"வாழ்க்கை பயணம் "

வெள்ளி, 8 ஜூன், 2012 Category : 0


"வாழ்க்கை பயணம் "
வெயிலுக்கு சாயுகின்ற
நிழலும் !-மழைக்கு 
ஏந்துகின்ற குடையும் !
நிழலுக்கு குடையாய் 

இருக்குமெனில் ....!

ஒரு மனிதனை 
சுகமான பயணம் 
மேற்கொள்ள இலகுவாகும்... 
இடம் நிழற்குடை  !

பயணம் விரும்பியது 
பேருந்தாக இருப்பின் ..!
சிரம் பணிந்து
செல்ல வேண்டும் !

ஏற்றம் ஒருப்பக்கம் 
இறக்கம் மறுப்பக்கம் 
இருக்கும் நினைத்தால் .....
விழுப்பமாகும் வாழ்க்கை !

ஏழை வயோதிகரின் குமுறல் !

Category : 0

தள்ளாடும் வயது 
முதுமையை சுமக்கும் 
வறுமை அல்லாடுகிறது !

"இருள்"மூழ்கடித்த 
குடிசையில் எழிலாய் 
மின்னுகிறது நட்சத்திரம்!

மூட்டைபூச்சி !

புதன், 6 ஜூன், 2012 Category : 0

அழக்கு நிறைந்த 
இடத்தில் !துணிந்து 
பிறப்பான் !-விழிக்கும் 
வரையில் மறைந்திட 
மறுப்பான் ,-கரத்திலகப்பட்டு 
உயிரையே.... துறப்பான் ! 
தூய்மையாகாத வரையில் 
 போராடும் போர்வீரன் !

மனிதநேயமிழந்து -நீதியை தேடும் சாதி !

புதன், 9 மே, 2012 Category : 0


மனிதனின் வேற்றுமையில் 
இனம் பிறந்தது !-வீதிதோரம் 

"உயிர்பித்தது  சாதி "!-"வழிப்படும்
தளங்களாகும் மனித "குலங்கள்"!

உயர்ந்தது எந்தமதம் ?
நிருபிக்கும்  "வன்முறை "!

போராடும் "மதவாதம் "
உருவாகும் தீவிரவாதம் !

திறமை!

செவ்வாய், 24 ஏப்ரல், 2012 Category : 0

திறமை!

நாம்காலத்தை கண்டு வியக்கும்முன்
காலம் நம்மைக் கண்டு வியக்கட்டும் !
திறமைக்காகும் அதுப்பயிர் மென்மேலும்
வளரப்பாராட்டு "அதுவாகும் உரம்"!

தத்துவம்!

கற்பனை கலந்தால்
மட்டுமே கவிதை
சிறக்கும்.!-உண்மை
இருந்தால் மட்டுமே
வாழ்க்கை மணக்கும்!