மொழி !, தனிமை {அ} பிரிவு !

ஞாயிறு, 10 ஜூன், 2012 Category : 0


மொழி !

தமிழன் தமிழை 
வளர்க்கவில்லை ...
தமிழ்நாட்டில் !
"மொழி" வளர்கிறது !

கூடுவிட்டு கூடுபாய்ந்து 
அரபுநாட்டில் !
பாலைவனத்தில் 
முளைக்கும் விதைகள் !

தனிமை {அ} பிரிவு !

வீட்டுக்கு வீடாகும் 
வாசப்படிகள் !-பிரச்சனையோடு 
வரவேற்கும் கதவுகள் 
திறக்கும் நீதிமன்றம் !

குற்றம் வரிசையில் 
காக்கும் வழக்குகள் !
மரபு மறந்த மனிதன் 
பணிவைத் துறந்த பொறுமை !

புரிதளில்லாத வாழ்க்கை 
பிரிவினைத் தேடும் நீதி !
பிரிந்து தவிக்கும் அநீதி 
தனிமையில்  உணரும் தவறு !

வாழ்க்கையில் துணிவு வேண்டும் !

Category : 0

துணிவுகொள் !

தன்னம்பிக்கையிழுந்தால் 

துயரமுன்னை நெருங்கும் 
மூட நம்பிக்கையை 
வெரட்டினால் அது !-மிரளும் !

உருக்கிடும் வருத்தம் 
முடியாது நினைக்கையில் !
முயற்சியின் அர்த்தம் 
வெற்றிக்கொள்கையில்

இனிக்க செய்யும்  
துணிவு !- பிறக்க
 செய்யும் தோல்வி 
இழக்க செய்யும் 
வெற்றி! இலகுவாகும் 
வாழ்க்கை !

"வாழ்க்கை பயணம் "

வெள்ளி, 8 ஜூன், 2012 Category : 0


"வாழ்க்கை பயணம் "
வெயிலுக்கு சாயுகின்ற
நிழலும் !-மழைக்கு 
ஏந்துகின்ற குடையும் !
நிழலுக்கு குடையாய் 

இருக்குமெனில் ....!

ஒரு மனிதனை 
சுகமான பயணம் 
மேற்கொள்ள இலகுவாகும்... 
இடம் நிழற்குடை  !

பயணம் விரும்பியது 
பேருந்தாக இருப்பின் ..!
சிரம் பணிந்து
செல்ல வேண்டும் !

ஏற்றம் ஒருப்பக்கம் 
இறக்கம் மறுப்பக்கம் 
இருக்கும் நினைத்தால் .....
விழுப்பமாகும் வாழ்க்கை !

ஏழை வயோதிகரின் குமுறல் !

Category : 0

தள்ளாடும் வயது 
முதுமையை சுமக்கும் 
வறுமை அல்லாடுகிறது !

"இருள்"மூழ்கடித்த 
குடிசையில் எழிலாய் 
மின்னுகிறது நட்சத்திரம்!

மூட்டைபூச்சி !

புதன், 6 ஜூன், 2012 Category : 0

அழக்கு நிறைந்த 
இடத்தில் !துணிந்து 
பிறப்பான் !-விழிக்கும் 
வரையில் மறைந்திட 
மறுப்பான் ,-கரத்திலகப்பட்டு 
உயிரையே.... துறப்பான் ! 
தூய்மையாகாத வரையில் 
 போராடும் போர்வீரன் !