விதையாய் 
முளைத்து கருவாகி கனியாக முளைக்கையிலே   
தந்திடும் "தாய்மை"யின் முகவரி !

  • வாசமாய் மணக்கும் உறவுகளில் 
வசந்தமாகும் பெருமை அருமையே !-அகம்
 நிறைத்திடுமின்புறுவள் பெருகிடும் வளிமை 
எளிமையோடு பெற்றெடுக்க தாங்கிடுவாள் வலிமை!

  • இனிமையோடு பெருத்தாலும் பைக்கோனிக்கு   
வருத்தமில்லை ஊசியால் தைத்தாலும் 
இரணக்காது கனத்தே சுமந்துடுவாள் 
தாய்மையென்ற  நினைப்போடு சுமை !

  • நாட்கள் முடிகையில் சிசுவாய்
பெற்றுடதால் பாசத்தின் வெளிபாடு 
வெளியேறிவிடும் சிசுவாய் நாக்கூறும் 
அவள்கொண்ட உறவுக்காகுமது  ஆதாரமே "தாய்மை "!

கவிதையின் சிறப்பு !

வியாழன், 12 ஜூலை, 2012 Category : 0


கவிதையின் சிறப்பு !








என்றென்றும் மாறா குறையும் 

மனம் நிறைந்த பொக்கிஷ 
குவியலாய் ...இதயத்தில் 
புதையலாகிருக்கும் நிறைந்த பெட்டகம்!

இளமைக்குள்ளும்,முதுமைக்குள்ளும் 
ஈரெடுத்து எண்ணத்தில் செடிக் ,
கொடியாய்..!பீரிட்டு முளைக்கும் !
அழகு மொட்டாய் தோற்றமளிக்கும் !

மங்கையின் தலையிலே மெருகேறி 
உள்ளத்தில் குடியேற இதயம் 
பூக்க தரும் ஆனந்தம் கற்பனையில் 
சிறகாக விரிக்கும் மலரின் இதம் !

காணும் கண்களுக்கு கவர்ந்திழுத்து 
உணர்வுக்   குவியலின் தீண்டுதல் !
பதுமையாய் தொட்டு தாலாட்டி 
உறங்க வைத்து அழகு பார்ப்பது!

அதையேட்டிலே விடையாக சொல் 
நடையாக புதிர் எழுத்துக்களாய் 
உதிர்ந்த சொற்கள் மவுனமாய் 
விழிகளுக்குள் பிரம்மிக்கும் பிரகாசம் !

தொகுப்பாய் தலைனிமிருகையில் சிறப்பாய் 
நிலையாகும் வெண்பாக்கள் பண்பினை 
விளக்கும் விளக்கம் அடைமொழியாய்...
எழுச்சி பொலிவுத்தரும் பதிவு !

படைப்பாளனுக்கு  நெருங்கிய உறவாகி 
சிந்தனையில் தவழ்ந்து ,நிமிர்ந்து 
மழலை மொழியின் இனிமை !
எதகமொனையோடு அடங்கிய அடக்குமொழி !

வலிமையோடு இளமை மாறாத 
புத்துணர்வு எழுத்தணிவகுப்பு
தந்திடும்  வியப்பு கருத்தாகும் 
வே{ர்}(றொ)ன்றுமில்லை இதனின்தனிச் சிறப்பு ! 


தேடாது கிடைத்த தங்கச்சி !

திங்கள், 9 ஜூலை, 2012 Category : 0



Profile Picture

கூடிப்பிறந்த உறவில்லை 
அவள் நாடிவந்த உறவு !
தேடியப்போது கிடைக்கவில்லை 
வருந்தி கிடைப்பாளா ?
நினைத்தப்போது வந்தவள் !

களைப்பாய் ,பிழைக்க ,தணிப்பாய் 
பிரிவிலும் தரும் ஆறுதல் 
எழுத்துக்களாய் வந்து இளைப்பாறுதல் !
என்னின் முகமறியா தங்கச்சி !
சிந்தனையின் எழிலாகிய அருங்காட்சி !

கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பாள் !
அறிவுரைக்கூரும் எழுத்துகளுக்கு 
பதிலளிக்க மறுப்பால் ..!இவள் !
சிறிய குழந்தை மனம்படைத்தவள் !
என்னுடைய உள்ளத்தை இன்பத்தால் துடைத்தவள் !

பார்ப்பவர்களுக்கு ரசிக்கதூண்டும் 
குறும்பு மழலைப்பேச்சு ஏடுகளில் 
பதித்த பூக்கும் முகம் பார்த்து ரசிக்கையில் 
தவழ்ந்து ,நிமிர்ந்து எனக்கு !

