Home > பாடல்கள்

பாடல்கள்

அம்மா பாடல் வரிகள் !

புதன், 3 அக்டோபர், 2012 Category : 0

அம்மாங்கிற சொல் விதைத்தால் அடி மனதில் வேர் துளிர்க்கும்
செழித்து வளரத்தான் உரமாகிருந்து
உயிரைத்தான் தான் தழைக்கும் !

அமைதிங்கிற வார்த்தைக்கும் ...... {2 முறை }
மூவெழுத்தில் பொருளடங்கும்
கருத்து பிழையின்று
இலக்கணமாகத்தான் தொடுக்கும்   !

கற்று உணர்ந்தால் ..................... {2 முறை }ஞானத்தைத்தான்  வளர்க்கும்  !
பற்றுக்கொண்டால் போதனைக்கு
அறிவுக் கண் திறக்கும் !

சாந்தி சமாதானம் ...
குணத்திலே தானடங்கும்
அறவழி ஒழுக்கத்திற்கு பெயரில்
எடுத்துக்காட்டு நன்னடக்கம் !

பாசத்தால் மழை பொழியும் அன்பு ஈரத்தில் தான் நனையும்
ஓடையில் விழுந்தாலும்
வாழ்த்தும் பண்பாக எழுந்து விழையும்!

வாழ்க்கை பிரகாசிக்க
தேய்ப்பிறையாக  வாழ்ந்திருக்கும்
இருளை நீக்கிட்டு
தானே தோய்ந்திருக்கும் !

இச்சீவனில்லை என்றால்
எங்கே உயிர் ஜீவங்கிருக்கும் 
உலகம் அறிந்திட
வழிகளேது பிறந்திருக்கும் !

உள்ளத்தால் மகிழ்கொடுக்கும் 
துன்பத்தை விரும்பியே சுமக்கும்
இன்பம் தந்திட கனக்கும்
வருத்தத்தைத்தான் மறைக்கும் !

விலை மதிப்பற்ற பரம்பொருளா
நிகரற்றுத்தான்  உயிரிருக்கும்
வறுமைக்கு  அடுப்பெறிய உடல் 
உலையில் எரிந்துப்பசியை தனைத்திருக்கும்!

உதட்டால் ருசித்தால் மொழியில் 
தேனாக சுரந்து அதுவாகக் கசியும் நோய் தீர்க்கின்ற நல்ல மருந்தாக சிரித்தாலே செய்யும்  வசியம் !






இதுதான் நம் தமிழ் சங்கம்

வியாழன், 19 ஜூலை, 2012 Category : 0


சரணம் !

இது நம் குடும்பம்
அழகிய பூங்காவனம்
உறவுக்குள்ளே உணர்விருக்கும்
உள்ளங்களை ஒன்றிணைக்கும் !

இதுதான் நம் தமிழ் சங்கம்
தமிழர்களின் இதுவோர் அங்கம்
ஒழுக்கம்தான் உயர் பழக்கமாய்
ஒன்றிணைந்து செயல்படுவதுவே நம்வழக்கம் !

{இது }
பல்லவி !

சாதிகள் நமக்குள்ளேயில்லை - பெருகும்
 இந்த வியாதிகளின் பெருந்தொல்லை !
தர்மம்தான் தலை காக்கும்  -நமக்குள்ளே
நேர்மைக்கு மட்டும் வழிக்கொடுக்கும் !

துன்பங்கள் வந்து நேர்ந்தாலும் .-கண்ணீரில்
 சிந்தும் கவித் தூறலாகும்  !இன்பத்தில்
ஆழத்தில் வீழ்ந்தாலும் நல்ல
படைப்புகளாக அலை பெருக்கும்  !
{இது}
பல்லவி 2 !

வள்ளுவன் ,அவ்வை ,கம்பர் ,இளங்கோ
பிறந்த பரம்பரையாமாவோம் !தந்த
தமிழை உயிருடனுள்ளவரை
சிறந்து வளர பேணிக்காப்போம் !

