Home > மார்ச் 2012

மார்ச் 2012

"கள்ளி "!

புதன், 28 மார்ச், 2012 Category : 0

"கள்ளி "!


கொள்ளா   அழகு !-என்னை 
கொள்ளையடித்தப் பின்புதான் ...
உணர்ந்தேன் "அதுக்காதல் ".!


இதயம் இழந்து தவிக்கையிலே ...
வாடும் உணர்வும் தேடுகையில் ...
அறிந்தேன் திருடியவள் காதலி !

முகப்புத்தகம் .!

செவ்வாய், 27 மார்ச், 2012 Category : 0

முகப்புத்தகம் .!


அறியா முகங்கள்...
அழகான புகைப்படங்கள்.... 
சந்தோசத்தை தரும் ...!


விரும்பி கேட்கும் நட்பை....
பதில் வராமல்நின்றால் ...!
மனவருத்தத்தை தரும்!


 எதிர் பார்க்காத அஞ்சல் ...
திருப்பி தந்தால் .....
நட்புகள்  தொடரும் !


முடிவுமற்றவர்  கையில் தந்து .......
பதிலை எதிர்பார்க்கும் விழிகள் !
முகபுத்தகத்தில் தினம் தேடலோடு ..!



(மாது) பூட்டு

Category : 0

சாவி யிருந்தும் 
"திருட்டு "தனமாய்
உடைக்கும் பூட்டு
திருட்டு காளையர்களுக்கு
மோகத்திற்காக....மனக்கதவை
உடைத்திட உதவும்
கள்ள சாவியாகும் !

பூட்டு இருந்தும்
சாவியை தொலைத்தால்
திறந்த வீடு ...."
வீதிப்பார்க்கும்!


உடித்த பூட்டை
தேவையற்றதாக்கினாலது
குப்பை யே" ஆகும் 

வசந்த வாசலை
காக்கும்(மாது) பூட்டு
திருட்டு கண்ணடியிலிருந்து
வீட்டை
பாது காக்குகம்!

வீரப்புதல்வன் தமிழன்!

Category : 0

வீரப்புதல்வன் தமிழன்!

தமிழ் தாய்மடியேந்திய 


வீரப்புதல்வன் தமிழன்!

தாய் நாட்டைகாக்க 

இறைவனிடம் பெற்றிருப்பானோ... ?

சீண்டினால் சீறும் புலி அவதாரம்! ...

 வேட்டையாட புறப்பட்டு 

தன் வீட்டை மறந்தான் 

நாட்டை காத்தான் 

வென்றாலும், வீழ்ந்தாலும் 

உயிரிலும் பெரிது 

தமிழ் மானம் ! 

இருந்து காக்க முடியாவிடில் 

அதனை இழுந்தும் காத்திட்டான் 

தமிழ் தன்மானம் !

உடலில் துளைத்து 

சிதறிய குண்டுகள் ஏராளம்

 அம்மண்ணில்...

 முளைக்க விதையானது"

 பதரென்று கிள்ளியெரிய நினைத்தால் ..

 எளிதில்லை கதிராகி முலைக்கும்! 

முத்து நெல் மனிகளாய்..!

கொண்டான் ஈழம் தமதுதான்! 


Category : 0

பணப்போராட்டம்.!

கனவினை''
சுமந்ததினால் கனவாகிறது 
கற்பனை'''.!



இலட்சியத்தை தேடி...
வரும் பணமோகம்''
இளமை' பலியாக்கும்'''!

வாழ்வாதாரம் தேடியும்
தொலைந்த வாழ்க்கை
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை'''!

ஊமை '''''
ஒட்டக-ஆடும்
கற்கிறது புதுமொழி'''!

அறியாத பாசை''
சிறையானது
பாலைவனம்'''!

ஏட்டறியான் வீட்டுக்கு...
புகுட்டுகிறது பாடம்
மேதை''வளைகுடா''...!

குருடன்'''இருளில் சிக்கி
தவித்தான்''',வந்தயிடம்
செல்ல'''!அறியாமல்!

சோகம் தந்தது
கானல் நீர்
வசந்தம்'''!

