இயல்பு !

ஞாயிறு, 9 ஜூன், 2013 Category : 0

இயல்பு !

அடக்கம்... அன்பு...
பொறுமை ...கருணை !-இவை
யாவும் நற்பண்பினை
காட்டும்  உதவும் ....
தற்பெருமை உன்னுளடங்கிய
நற்குணத்தை வீழ்த்தும் !

வரம் !

சனி, 19 ஜனவரி, 2013 Category : 0


  • குறும்பிழைய
    அவலடம்பிழல
    ஆவலோடு நச்சரிக்க
    எத்துனைக் காலம்தான்
    அவளுக்காய் காத்திருந்தேன் !

    எச்சரிக்கை விடுத்து
    அடித்து உதைத்து
    ஆடி ஓடி விளையாடி
    எத்தனிக்கையில் எவ்வளவு
    சுகங்களிழந்து தவிக்கிறது !

    இந்த சகோதரன்
    கனவினை நினைவாக்க
    அர்பணித்த தங்கச்சி
    பாசத்தை உருகி பருகி
    என்னைத் தந்தாள்
    அன்பின் புரட்சி .........
    வாழ்க்கைக்கு மகிழ்ச்சி !

தங்கச்சி !

Category : 0


  • எனக்கே 
தெரியாத 
பாங்கு 
அவளுக்கே 
உரியப்போக்கு !

எதையும் 
சொல்லாமல் 
செய்வது ....
தயங்காது 
துணிந்து 
எழுவது ...!

அடம்பிடிப்பது 
அடிமையாவது 
அமைதியாவது ..
அரவணிப்பது 

திட்டினால் 
கோபிப்பது 
சினுங்கியே 
அறிவுரைப்பது 
தானழுவது 
பிறரை 
அழவைப்பது 1

இனிமை 
அவளின் 
மகிமை 
கிறுக்கனுக்கு 
கிடைத்திட்ட 
அற்புத எழுத்து 
தங்கச்சி !

மொழிப்பற்று !

புதன், 16 ஜனவரி, 2013 Category : 0


என்னினம் 
தமிழில்லை எவராவதுரைப்பின் 
சினம் 
பொங்கியெழும் விழையும் 
வீரமொழிப்பற்றினை 
 மலையாகிருப்பினும் வெடிக்கும்
தகர்த்ததை 
துரும்பாக்கியே மண்ணில் 
விதையாய் 
பதிவித்திடும் முளைத்து 
 செழிய 
அதில் பூர்த்து ...............
எழிலுதிரும்  
 மொட்டு கக்கும்
உண்மை
வியக்கம் அகிலத்திற்கு 
நெறியினைத் விடுத்து 
திருத்தும் !

கண்நீர் தூறும் கவிதைகள் ......!

திங்கள், 14 ஜனவரி, 2013 Category : 0



கண்நீர் தூறும்
கவிதைகள் ......!

இரு விழியொரு பார்வை 
"கரு "வழியொன்று ...!
சொல்லுமின்பம் நொடியில்
நெடுதூரப்பயணம் ....!

துகள் விழியில் கனவு 
இதயத்தில் சிந்தனை நடையில்
பொதி வந்தனையாய் ...

அறிவு ஊற்று நினைவோடு 
உருகி எழுதுகோலின்
மையில் வேதனை !

கலந்து காகிதத்தில் கண்ணீர் 
பதிவித்து போதித்தது சாதனை !
பிரிவு விலகியிருக்கிறது பரிவு 
நெருங்கியிருக்கிறது காதலர்களுக்கு
வலிகளுண்டு தோல்வியே...இல்லை !

அன்புவித்த நேசத்திற்கு
வளிமை ஆயுள் வரையில் ......
"வெற்றி -யே "காதல் !