சங்ககால பெருமையினை எக்காலமும்
தொடத்திடுவோம் இதன் உண்னதத்தை
உலகிலே பரப்பிடுவோம் !செம்மொழியே...
 எம்மொழிஎன்று பெருமையினைக்
கொண்டிடுவோம்!- தமிழையே
 உயிராக உயர்வாக மதித்திடுவோம்  !அதையொன்றே
சுவாசிப்போம் உண்மையாக நேசிப்போம்!

பாடல்

செவ்வாய், 17 ஜூலை, 2012 Category : 0


சரணம் !


நெசமா,,,நெசமா ,,,தூங்கயிலே ....
கண்ண ரெண்டும் மூடிக்கிட்டேன்
இருட்டு மூழ்கி சூழ்கையிலே
மனசு மட்டும் தூங்கலையே ...!

இதயத்தில் ஒருக்குருவி கூடுகட்டி இருக்கிறதே ...!
கனவிலே பட்டாம்பூச்சி விண்ணிலே பறக்கிறதே ....!
{நெசமா }

பல்லவி !

எனக்குள்ளே மாற்றங்கள் தானாக வந்திடவே
என் வழியின் மூடியஜன்னல்கள் திறந்து வைத்திடவே!
விழியோரம் விழிவைத்து அவள்வரவை எதிர்காத்திடவே
ஏக்கங்களால் தவிக்கையிலே இமைகள் பூர்த்திடவே ...!

எங்கே ..எப்போ ..?காலம் சொல்லு வரேன் நில்லு
என்னை அல்லு என்னுணர்வுகள் சொல்கிறதே ....!-{எனக்குள்ளே }
{நெசமா}

பல்லவி 2 !

இதுதான் வாழ்க்கையென்று காதல் நூலை திறந்திடவே -பார்த்தால் ...
சுலபமில்லை கடினமென்று ஆகிடவே ...!படிக்கும் பாடம் கனத்திடவே ...!
தினந்தோறும் மனப்பாடம் செய்கிறேன் !
மறந்திடுவேன் என்றெண்ணி .ஏனோ ?உள்ளத்தில் சுமக்கிறேன் ....!

இப்போ ,அப்போ ,எப்போதுமே நினைவுக்கொள்ள-கொல்ல.கொல்ல ...
இல்ல ..இல்ல !இதுக்கற்பனையாக சிறகடித்துச் செல்ல ...!

நான் விழித்துப்பார்க்கைலே ....பூமி மவுனங்கள் காக்கிறதே
இருண்ட உலகத்திலே நிலவும்மட்டும் அழகாய் தெரிகிறதே ..!
வறண்ட நிலத்தினிலே கொடியொன்று புதிதாய் முளைத்திடவே ....!
ஆசை ஊற்றினிலே ...வந்த இரவும் பகலாகிறதே ...!

அங்கே .அப்போ ..!மெய்மறந்து நிற்க ! அவளை பராமரிக்க ....!
தண்ணீரை ஊற்றி உயிரத்தந்து காதலை வளர்க்கிறேன் !
எவர் விழியிலும் அகப்படாமலிருக்க மூடியே மறைக்கிறேன்
தெரிந்தாலும் கவலையில்லை அவளுக்காவே நான் இருப்பேன்

அவளை மறக்க சொன்னால் ,,ஜடமாக நான் இருப்பேன் {இதுதான் } (நெசமா )

கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

ஞாயிறு, 22 மே, 2011 Category : 0

 

என் எதிரே தோன்றிய தேவதையே ..
என்னை சிதர வைதுப்ப்போவது ஏன் ?...
புதிராய் வந்து முளைத்ததினால் ...
என் நெஞ்சை நெகிழ  வைத்தது ஏன்? !

