விசுவாசம் ""!

வியாழன், 13 டிசம்பர், 2012 Category : 0

விசுவாசம் ""!

அன்பினை 
இதயத்தினுள்ளே
புதைத்தேன்
கவலையால்
இருகிப்போனது
மறக்கடிக்க
பிளந்த
அவல சூழ்நிலை
எனக்குள்ளே
உருவானது

நீ ..என்னுடன்
இருப்பதாகத்தான்
நினைத்தேன்
என்னையே என்னை
அறிகிறப்போதுதான்
தொலைந்திட்ட
நினைவுகளை
எண்ணி தவித்தேன்

புதைத்து
வைத்திருந்ததொன்று
இழந்துவிட்டோமே
நல்லுறவை
மயிரிழையில்
துறந்திட்டோமே
கொல்கிறது
ஏக்கங்கள் !



நீ வித்திட்ட
பாசம் உன்னைத்
தேடி அலைகிறது
என்றைக்காவது
ஒருநாள்
கிடைத்துவிடுவாய்
நம்பிக்கையில்
காலம் கழிகிறது
வருத்தத்தோடு
தேடி அலைகிறது ..!

அவதி !

Category : 0

அவதி !

நம்மிடமில்லாத 
ஒன்றை மிகுதியாய் 
கிடைப்பதை விட 
இருப்பதொன்றை 
தொலைத்திட்டால் 
நம்மால் ஏற்படுகின்ற 
அவதி ஏற்புடையற்றது 
நிம்மதியை
தொலைத்த
அமைதி ""!

புதுமை ""!

Category : 0

புதுமை ""!

அறிந்ததை 
மொழிவதும் 
மறந்திடுமோ 
என்றெண்ணி 
பதிவதும் 
கவியாகும்
ஏட்டிற்கு 
விளங்களையாம் 
காகிதம் 
விளக்கிட 
சொல்கிறது 
மொழி 
மறந்த தமிழம்
மறவத் 
தமிழனின் புதுமை 
அருமையிலும் 
அருமை !

வேதனை ""!

புதன், 12 டிசம்பர், 2012 Category : 2

வேதனை ""!

சாதனையாளர் 
எவரென்றறியாது 
ஏற்றிட்டொருவனை 
உயர்த்தியே .......
புகழாடுகிறது 

தன் பிறப்பை 
மறந்து பெற்றிட்ட 
தாயை துறந்த 
மானுடம் இன்புற்றே 
கொண்டாடுகிறது 
தீவிர இரசிகனென்று 

குடும்பம் மறந்த 
குடிமகன் குடியை 
இழந்தான் பொழுது 
போக்கிட்ட திரை 
விலகவில்லை 

வறுமையில் வீழ்ந்த 
போக்கு இருளை 
நீக்கவில்லை
வாழ்க்கையில்  
எரியாத விளக்கு 

வளிமையிழந்து எரிகிறது
 குடும்ப சுமையோடு 
கலாச்சார சீரழிவில் 
விரையமாக்கும் 
இளமை  !

""மொழி ""

செவ்வாய், 11 டிசம்பர், 2012 Category : 0

"""மொழி ""

கிளைக்கு .....
புலம்பெயரும் 
அழகு "கிளி "
கனிந்த தமிழ் 
மரத்து கிளையில் 
அமர்ந்து மொழிந்திட 
பணித்தது 
குரல் செம்மொழி 
இனித்தது ....
மலர்ந்த இதழில் 
நுனி நாவில் 
சுரக்கும் 
அமிர்த மொழி 
இலையாய் 
சரிந்தது 
நிலையாய் கிள்ளை 
மொழி செவியில் 
சதிராடியது 
கிள்ளி விழுந்த 
மொழியில் 
உடைந்த "பாசை "
அள்ளியெடுத்து 
நடையில் 
துள்ளி வழங்கியது 
கடைவிழியில் 
வந்ததோர் கவிதை !