Home > நவம்பர் 2011

நவம்பர் 2011

செவ்வாய், 15 நவம்பர், 2011 Category : 0

யாரவள் ?

முதன் முதலில்
அவளை பார்க்கையில்
அவளழகு
தீண்டிச்சென்றது !

கொள்ளா ஆசையால்
நிறைந்த மனது
கண்கள்
பின் தேடிச்சென்றது !

முன்னே தோன்றிய
மீனாய் அவள் !
சிக்காமல்
கையிலிருந்து நழுவியது .!

தூண்டில் போடும்
விழிகளிரண்டு
வருவதை
எதிர் நோக்கும் பார்வை.!

இளமை !

குழாயில் ...
சீறிப்பாய்ந்து
வந்த தண்ணீர்
வரவில்லை வாடி
நிற்கும் கிணறு .!-பழுதடைந்து
துரும்பாகி நிற்கிறது !
எதற்கும் உதவாத
இரும்பு .!

புதன், 2 நவம்பர், 2011 Category : 0


இலக்கியனின்.... புதல்வன் .... காணும் 5 தாவது  பிறந்தநாள் !
HAPPY BIRTHDAY SON!!!


மகனே ...!
எங்களுடைய   வாழ்வில் ,,,
மங்காது தீப ஒளியாய்..!
தந்து கொண்டிருக்கும் 
மகிழ்ச்சி .!

மனமெனும் ...
நந்தவனத்தில் பூர்த்து !
இன்பமெனும் பூங்காவனத்தில் 
எழில் தரும் மலராய் வகிக்கிறாய் ..!

நாங்கள் பெற்றெடுத்த 
வளங்களில் விளங்கும் 
ஈடற்றச்செல்வனாய் ...
திகழும் புதல்வன் !

இறையருள் பொழிய 
நபி வழியறிய ...!-புதுமை 
கவி மொழியில் ..
வாழ்த்துகிறேன் !

இந்நாள்போல் -எந் நாளும் 
பல்லாண்டு பிறந்த 
நாள் விழாக்களை காண 
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!

எங்களுடைய ...
தாய் தந்தை !
கண்ட கனவை !-தற்போது 
உன்னுடைய ,,,தாய் தந்தை 
காண்கிறது .!

அதை ஏற்று ..
நிறைவேற்ற ...ஏக வல்லோன் !
துணைப்புரிவான் .!- பிறந்த நாள் 
வாழ்த்துக்களுடன் அடுத்த வருடம் 
முன்னேற்றத்தை எதிர்நோக்கும்!

பாசமிகு பெற்றோர்கள் !

இன்று இவ்வார்த்தைகள் 
கடுமையாக  இருக்கலாம் 
நாளை எளிமையாக இருக்கும்!
தன்னம்பிக்கையுடன் ..
உனது பெற்றோர் !

Category : 0



நிலையில்லா வாழ்க்கை !
நிரந்தரமான மண்ணறை.!

கலியுலக வாழ்வு நிரந்தரமல்ல !
மண்ணற வாழ்வே நிரந்தரம் !
வருமுன்னே எதையும் 
கொண்டு வருவதில்லை ..
இறந்த பின்பும் எதையும் 
கொண்டு செல்வதில்லை 
பிறந்தப்போது அறியா குழந்தை  
வளர்ந்தபொழுது ஒரு மனிதன் .-தனிமையாய் 
இறையடி சேர்வோம் .!

இறைவன் தரும் செல்வங்கள் யாவும் 
சோதனையே ...அறிந்திட்டால் 
உன்னைவிட சிறந்தவன் 
உலகிளில்லையே ...!
இருக்கையில் நம்மிடம் 
இருக்கட்டும் நல்ல குணம்  ..
இருப்பதை தந்தால் வள்ளல் 
சொல்லிடும் பல மனம் !

இருக்கையில் போற்றி....
உதடுகள் உச்செரிக்காவிட்டாலும் ..
வாங்கி சுவைத்த நாக்கால் ..
குடல்களும் சொல்லும் 
உள்ளம் மறைத்த உவமைகள்
உயர்வாகி அங்கே நிற்கும் ..!

நீ செய்த தர்மங்கள்தான் 
நரகத்தை வெல்லும் ..!
செய்த நற் செயல்கள்தான் 
சொர்க்க கதுவை ...
திறந்து முன் செல்லும் .!

இறை வழிப்பாதை .. 
இறையடி சேர்க்கும் ..
நபி போதித்த ஞானம் ...
நல் வழிப்படுத்தும் ..!

சிந்திப்போம் ..! தர்மம் செய்வோம் ! நன்மைகள் சேர்ப்போம் !
இறைஞ்சிடுவோம் !அவனை பணிந்திடுவோம் !சொர்கத்தை அடைந்திடுவோம் !
தீர்ப்பு நாளன்று ..சொர்க்க வாயல் ..  நமக்காகும் ...!
சொர்க்க கத வுகள் திறந்து வரவேற்கும் ..!