அவள் என்னை அண்ணனென 
அழைத்தால் உலகத்தைவிட 
கிடைக்கும் பேரின்பம் 
துன்பம் ,மறந்து ..கிடைக்க ..
அதுவாகும் உறவு பிம்பம் !


வளைகுடா பயணம் !

Category : 0


முடி{யி}(இ)ல்லா ....
நாட்டுக்காக !
முடி{யெ}(எ)டுத்த !
மொட்டைக்கதைதான்
 வளைகுடா !

வீட்டை மறந்து 
நாட்டை துறந்து !
விமானத்திலேறி ...
காற்றிலே பறக்கவிட்ட 
உறவு !

தவிக்கும் தனிமையிலே ...
மேற்கொண்டப்பயணம் !
இனிக்கும் அப்போது !
வலிய வாடுகையில் 
இருகும் உள்ளம் !

பாலையிலே ...பாவிகளாய் ...!
உணர்வை உருக்கி 
அடக்கிய நினைவு 
கைகொடுக்கும் தேடிய 
செல்வம் கிடைக்கையில் !
பஞ்சத்தினாலும் ...வறுமையினாலும் 
தொலைத்திட்ட வாலிபத்தை 
முதுமையோடு விழிக்கையிலே 
உணர்த்தும் !தேடியப்போது 
தொலைத்தது வலிபமென்று!

உறவு !{அ}நட்பு !{அ }தாலி !

சனி, 7 ஜூலை, 2012 Category : 0

பலமானக் கயிறா....
வளமானதா...பரிசோத்தித்து 
பெற வேண்டும்.!-பெற்றப்பின் 

கயிறு அருந்துவிட்டதென்று
வருந்தி மீண்டும் முடிச்சுப்போட 
முயற்சித்தாலும்  முடியாது !

அதை துண்டிக்கும்.. முன்பே 
பார்த்து வாங்கி இருந்தால் 
அருந்திருக்காது! 

வியாழன், 5 ஜூலை, 2012 Category : 0

நிலவுப்பாட்டு !

  • அவப்பார்க்கையில அழகா ..!
நடக்கையில தெரிஞ்சா....!
மனசுக்குள்ள பதிஞ்சா ...
மெதுவாக நுழைஞ்சா ..!
மெல்ல மெல்ல...!

  • அவத் தேவதையா இருந்தா ...
புதுக் கவிதையா பிறந்தா ...!
நல்ல கற்பனைக்கு மருந்தா ....!
கனவில ...வளர்ந்தா....!
செஞ்சா...தொல்ல தொல்ல ...!

  • அந்த நிலவப்பார்த்து ரசிச்சா ...!
தனிமையில தவிச்சா ...!
சிந்தனையில நடிச்சா....
நாவிலப் படிச்சா....
என்னத் தப்புச் சொல்ல...!

  • உள்ளுக்குள்ள உலர்ந்தா .... 
இதயத்தில உருவமாகி தளர்ந்தா ..
அங்கதத்தில கலந்தா ....
காதலாகி மலர்ந்தா....
அதுவோர் வருத்தமே இல்ல !

  • நொடி விழியில வந்தா...
வழி நொடியில மறைஞ்சா...
உள்ளத்தில கடைஞ்சா....
மெழுகாக்கி உருக்கி கிட்டு 
நினைவா கரைஞ்சா ...அன்புத்தொல்ல !

  • பகலில் தேடிப்பார்த்து நொந்தா ...!
பொழுதை முடிக்க வந்தா...
கண்ணை பறிக்க நின்றா ..!
கொஞ்சிடும் ஆகினா கண்றா...!
வியக்க வைத்தவளே ...!

  • அவ மவுனமா சிரிச்சா ...
உலகத்திற்கே வெளிச்சம் ...
கோபப்பட்டு மறைஞ்சாலும்
தேயப்பிரையாகி தரும் வருத்தம்   

  • இறங்கி பூமியில நடந்தாலும் 
ஆனந்தத்தை தரும் உறக்கம் !
ரசிப்பவனுக்கு கவிஞனாக்கி 
வளர்ப்பதுதான் வழக்கம் !

  • இவ இயற்கையின் வரமா....!
செஞ்ச சிர்ப்பியின் கரமா !
அதனைவிடத்தரமா ...
எதளையும் குறையுமில்ல ....
இறைவனின் படிப்புல குற்றமில்ல....!