செவ்வாய், 15 நவம்பர், 2011 Category : 0

யாரவள் ?

முதன் முதலில்
அவளை பார்க்கையில்
அவளழகு
தீண்டிச்சென்றது !

கொள்ளா ஆசையால்
நிறைந்த மனது
கண்கள்
பின் தேடிச்சென்றது !

முன்னே தோன்றிய
மீனாய் அவள் !
சிக்காமல்
கையிலிருந்து நழுவியது .!

தூண்டில் போடும்
விழிகளிரண்டு
வருவதை
எதிர் நோக்கும் பார்வை.!

இளமை !

குழாயில் ...
சீறிப்பாய்ந்து
வந்த தண்ணீர்
வரவில்லை வாடி
நிற்கும் கிணறு .!-பழுதடைந்து
துரும்பாகி நிற்கிறது !
எதற்கும் உதவாத
இரும்பு .!

புதன், 2 நவம்பர், 2011 Category : 0


இலக்கியனின்.... புதல்வன் .... காணும் 5 தாவது  பிறந்தநாள் !
HAPPY BIRTHDAY SON!!!


மகனே ...!
எங்களுடைய   வாழ்வில் ,,,
மங்காது தீப ஒளியாய்..!
தந்து கொண்டிருக்கும் 
மகிழ்ச்சி .!

மனமெனும் ...
நந்தவனத்தில் பூர்த்து !
இன்பமெனும் பூங்காவனத்தில் 
எழில் தரும் மலராய் வகிக்கிறாய் ..!

நாங்கள் பெற்றெடுத்த 
வளங்களில் விளங்கும் 
ஈடற்றச்செல்வனாய் ...
திகழும் புதல்வன் !

இறையருள் பொழிய 
நபி வழியறிய ...!-புதுமை 
கவி மொழியில் ..
வாழ்த்துகிறேன் !

இந்நாள்போல் -எந் நாளும் 
பல்லாண்டு பிறந்த 
நாள் விழாக்களை காண 
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!

எங்களுடைய ...
தாய் தந்தை !
கண்ட கனவை !-தற்போது 
உன்னுடைய ,,,தாய் தந்தை 
காண்கிறது .!

அதை ஏற்று ..
நிறைவேற்ற ...ஏக வல்லோன் !
துணைப்புரிவான் .!- பிறந்த நாள் 
வாழ்த்துக்களுடன் அடுத்த வருடம் 
முன்னேற்றத்தை எதிர்நோக்கும்!

பாசமிகு பெற்றோர்கள் !

இன்று இவ்வார்த்தைகள் 
கடுமையாக  இருக்கலாம் 
நாளை எளிமையாக இருக்கும்!
தன்னம்பிக்கையுடன் ..
உனது பெற்றோர் !

Category : 0



நிலையில்லா வாழ்க்கை !
நிரந்தரமான மண்ணறை.!

கலியுலக வாழ்வு நிரந்தரமல்ல !
மண்ணற வாழ்வே நிரந்தரம் !
வருமுன்னே எதையும் 
கொண்டு வருவதில்லை ..
இறந்த பின்பும் எதையும் 
கொண்டு செல்வதில்லை 
பிறந்தப்போது அறியா குழந்தை  
வளர்ந்தபொழுது ஒரு மனிதன் .-தனிமையாய் 
இறையடி சேர்வோம் .!

இறைவன் தரும் செல்வங்கள் யாவும் 
சோதனையே ...அறிந்திட்டால் 
உன்னைவிட சிறந்தவன் 
உலகிளில்லையே ...!
இருக்கையில் நம்மிடம் 
இருக்கட்டும் நல்ல குணம்  ..
இருப்பதை தந்தால் வள்ளல் 
சொல்லிடும் பல மனம் !

இருக்கையில் போற்றி....
உதடுகள் உச்செரிக்காவிட்டாலும் ..
வாங்கி சுவைத்த நாக்கால் ..
குடல்களும் சொல்லும் 
உள்ளம் மறைத்த உவமைகள்
உயர்வாகி அங்கே நிற்கும் ..!

