Home > டிசம்பர் 2012

டிசம்பர் 2012

புதுவுறவு !

திங்கள், 31 டிசம்பர், 2012 Category : 0


அண்ணனென்ற 
அழைத்த 
நொடியிலே வெடித்து 
சிதறியது 
இதமான புன்னகை 
பூர்த்து 
குலுங்கியது ஆனந்தம் 
இடைவேளியை 
விடையளித்து புதுவுறவு 
எழிலானது 
வலுத்திட்ட இனியதோர் 
நட்பு !

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !

Category : 0


தமிழுக்கு இல்லாத 
புகழ் தமிழனுக்கா 
தித்திக்கும் ?மொழிகள் 
உமிழ்ந்தாலும் விதையாகி 
அங்கும் சிறப்பிக்கும் 
கற்பிக்கும் எங்கும் 
தமிழ் எதிலும் தமிழ் !
இருக்கத்தானே எத்தனைக்கும் !

கால் பந்து

0


ஓடிப்பிடித்து .....
பழகி .....
ஆடி அடக்கி 
உதைத்தப்போதிலும் 
உதைவாங்கியே 
பணிந்து கடக்கும் 
கால் பந்து !
தடத்தில் தோய்ந்தே 
இருப்பின் 
தளத்தில் விருப்பத்து 
நீத்துப்போகும்
உயிர்பித்து சத்து 
கிழிந்துமிட்ட 
ஒட்டோடு இறுதிவரை 
நார் நாராய் 
பிய்யாதவரையில் 
தொடரும் விளையாட்டு !


பல உள்ளீடு கருத்துள்ளதை பதிவிடுகிறேன் .
அறியா  நோக்கர்களுக்கு விளக்கப்படும் !

பிடிக்காது!

Category : 0


ஆங்கிலமே எனக்கு 
பிடிக்காது...............
கற்பிக்கவும் கற்கவுமில்லை ! 
அறியாத பாசைக்கு 
அலங்கார ""வாழ்த்து ""
ஒலிக்கிறது பரிதவிக்கும் 
வாழ்க்கைக்கு இதுவல்ல
விடியல் !-இழந்த துயரத்திற்கு 
குலங்கள் தரும் ஆராதனை !

வெற்றி !

Category : 0

பிரிவென்பது 
பலமல்ல !
ஒற்றுமையென்பது 
பலவீனமல்ல !
சற்று உணர்ந்து 
நினைவுக்கூர்ந்தால் 
பற்று வாழ்வதில்தான் 
கிடைக்கும் எளிமையான 
வெற்றி !

தன்னம்பிக்கை !

Category : 0


சோகத்திலும் துன்பம் 
துயரம் வருத்தத்திலும்
நீங்கவில்லை ................
எம்பெருமானார் கடந்த 
ஆகாலப்பாதையைவிட 
இது அகலமில்லை ............!

சகோதரத்துவம்

Category : 0

பகைக்காதப்போது 
தவறு எப்படி 
வகிக்கும் ?-உதட்டால்  
மொழிவதற்றது 
மன்னிப்பு வழங்கிட 
உள்ளத்தோடு மாறாத 
நட்பென்றும் அன்புடன் 
நிலைத்திருக்கும் 
நல்ல சகோதரனாக 
விழிகளில் பிரதிபலிக்கும் !

உயரியது

Category : 0

ஒருமுறை விழியில்
 மறு 
பதிவு மனதில் 
சிந்தையில்
 நினைவோடு வழியோடு 
ஓட்டம் 
எண்ணங்களில் 
விந்தையில் துளிரும் 
கனக்கும் 
கனவோடு சுமந்து 
பயணிப்பவன் 
 நென்னுடன் பயணித்தோரை 
எளிதில் 
மறப்பதரிது உயரியதென் 
பாங்கு  !

தலைப்பற்றது !

Category : 0

ஒதுங்கியது
காதலகளின் 
க{ரை}றை)யில்
அலைமூழ்கடித்த
காதல்  கப்பல் !

தலைப்பற்றது - கவிதை !

Category : 0

ஓலைக்குடிசைக்குள்
வின்மீன்கள்
ஜன்னலில் தெளிர்க்கும்
நட்சத்திர கதிர்கள் !

திரும்பிட வித்திட்ட பயணம் !

ஞாயிறு, 30 டிசம்பர், 2012 Category : 0

பேருந்து வரைந்த ....

மடலில் பாலியல் 

வன்புணர்ச்சி பயணம்

நிறைவடைந்தது

இறங்குமிடம் 

மரணம் ஏறியது 

நீதிகள் இறங்கியது 

கற்பழிப்பு !


எதார்த்தம் !

