கவிதை தொகுப்பு

திங்கள், 16 ஏப்ரல், 2012 Category : 0


சங்கத்தமிழில் அங்கம்வகிக்க எதிர்நோக்கும் தமிழனின் ஓசை ..!

"ஒலிப் பெருக்கிக்கு என்மீதென்ன கோபமோ பேசத் "தயங்குகிறது " !
நாற்காளிக்கென்ன வருத்தமோ அரவணைக்க  மறுக்கிறது" !

"இதயச் சுவரில் வரைந்த சித்திரங்கள் "-கற்பனையோடு 
புதைந்திட்ட "பொக்கிஷங்கள் "சிந்தையில் "சுவடாய்" 'கனக்கிறது'' !

விழிமுன் பிரதிபலிக்கும் 
கவிதைகள்ஆறுதல் தரும் 
 பிறரின் மனதில் நீங்கா இடம் தேடியே ... "வருந்துகிறது "!

கேட்பது பொருள் ஆதாயம் "ஈட்டுவதற்கில்லை" ! -  இனிய 
தமிழோசையின்  "குரலோசையை  கேட்பதற்கு !

வரலாறு காணும் வளைகுடா தமிழ் அன்னையின் விதைகள் !

"தமிழன்னை"ஈன்றெடுத்த தொப்புள்கொடி உறவுகள் தமிழர்கள் !
அகிலமெங்கும் உயர்ந்தோங்கி நிற்கும் விழுதில் துளிர்த்த கிளைகள் !

மழலை ''மொழிநாவில் "சதிராடும் "குயிலின்குரலோசை "!
செவியில்கானமாய்...   ஒலித்திடும் அற்புதமொழி "தமிழ்பாசை " !

வள்ளுவன் -ஔவை உருவாக்கிட்ட வெண்பாக்களின் சந்ததி" !
இளங்கோ -கம்பரை இலக்கியஆய்வை பிறப்பித்த உயர்  ''நீதிபதி "!

"தமிழோசை "யின் சாதனைகள் தனித்து நின்றே வெல்லும் !
"தமிழ் "வரலாறு கண்ட சரித்திரங்கள் வளைகுடா சொல்லும் !


சில அரசியல்வாதிகள்

Category : 0


சில அரசியல்வாதிகள்


களவானிகள்
நாட்டை
கூருப்பொடும்
ஊழல்வாதிகள்!


வெண்சட்டைக்குள்
அழக்கு!
நிறைத்தே ...
சொலிப்பார் "!


உள்ளத்தில்
படிந்த
ஏராளக்
"கறைகள்  "!


புறம் "
போக்கர்களுக்கு
வாடிக்கை
"கூத்தாடுவது "!


வேடிக்கை
காண்பிப்பற்கு
வாக்குத்தவறும்
"நாக்குகள் !


ஏமாற்றுவோறுக்கு
ஏமாற்றம் பழக்கம்!
தயக்கமின்றி இயல்பாகும்
வழக்கம்!


மனைவி

புதன், 11 ஏப்ரல், 2012 Category : 0

மனைவி

கனவிலும் இருப்பால் ...!
"தாயாய் "தாங்குவால் 
சேயாய் "ஈன்ருவாள் "
"விழிகளாக இருப்பாள் "
"இமைகளாக துடிப்பாள் !
கண்ணீராக உருகி !
மெழுகாகவும் "கறைவாள்"

இன்பத்தில் "ஒருப்பாதி"
துன்பத்தில் மறு மீதி!

கட்டியமுதல் (இறக்கும்)
{கட்டையில் போகும்}வரை
அவள் கட்டிய "மனைவி"
நல் வழி காட்டுதலுக்கு
"நற் துணைவி ''!

திங்கள், 9 ஏப்ரல், 2012 Category : 0




நல்ல நட்பு!


"நட்பென்பது"
ஆகாய நிலவுப்போன்றதாகும்!
இருளை நீக்கும் ஒளி!-"அது"!
வாழ்கைக்காகும் வெளிச்சம்"!   

கவிதை தொகுப்பு

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012 Category : 0


அழகு!


சிறப்பு "மலருக்கு "
அழகு பிறப்பாகும்!
இல்லாவிடில் கொடியது
கொடியில் வாடும்
உதிரும் "இறப்பாகும்".!


ராக தேவதை எம்.எஸ். சுப்பு லட்சுமி !


மா..தவம் கண்ட 
மதுரை மாநகரம்!
உயர் கலை சிகரங்களில்
கண்டெத்த ''ஒலி"(குரல்)
சிகரம் ! - செதுக்கிய 
சிற்பியின் "உளி"!


கும்பகோணம் "தீ "விபத்து (நினவு நாள்)!


"தீ"க்கும்-
"குச்சிக்கும் "
மூண்டது 
மோதல் !


"இருவரும் "
உரசிக்கொண்டதால்
வெடித்தது "
"எரிப்போர்"!


பட்டாசுகலாய்
" வெடித்து  "
சிதரிய 
கூறைகள்!


பட்டாடைகளாய்
 "மின்மினித்த"
"பொன்"
வண்டுகள்!


பொசங்கின 
"நெருப்பு 
போரில்"!
காணுமிடமறியாமல் !


"கருகிய"
கூடும்-
கூடாகிய
பள்ளியும்!


மூளைக்கும் 
மொட்டுகளும்!
தொலைத்த 
"சிட்டுக்களும்"!


"நினைவு "
தழம்புகளோடு 
அனுசரிக்கும்
" தினம்"!


"ஆண்டாண்டாகும்"
வரலாற்று "சரித்திரத்தில் "
ஒரு நாளாகும்
கருப்புத்தினம்.!