> > வளைகுடா பயணம் !

வளைகுடா பயணம் !

Posted on திங்கள், 9 ஜூலை, 2012 | No Comments


முடி{யி}(இ)ல்லா ....
நாட்டுக்காக !
முடி{யெ}(எ)டுத்த !
மொட்டைக்கதைதான்
 வளைகுடா !

வீட்டை மறந்து 
நாட்டை துறந்து !
விமானத்திலேறி ...
காற்றிலே பறக்கவிட்ட 
உறவு !

தவிக்கும் தனிமையிலே ...
மேற்கொண்டப்பயணம் !
இனிக்கும் அப்போது !
வலிய வாடுகையில் 
இருகும் உள்ளம் !

பாலையிலே ...பாவிகளாய் ...!
உணர்வை உருக்கி 
அடக்கிய நினைவு 
கைகொடுக்கும் தேடிய 
செல்வம் கிடைக்கையில் !
பஞ்சத்தினாலும் ...வறுமையினாலும் 
தொலைத்திட்ட வாலிபத்தை 
முதுமையோடு விழிக்கையிலே 
உணர்த்தும் !தேடியப்போது 
தொலைத்தது வலிபமென்று!

Leave a Reply