திறமை!

செவ்வாய், 24 ஏப்ரல், 2012 Category : 0

திறமை!

நாம்காலத்தை கண்டு வியக்கும்முன்
காலம் நம்மைக் கண்டு வியக்கட்டும் !
திறமைக்காகும் அதுப்பயிர் மென்மேலும்
வளரப்பாராட்டு "அதுவாகும் உரம்"!

தத்துவம்!

கற்பனை கலந்தால்
மட்டுமே கவிதை
சிறக்கும்.!-உண்மை
இருந்தால் மட்டுமே
வாழ்க்கை மணக்கும்!

கவிதைத் தொகுப்புகள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2012 Category : 0

யோக்கியன்!

கொடுக்க இயலவில்லையே..-எண்ணி 
வாடி வருந்துபவன் -பெற்ற
பொருளை திருப்பிகேட்குமுன்
கொடுக்க நினைப்பான்.!

தேடல் .!

இறகுகளிழந்து சிறகுகளைத்தேடுகிறது
 "கிளி"!-மூடர்களின் குருட்டு நம்பிக்கை
கூண்டிலகப்பட்டு சுதந்தரத்தை தேடுகிறது!

புதுக்கவிதை!

திங்கள், 16 ஏப்ரல், 2012 Category : 0

வாசமின்றி பூர்த்ததால் ...
வாடும் பூக்கள் ! -தேடாத
தேனிகளால் கூடாகும் 
பூந்தோட்டம்!

 கவிதை நூல் !

உள்ளப்பூந்தோட்டத்தில் 
பூர்த்த பூக்கள் !
எண்ணத்திலாகும் பூச்செண்டு
சந்தையேட்டிலாகும் ... !

காணும் கண்களுக்கு 
கவர்ந்திழுத்திட்டால் ...
பூக்களுக்காகும் விற்பனை ! 

இலாபத்தில் பூக்காரன்
வியாபாரத்தில் பூந்தோட்டம் .!

உயந்தது நற்மனித நேயமே...!

Category : 0


உயந்தது நற்மனித நேயமே...!

சம்பிரதாயம் வேண்டாம்!
வீண் சஞ்சலங்கள் வேண்டாம்!
சமுத்துவம் பிறக்க ....
தேவை சகோதரத்துவம்.!

விவாதங்கள் வேண்டாம்!
வீண் வினையங்கள் வேண்டாம்!
நற்கருமங்கள் செய்திட.....
தேவையானது நல்லதோர் மனமே...!

உதவிட நினைப்போர்க்கு...
சிரம்பணிந்து வரவேற்போம்.!
வறுமைதனை அகற்றுவோர்க்கு...
கைகோர்த்து பலம் சேர்ப்போம்.!

அறியாமைகளை விரட்டு வோர்க்கு  
ஊக்கத்தை அளித்திடுவோம்...!
தீண்டாமையை கொளுத்துவோர்க்கு...
"தீ" யாக நாமிருப்போம்...!

மதம் மனிதனை வாழவைக்காது!
இறக்க குணமொன்றிருந்தால்...
விழுப்பம் மதத்தை ஆதரிக்காது...!
உயர்ந்தது நற்மனித நேயமே....!

கவிஞர் . முபாரக்.


தோழர் யாகுப் அலி நோய்வாய் பட்டப்போது பிரார்த்தித்து எழுதியனுப்பிய வருத்தமடல் ''!

Category : 0

சமீபத்தில் தோழர் யாகுப் அலி நோய்வாய் பட்டப்போது பிரார்த்தித்து எழுதியனுப்பிய வருத்தமடல் ''!



 உயிரை கொடுப்பவனும் அவனே
உயிர் பிய்ப்பவனும் அவனே !
கவலை மறந்திடு நண்பா
கடவுளை நினைத்திடு !

உன் கடமைகளை 
செய்திட மறவாதே
காண பல கண்கள் 
உள்ளதையும் மறவாதே !

உள்ளம் உயர்வாக 
நீ  நினைத்ததினால்...
இவ்வுலகம் நலம்பெற
 உன்னை பிரார்த்திக்கிறது!

தவறுகள் நடப்பது -இயல்பே ...!
மறப்பதும் மன்னிப்பதும் மரபே...!

கர்வம் கொண்டிருந்தால்...
உள்ளே "அது" அழிக்கும் !

எதையும் மறந்து...
 நீ நடந்தால் ...
உன் வளர்ச்சிக்கு
அது வழி வகுக்கும்!

நல் உள்ளம்
உன்னிடம் உள்ளதினால்
என்னுள்ளத்தில் உள்ளதை
கூறுகிறேன் ...!

பல்லாயிரம் வருடங்களுக்கு ...
மேலாக ,, உன் எழுத்துகள்
 நிலைத்திடவே  பார்க்கிறேன் ..
மனமுவந்தும் வேண்டுகிறேன்!

தமிழன்  பலகவிகள்
 நாம் படிக்க-விரைவில்,,,
உன் செவியில் 
அது ஒலிக்கும்  !

சிகிச்சை இன்றி 
குணமாக ...
அந்த மருத்துவரின்
மருந்து பலன் சிறக்கும் !


மருத்துவர் தந்த 
நாளை எண்ணி
வருந்தாதே நண்பா !
தன்னம்பிக்கையை 
ஒருபோதும்  இழுக்காதே ...!
வருத்தத்தில் இருக்கும்
 உன் குடும்பத்தை -உடனே 
இன்பத்தோடு இருக்க வழி வகுத்திடு  !
கடவுள் மீது பாரத்தைப்ப்போடு  
அவன் நிச்சயம்
நற் மனிதனை காப்பான்
கவலையை மறந்திடு!

நீ நலமுடன் வளமுடன்
வாழ ,,,உளமாற வாழ்த்தி
வேண்டிக் கொள்ளும்!

சகோதரர் - கவிஞர் இ.முபாரக்.