யார் இவர்கள் ?

புதன், 3 அக்டோபர், 2012 Category : 0

கழிசடையென ,,,,,,,,,,,
ஒதுக்கிட்ட குப்பைகள் 
இன்பத்தை பொட்டலம் 
கட்டிய தொட்டில்கள்
மறந்து விட்டன முகவரிகள் !

நாய்க்கு கிடைத்திட்ட
எச்சிலை சோறு ......
வயிறு நிரப்பிடும் !

தொண்டைக் குழி
நனைய ......விரியும்
பஞ்சு மெத்தை !

மெச்சளுக்காய்.....
சுருங்கிடும் விரல்கள்
விரித்திடும் பிஞ்சு விரல்கள் !

தன்னம்பிக்கை !

Category : 0


கண்கள் 
தெரியவில்லை 
மனிதனுக்கு
ஊனத்தொடு 
பிறந்தான் 
கடவுள் !-

செவிக்குள்ளே
ஞானக்கண்ணை
அமைத்தான்
தன்னம்பிக்கையில்
ஒளிரும்
முயற்சி
செவியில்
இருளகற்றும்
ஓளி "!

பஞ்சம்

Category : 0

காலத்திற்கே பஞ்சம் 
விழைத்ததால்...........
தழைந்தது உலகம் 
குறுகியே வாடும்
வறுமைகள் !

பொறித்த குஞ்சுகள்
வரண்டுப்போனது
வாழ்க்கை தரத்தால்
கரத்தால் வயிறகள்
தரம் சுருண்டுப்போகும்
மதிப்பற்ற உயிர்கள் !

கருச் சிதைப்பு !

Category : 0


இன்பத்தின் மோகத்தால் 
பெருக்கெடுத்தது வி(வெ)ந்துநீர் 
சுகமிழுந்த கண்ணீராய் 
பாரத்தோடு சோகமாய் 
கதறுகிறது வயிறு ! 

சிசு உலகத்திற்கு
பாரமானதால் கொசுவாய்
கொன்றிடவே சிந்தனையில்
இரக்கமற்ற மனிதக் "கரு"

அறுத்து உமிழ்ந்திட்ட
மெச்சிலில் துயர்வோடு
வாழ்கிறது அனாதையாய்
தனித்து நிற்கும்
குப்பைத்தொட்டி!

மண்வளம்!

Category : 0


சுரண்டிட்ட வளத்தால் 
வளர்ந்திடும் கட்டிடங்கள் 
நிமிர்ந்திடும் பெருமைக்கு
சொல்லிடும் இல்லங்கள்!

கொள்ளையாகும் மணல்களால்
நிலைக்குலையும் நீராதாரம்
உயிர் வாழ்வதற்கு சேதாரம்
வரட்சியில் வீழ்ச்சியாகும் நிலம் !

பசுமை புரட்சி வேரறுந்தால் பிளவாகும்
அதிர்ச்சியில் வரண்டிடும் உலகம் பூமி
விழிக்காவிட்டால் விரைந்து அழிந்திடும்
உயிரின ஜனனம் மிஞ்சும் ஒன்றே மரணம் !