Category : 0



கோபத்தால் 
சிலருக்கு 
முறிவடையும் 
நாவு 
விரிவடையும் 
பிரிவிலும் 
மேவு !

மதிப்பு !

Category : 0


நடத்தையால் 
வீழ்ந்துவிடுகிறது 
 கற்பு !-தான் மட்டுமே 


அழகு சிறப்பென 
மதர்ப்பில் வாழ்வில் 
மிதப்பவர்களால் 
குறைந்துவிடுகிறது
 பெண்களின் மதிப்பு !

ஏமாற்றம் !

Category : 0


ஆசை
அரியனையேறிட
 அறியாது நுழைந்த
ஆர்வம் !


கற்பனை உலகில்
தத்தளிக்கும்
பயணம் .....

ஆகாயத்தில்
 விமானம் மிதக்கிறது
கண்ணீரில்............

கவிழ்ந்த கப்பல்
மூழ்கி தவிக்கிறது
  கனவு நொறுங்கியது  !

கற்பனையாய்
ஏமாற்றத்தில்
நோக்கிட்ட வாழ்க்கை  !

ஆவல் !

Category : 0

ஆவல் !

இளமைக்கு 
விழைந்த  கவிதை 
அறியாமைக்குள் நுழைந்தது 
தொத்திட்ட காதல் !

முளைக்கையிலே 
 சலிக்காது பதிவேட்டில் 
வளிமையோடு அரங்கேறுகிறது 
பதியும் எழுதுகோல் !

அம்மா !

புதன், 26 டிசம்பர், 2012 Category : 0


அம்மா !

தானெரிந்து 
கண்ணீரில் 
அகல் மிதந்து 
திரிச் சுமந்து 
உலர்ந்து 
தன்னையதில் 
இழைத்து !

உலைத்து 
விரிந்து சுகமிழந்து 
வாழும் நாளும் 
உறவின் பாலம் 
இருளை நீக்கும் 
தீபம் !

இவளைப்போலொரு 
ஜீவன் உலகில் 
யாதும் சாதும் 
சாமம் இவள் 
நடக்கும் பாதம் 
ரேகை பதிவில் 
துயர்வு இருந்தும் 
சோகத்திலும் 
சாதனை எழும் !

அமமாயென்றாலே 
அமைதி வாழும் 
அவலில்லையெனில் 
இல்லம் இருளில் வாடும் !

சிறந்ததொரு முடிவு !

திங்கள், 24 டிசம்பர், 2012 Category : 0


ஒவ்வொரு பாதைகளிலும் 
வலிகள் தெரியும் கடந்து 
சலித்துப்போன பாதை 
முடிவானது சரியானதல்லவென  
கனத்து திரும்பும் !

மருந்து இருந்தும் 
உண்ணாது இருப்பது 
அதிகரித்திடும் 
நோய் !
சிறுக சிறுக கறைத்திடும் 
இழைத்திடும் 
ஆரோக்கியம்  !

விரும்பியவை கிடைக்காதாகிவிட்டால் 
காலத்தின் தவறு காதல் மட்டுமே 
வாழ்க்கையல்ல ! - வாழ்க்கையின் 
ஒருப்பகுதியே .....

எது சரியென
சிந்திப்பதும் சிதைந்துப்போவதும் 
அறிவாளியின் வாழ்க்கையிலொரு  
சிறந்ததொரு  முடிவு !

இன்றைய அவல நிலை !

Category : 0


நடுத்தெருவில் 
கற்பழிப்பு 
கடைத்தெருவில்
 உயிரிழைப்பு 
மதுவகத்தில்
 விபச்சாரம் 
பேருந்தில் 
பலாத்காரம் 
மருத்துவமனையில்
 அனாச்சாரம் !

இதுதான் நமது 
கலாச்சாரமென 
நினைக்கையில் 
வெட்கப்பட்டு 
தலை கீழ்குனிய 
வேண்டிதாயிற்று !

காந்திய தேசமென 
உரக்க சொல்லும் 
பிரச்சாரம் அரசியல் 
வாதிகளின் சாதனை 
புகழாரம் !

பகலும் குற்றவாளிக்கு 
இருளாக தெரியும் 
நீதி மன்றங்கள் 
உறக்ங்குகிறது குற்றங்கள் 
எழுகிறது நிம்மதியோடு 
வாழ்கிறது !

ஒற்றை வழி

Category : 0

வெற்றியென்பது நிரந்திரமல்ல !தோல்வியின் முதற்படியாகும் வெற்றியென்பது அது முடிவல்ல 
தோல்வியின் 
அடுத்தப்படியாகும் முயற்சியே துவக்கப்படி 
தன்னம்பிக்கைதான் 
சரித்திரத்தின் 
ஒற்றை வழி !!

