சாதி கொடுமை

புதன், 10 அக்டோபர், 2012 Category : 0


  • மனித நேயத்தை  
பொசுக்கி
        கொடுமை
சா தீ யை 
          எரித்து 
தீண்டிய தீ 
  • எரித்த சாதி 
காதலர்கள் 
            சக்தியில் 
சாத்தியமானது 
             சத்திய 
சாதனை 
  • நீதி இழந்தும் 
வாழ்கிறது 
             வரலாறு 
காதல் 
                 சோதி !



""அகிம்சை ""!

திங்கள், 8 அக்டோபர், 2012 Category : 0



காந்திய தேசமென்று மேவிட 
உரைத்து சம நீதி சமயம் 
கற்பித்து மனிதன் கூடி வாழ்ந்திட 
 பல போதனைகள் வழங்கிய 
தேச பக்தனின் கடை வழி !

நடையில் அகிம்சையை உண்டு 
அழிக்கும் ஆயுதங்களை மெண்டு  
உயிர் வாழ கூர்மை புத்தியுற ஞானத்தை 
தெளித்து யுக்தியை கண்டிட வகுத்த வழி !

தீ-விரவாதம் கூடாதென நூதன 
போராட்டம் சாதாரணமான சாதனமற்ற 
சாத்திய அமைதி சாதனைக்கு அறிவிழி 
நாகரீகம் உரியது வாழ்வியலுக்கு ஒழுக்கம்!

 வழிமுறைகளை நெறியது உயரிது 
தேசப்பற்று மதித்தால் ஒற்றுமையை
கற்று கற்பித்து வந்திட்டால் உலகில் 
சாந்தியும் சமாதானமும் நிலவும் விழியில் !


மலர் !

ஞாயிறு, 7 அக்டோபர், 2012 Category : 0


ஒரு நாள் 
இன்பத்திற்காய் 
சுகமேற்கும் ...

கூந்தலேறிய 
புன்னகைத்து....
 இளமையோடு 
வாடும் !

ஈர்க்கும் 
வாசத்தை இழந்து 
ஆயுளை 
உதிர்க்கும்
அழகு மலர்  !

கைப்பேசி !

Category : 0


தொடர்பை விரைந்தே 
அளிக்கிறது தகவல் 
இணைப்பால் தவறிடும் 
இளமைக்கு வழி வகுத்திடும் !

கெடுக்கும் ஆபாச ,
புகைப்படங்களோடு
நிறைந்த அறிய சாதனம் ...
சாதனையாகும் விஞ்ஞான 
முன்னேற்றம் சோதனையாகும் 
கைப்பேசி மனிதனுக்கு 
வேதனையாகும்  !

"தீ"க்குச்சி !

Category : 0




நெருப்பு பற்றிக்
கொள்ளுகையில் 
அதில் தாநெரிந்து 
தாகத்தை 
மீட்கும்  வரை 
உணர்வுக்குள்  தணியாது 
தன்னை தானே 
தேகத்தோடு 
எரித்திடும் 
உரசுகையில் 
பொசுங்கிடும் 
மோக "தீ"க்குச்சி !