நீ செய்த தர்மங்கள்தான் 
நரகத்தை வெல்லும் ..!
செய்த நற் செயல்கள்தான் 
சொர்க்க கதுவை ...
திறந்து முன் செல்லும் .!

இறை வழிப்பாதை .. 
இறையடி சேர்க்கும் ..
நபி போதித்த ஞானம் ...
நல் வழிப்படுத்தும் ..!

சிந்திப்போம் ..! தர்மம் செய்வோம் ! நன்மைகள் சேர்ப்போம் !
இறைஞ்சிடுவோம் !அவனை பணிந்திடுவோம் !சொர்கத்தை அடைந்திடுவோம் !
தீர்ப்பு நாளன்று ..சொர்க்க வாயல் ..  நமக்காகும் ...!
சொர்க்க கத வுகள் திறந்து வரவேற்கும் ..!

சனி, 22 அக்டோபர், 2011 Category : 0

பொல்லாதவன்  ஒருவன் !
சொல்லாமல் வந்தான் !
செல்லாத காசை ..-தந்து 
வாக்கை  கொள்ளையடித்து சென்றான் ! ,,


கல்லாதவராய் நாங்கள்..!
கள்ளாமையாச்சு ..-  ஏந்தாத
கரத்தில் பிச்சை ..!
வாய்த்தது சில்லரையாச்சு..!

இல்லாததொன்றை..
முரணாக செய்வான்  ..!
வராததொன்றை முன்னின்று 
வரவேர்ப்பான்  .!நம்பியவரை 
கழுத்தையும் அறுப்பான் !

நுழையாத வீட்டுக்குள்ளே ..
மறைந்து வந்த ஆமை ..!
மாசு அடையவைத்துவிட்டு ..!
வீதியிலேஅறியாமல் போகும் ..!

வரலாற்றில் கண்டிடாதொன்றை
காணவும் வைப்பான்  /!
நிர்வாணமாக்கிய அங்கத்தை யும்
தயங்காமல் காண்பிப்பான்  ,,!

அரசியலுக்கு வந்தால் ...
ஆண்டியாகத்தான் ஆவார் ..!
சொல்லியக்கூற்றை உடைக்க
ரௌடியாகி நிர்ப்பான்  ...!

ஓட்டுப்போட்ட மக்களுக்கு
பாதுகாக்க மறுப்பான்     ,,,!
ரூபாய் நோட்டுக்காக வந்து  ..
\பூட்டையும் உடைப்பான் ..!

தட்டிக்கேட்க போனால் ...
தடியடி விழும் ..!
சண்டைகளிட்டால்   நம் ..!
மண்டைகல்தான் உடையும்..!

விடையின்றி போகும் ...
போக்கு தடையின்றி யாகும் ..!
ஆளும்வரை ஆயிரம்
உயிர்கள் பலப் போகும்..!

 தேர்தலாகும் மறு முறை    ..
ஆடும்வரை ஆட்டம்..- எண்ணுவான் !
பணத்தை இரைத்தால் .
எல்லாமே  விசுவாசத்தைகாட்டும் !

தேர்தலோர் ....
ஆடுக்கலாமாகும் ..!
சூழ்ச்சி செய்தால் ...
போர்க்களமாகும்.. ..!

தந்திரவாதிகளுக்கு
அதுவோர்
மந்திரமாகும் ..!
சமுதாயம்!

 சிந்திக்காமல்
 போனால் ..
ஊரே
சீரழிந்துப்போகும் ...

செயளிழுந்து
செயல்பட்டால் !
பழுதாகிப்போகும்
மனித நேயம்..!
\
நல்லவர்களை
தேர்ந்தெடுப்போம் ..!
சமூகம் முன்னேற
வழி வகுப்போம் !

உண்மைகள்
 வென்றால்
நன்மைகளாகும்
 வீட்டயும்- ,நாட்டையும்Publish Post
அது பாது காக்கும் .!

வெள்ளி, 21 அக்டோபர், 2011 Category : 0

தியாகம்..!(குர்பானி )


இறைவன் நாடினான் !
மனம் கொடுக்க நாடியது
பலி இட்டது மகனை ..
பலி கெடவானது ஆடு ..!