தேடல் !

புதன், 3 அக்டோபர், 2012 Category : 0


கனவைக் கண்டேன் 
விடிந்துப்போனது 
இரவு !
கற்பனையில் மிதந்தேன் 
இ(சு )ருண்டுப்போனது
 பகல் !

எதிர்நோக்கும்


 விடியலையும் தொலைத்திட்ட 


உறக்கத்தையும்
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
வாழ்க்கை 


நிம்மதிக்காகும் நாட்கள் !

கவிதை

Category : 0

மங்கையின்  மீது 
மோகத்தால்
 ஆசை பிறந்தது 
ஆர்வத்தில்
 கிறுக்கினேன் கவிதை 
உதிர்ந்தது 
வேகத்தில் காதல்
விவேகமானது 
வழுக்கி விழுகையில் ....

காதலி 


தொத்து 
நோயானது 
பிரிவு 

கழுட்டிவிட்டு 


போனதால் 


மாட்டிகொண்டது
கவிதை 


பொய்த்துப் போன 

உயிராய் 
கனவுகளில் "'மெய்க்கவானது 

ஏட்டில் 


ஊய்த்த எழுத்துக்கள் !

படைப்பு !

Category : 0


ஓடத்தை தவிர்த்திட்டேன் 
இறங்குவது குட்டையென்று 
துணிந்தே தழைத்திட்டேன் 
குறுகிய வட்டமென்று !

இறங்கியப் பிறகுதான்
உணர்ந்தேன்....................
நீந்துவது பெருங்கடலென்று !

அதில் மிதக்கும்
சிற்றட்டையானாலும்
ஊறியே கரையொதுங்கும்
சுரக்கும் நீராகும் தேன் !
படைப்பிலாகும் அமிர்தம் !

பெண் சிசு

Category : 0

குழந்தை சிரித்திட 
இவளும் 
சிரிக்கிறாள் வலிமையோடு 
சுமந்திட்ட 
பாரத்தை 
மடியேந்தி விழிகளுக்குள் 
ஈரம் 
நனைத்து ஆனந்தத்தில் 
மலர்ந்திட்ட 
பெண் சிசுவாக
 தாய் "!

பிச்சை !

Category : 0

கையேந்தியும் 
தட்டுகளுக்கு வாய்த்திடும் 
துட்டுகள் !
பிழைத்திட வழி 
வகுத்திடும் 
முதுமை உயிராகும்
சரியும் 
வாழ்வுக்கு  இளமை
பிழைப்பாகும்
உழைக்காதவனுக்கு 
காக்கும்  பிச்சை !