அறிவுரை !

Category : 0

அறிவுரை !

மீற நினைப்பது 
என்னையல்ல உன்னை !
எச்சரிப்பது
 என்கடமை அது மடமை 
நினைத்தால் 
விளைவு உனக்காகும் நாளும்
 துயரம்  
கசந்துப்போகும் வசந்தம் 
முடங்கிடவாகும் 
வாழ்க்கை  !

தன்னம்பிக்கை

Category : 0

கொழப்பத்திலாழ்கிறப்போதும் 
வருத்தத்தில் 
சிதைகிறப்போதும் நேசிப்பவர்களிடத்தில் 
மனம்விட்டுப்பேசி 
பாரத்தை இறக்கு சோகம் தன்னாலவிழிலும் 
தன்னம்பிக்கை உனக்குள் 
இன்பம் சுழலும் துயரம் கழலும்  போதனை 
வாழ்க்கைக்கு 
கடக்கவாகும்  பெரும் சாதனை !

பெருமிதம் !

Category : 0

பிறக்கின்றப்போதும் 
பிறசிவிசிக்கின்றப்போதும் 
அம்மா என்றுதான் 
 அழுகிறது குழந்தை!
தாயின் உன்னதம் 
அறிந்தால் உலகுக்கு 
பெருமிதம் !

குழந்தைகள் !

சனி, 22 டிசம்பர், 2012 Category : 0

சில்லறை 
சிரிப்பில்தான் 
கல்லறையாகிறது 
கவலைகள் நாளும் 
பொழுதுமேணி 
இன்பமளிக்கும் 
குழந்தைகள் !

வேண்டும் !

Category : 0


உறுதி உள்ளத்திலெழ வேண்டும் 
நம்பிக்கை நடையில் பழக வேண்டில் 
முயற்சிகள் ஆக்கத்தில் பதிய வேண்டும் 
உமது வெற்றி நாளை வரலாறு சொல்லும் !

தவறு !

Category : 0



நீதி நீத்துப்போகும் 
நீதம் பொய்க்கவாகும் 
அநீதங்கள் ஊக்கலாகும் 
வாழும் கற்பு வீழும் 
இருட்டில் நிலவு 
விரும்பிடும் குருடர்களின் 
பார்வை கயமைக்கு 
சுதந்திரம் அனுபவிக்கும் 
இருளுக்கு விடுமுறை !

உண்மை !

வெள்ளி, 21 டிசம்பர், 2012 Category : 0

இருளைப் போர்த்தி 

என்னை சாய்க்கப் போகிறேன் 
போர்வைக்குள் வெளிச்சம் 
எழுப்பாத வரையில் 
கனவாகும் உயிர் 
சடமாகும் அங்கம் !

தனிமையிலும் இனிமை !

Category : 0



தனிமை
 வாழ்க்கை யுகமாகும் 
நினைக்கையில் 
சுகமாகும் சுமக்கையில் 
நெருக்கத்தைவிட 
அன்பு நெருங்கிடவாகும் 
இணைத்திடும் தூரம் !

ஏமாற்றம் !

திங்கள், 17 டிசம்பர், 2012 Category : 0

எழுத்து 
அழகாகத்தானிருக்கும் 
படிக்க 
அறியாதவருக்கு 
கருத்து 
புதைந்திருக்கும் 
உணர்வை 
உணராதவருக்கு !


இயற்கையின் சாதனை உலகுக்கு வேதனை ""

வியாழன், 13 டிசம்பர், 2012 Category : 0

இயற்கையின் 
சாதனை 
உலகுக்கு வேதனை 
பாழாப்போன 
நோய்க்கு 
பல்வேறு குடிகள் 
தந்து 
அழிக்க வந்த 
இயற்கைக்கு
அழகு
பெயர்கள் சுனாமியாய் 
சீறி 
மனிதனை மீறி 
தானே
அழித்திட்ட வரலாறு
நில
புயல் தடம்
புரண்டும் கரை
தாண்டிப்போனாலும்
மண்ணை
விட்டுச் செல்லவில்லை
அணு அணுவாய்
சோதித்து
மர்மமாய் வந்து 
தர்மமாய் 
காய்ச்சல்களை தந்து
சாதித்தது இயற்கை 
தவிப்பால் 
மாண்டுப்போகும்
உயிர்கள் !

பாசாகிப்போன காதல் """"'

Category : 0

பாசாகிப்போன காதல் 
சாதிக்கு வந்தது 
சொல்லாமலே 
சுதந்திரமாய் 
விண்ணில் பறந்தது !

