> > விடியல் !

விடியல் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


ஒவ்வொரு முறை படியில் தடம்
பதிக்கையில் ஏறிய படியையே
மீண்டும் மீண்டும் திரும்பி 
உத்து நோக்குகிறேன் கடந்திட்ட
தூரம் மகிழ்வில் !

கடக்கவிருக்கின்ற படியை மறந்து
பாதத்தை முன்னே வைக்கிறேன்
கவலை மறந்த தூரம் மனதிலேறிய
பாரம் எளிமையாகும் பாதை !

Leave a Reply