தென்றலாய் உரசியது உம்மூச்சு..
உடம்பில்பட்டு மெய்சிளிர்தது உன்னைப்பார்த்து..!
உதிரம் தள்ளியதோர் தேனுற்று.. 
கண்கள் நின்றது உன் வரவை எதிர்பார்த்து ..!
                                                                                             {என் எதிரே}
நீலவான வண்ணத்தில் உடை அணிந்து ...
பூப்பாதம் பூமியில் வைத்தது ஏன்?
மௌனமாய்  தோன்றிய வானவில்லும் ...
உன் நாணத்தால் களைந்துப்போனது ஏன்?

மின்மினுக்கும் நட்சத்திரம்போல  உன்னிரு கண்கள் .!
மின்மினி  புச்சி ஆனது ஏன்? 
கருமேகக் கூடிய  கூ ந்தலும்   -  அது 
வாசம் வீசும் மலர்கொடி ஆனது ஏன் ?
                                                                                             {என் எதிரே}
சில்லென்று சிரிக்கும்போதே ..சிவந்த கண்ணம்..! -
உன்புன்னகையால் ரோஜா இதழைப்போலே விரிந்தது ஏன்?
பளப்பளக்கும் முத்துப்போலே ...
பற்கள் அனைத்தும்  சொலிக்கிறது ..!

இருப்புருவம் வயது பருவத்தை ....
எடுத்துக்காட்டாய்  எடுத்து  சொல்கிறது !
உன்னழகு  உருவம் மட்டும் ..
என் இதயத்தில் பதிந்து இன்பத்தில் மிதக்கிறது ..!  
                                                                                                    {என் எதிரே}

கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

Category : 0



என்னை காதலிக்க சொல்லவில்லை ...
காதலையும் சொல்லவில்லை ...
என்னை அறியாமல் காதல் பிறந்தது ...
கள்ளாமை    உள்ளத்திலோர் கருவானது !

அவனை பார்கும்  போதெல்லாம் ...
ஆனந்தத்தில் பாசை ஊமையாகிறது...
சொல்லத் தோன்றுகயில் ...
சொற்களும் அங்கே  தடுமாறுகிறது !
                                                                               {என்னை காதலிக்க}
அவனுடைய பேச்சை  கேட்கையில் ..,
கேட்கும் பேச்சு யாவும் கீதமாகிறது ...!
அவனுடன் கழிக்கும் தருணங்கள் யாவும் ...
வாழ்க்கைக்கு  புது வசந்தமாகிறது ..!    
                                                                                
நொடிக்கும் நொடி ஒவ்வொன்றும்...
இப்போது  யுகங்கள்  ஆகிறது - 
தனிமையில்  வாடுவதால் ...
சுகங்களும் சுமையாகிறது..!
                                                                      {என்னை காதலிக்க}

நாம் நடந்த பாதையை பார்க்கும் போதெல்லாம் - அது
கனவு தேசத்தில் கொண்டு சேர்க்கிறது ...
இரும்பாகிருந்த என்மனமும் - இப்போ
துரும்பாகி பழுதாகி நின்றது..!
                                                                                    

தனிமையுடைய தவிப்புகளும்
எண்ணத்தின் பிரதிபலிப்பும் உணர்வாக வாடி உருக்குது !
நீ இன்றி பிரிந்து வாழ மட்டும் ...
இந்த உள்ளம்   மறுக்கிறது  ! 
                                                                             {என்னை காதலிக்க}

போதும் , போதுமிந்த காதல் 
கொடிய நோயாக      தொத்திக்கொண்டது...!
எவ்விடத்தி சாய்ந்தாலும் இரணமாக
நினைவுகள்  வலியாக வந்துப்பாயது ...!

தினம், தினம்   நினைவில் வந்து - அவன்
சிறுக சிறுக என்னைக் கொள்வது ...~!
விட்டுவிட்டு துடிக்கும் என் இதையமும்
அவனை நினைத்தே ஏங்கி  தவிக்குது ...! 

Category : 0

பாடல்கள்