கூடுகட்டிய 
மரங்கள் கூடாரமாய் 
மிதக்கிறது 
கண்ணீரில் தத்தளிக்கும் 
மரங்கள் 
வேரோடு புயல் 

சாய்த்து
சரிந்து நிற்கிறது !
வேதனையோடு
விதைத்து
வளர்த்து விட்டால்
உறவை...

வெட்டி சரித்து
ஓடும் கிளைகள்
ஆதரவற்று 
காணாத இடத்தில்
இடம்பெயர்ந்து 
துளிரும் !

குடியமர்ந்து 
வாழ்கிறது 
அனாதையாக
புரிதளில்லாத
வாழ்க்கை புவி
ஆள்கிறது உறவை 
துண்டித்திட்ட 
காதல்  !

விசுவாசம் ""!

Category : 0

விசுவாசம் ""!

அன்பினை 
இதயத்தினுள்ளே
புதைத்தேன்
கவலையால்
இருகிப்போனது
மறக்கடிக்க
பிளந்த
அவல சூழ்நிலை
எனக்குள்ளே
உருவானது

நீ ..என்னுடன்
இருப்பதாகத்தான்
நினைத்தேன்
என்னையே என்னை
அறிகிறப்போதுதான்
தொலைந்திட்ட
நினைவுகளை
எண்ணி தவித்தேன்

புதைத்து
வைத்திருந்ததொன்று
இழந்துவிட்டோமே
நல்லுறவை
மயிரிழையில்
துறந்திட்டோமே
கொல்கிறது
ஏக்கங்கள் !



நீ வித்திட்ட
பாசம் உன்னைத்
தேடி அலைகிறது
என்றைக்காவது
ஒருநாள்
கிடைத்துவிடுவாய்
நம்பிக்கையில்
காலம் கழிகிறது
வருத்தத்தோடு
தேடி அலைகிறது ..!

அவதி !

Category : 0

அவதி !

நம்மிடமில்லாத 
ஒன்றை மிகுதியாய் 
கிடைப்பதை விட 
இருப்பதொன்றை 
தொலைத்திட்டால் 
நம்மால் ஏற்படுகின்ற 
அவதி ஏற்புடையற்றது 
நிம்மதியை
தொலைத்த
அமைதி ""!

புதுமை ""!

Category : 0

புதுமை ""!

அறிந்ததை 
மொழிவதும் 
மறந்திடுமோ 
என்றெண்ணி 
பதிவதும் 
கவியாகும்
ஏட்டிற்கு 
விளங்களையாம் 
காகிதம் 
விளக்கிட 
சொல்கிறது 
மொழி 
மறந்த தமிழம்
மறவத் 
தமிழனின் புதுமை 
அருமையிலும் 
அருமை !

வேதனை ""!

புதன், 12 டிசம்பர், 2012 Category : 2

வேதனை ""!

சாதனையாளர் 
எவரென்றறியாது 
ஏற்றிட்டொருவனை 
உயர்த்தியே .......
புகழாடுகிறது 

தன் பிறப்பை 
மறந்து பெற்றிட்ட 
தாயை துறந்த 
மானுடம் இன்புற்றே 
கொண்டாடுகிறது 
தீவிர இரசிகனென்று 

குடும்பம் மறந்த 
குடிமகன் குடியை 
இழந்தான் பொழுது 
போக்கிட்ட திரை 
விலகவில்லை 

வறுமையில் வீழ்ந்த 
போக்கு இருளை 
நீக்கவில்லை
வாழ்க்கையில்  
எரியாத விளக்கு 

வளிமையிழந்து எரிகிறது
 குடும்ப சுமையோடு 
கலாச்சார சீரழிவில் 
விரையமாக்கும் 
இளமை  !

""மொழி ""

செவ்வாய், 11 டிசம்பர், 2012 Category : 0

"""மொழி ""

கிளைக்கு .....
புலம்பெயரும் 
அழகு "கிளி "
கனிந்த தமிழ் 
மரத்து கிளையில் 
அமர்ந்து மொழிந்திட 
பணித்தது 
குரல் செம்மொழி 
இனித்தது ....
மலர்ந்த இதழில் 
நுனி நாவில் 
சுரக்கும் 
அமிர்த மொழி 
இலையாய் 
சரிந்தது 
நிலையாய் கிள்ளை 
மொழி செவியில் 
சதிராடியது 
கிள்ளி விழுந்த 
மொழியில் 
உடைந்த "பாசை "
அள்ளியெடுத்து 
நடையில் 
துள்ளி வழங்கியது 
கடைவிழியில் 
வந்ததோர் கவிதை !