கண்ணை
கட்டிவிட்ட காடு
தண்ணீரற்ற குளம்''

கொழிக்கும்
எண்ணை வளமாகும்
சுடும்சுடுகாடு'''!

உள்ளம் உருகுகிறது
வாட்டும்...
குளிர்'''!

வாடித்தவிக்கிறது
வெயில்'''-நெருப்பூட்டும்
ஜடமாகிய உடல்'''!

மாறும் பருவம்
உருவங்களை
காண்பிக்கிறது

வறுமை'''
மாதங்கள்
வெறுப்பூட்டும்''

கூண்டில் சிக்கி
கூடானது
கூடு'''!

பணப்பெட்டி'''-
அனைவரும்
சுமக்கலாம்...!

சிலருக்கு-அது
சவப்பெட்டியே...
இறுதியாகும்!

இறப்போருக்கு
கனவுத்தொட்டில்
பிறப்பாகும்'''!

ஆயுள் சூதாட்டத்தில்'''
தொடரும்
பணப்போராட்டம்'''!

இளைய சமுதாயம்
எதிர்னோக்கும் சவால்'''
பித்த யுத்தம்''.!

வலிமையைத்தாங்கி
வளிய...''காத்துக்கிடக்கிறது
வரிசை"''!

கடவுட் சீட்டு '''
இலக்கவருக்கு''''-ஆகும்!
வெற்றிப்பயணச்சீட்டு''!

தினம் வாழ்க்கைக்கு ...
புரட்சியாகும்''-
போராடும் போர்க்களம்!

நாளைய சமுதாயத்திற்கு''''!
பிழைக்க இந்த ....நாடு
ஏதுவாகும்''!

கனவு தேசம்.!

Category : 0


கனவு தேசம்.!

இருளில் மூழ்கியது தமிழகம்'''!
அனு-அனுவாய் சோதிக்கிறது..
மின்சாரம்'''''.!
...
அணுமின்னிலையங்கள்""""-அச்சுறுத்தும்
அஞ்சாததது மின்வெட்டு
போராட்டம்''.!

சுயனலவாதிகள் முதலீடு செய்யும்
பெரும் வர்த்தகம்"""
அரசியல்..!

சந்தையில் வியாபாரிகள் மந்தை"
பேரம் பேசும் நாக்குகள்
வாக்குகளாகும்''!

ஊழல்வாதிகளின் கரங்களில் நாடு''
வளமாகும் காடு வெட்டி
கூடானது வீடு'''!

விரைவில் வல்லரசாகும் இந்தியா
கனவுக்காணும் விஞ்ஞானிகள்
கற்பனையில்"..!

கைப்பேசியில் கள்ள காதல்..!
போதிக்கிறது தொலைக்காச்சி
ஆபாச திரைபடங்கள்""!

சீர்கெடும் நாளைய தலைமுறை ""!
நல்ல இளைஞைகளை தேடுகிறது...
கல்லூரிகள்...!

"கதறும் காதல் -உருகும் காதலன் "

Category : 0


"கதறும் காதல் -உருகும் காதலன் "

"அழகு பாவை நிலவு "!
{கண்}பார்வை முன்னே தோன்ற 
தாவிச்சென்றது பாவிமனது" !

நட்சத்திர கூட்டத்தின் நடுவே 
உலாவரும் "நடிகை "யை கண்டு 
வியப்பிலானது  காதல் மோகம் ....!

அவள் வரவில்லை ஒருநாள்!
உள்ளத்தில் உணர்வாக "மேகம் " 
இருண்டியப்பின்  தோன்றிய வானவில் !

கற்பனையோடு  "கலைந்துச்சென்றது "
பூர்த்த கண்கள் "ஏமார்ந்திட "
நினைவால் கதறுகிறது "காதல்மழை" .!


கனவுத்தொட்டிலாகும் சிலருக்கு கனத்தொட்டில்.!

திங்கள், 26 மார்ச், 2012 Category : 0


கனவுத்தொட்டிலாகும் சிலருக்கு கனத்தொட்டில்.!

வசந்தக்கனவு
ஆசைத்தொட்டிலிலாட!
கனவுத்தொட்டிலில்
மிதக்கிறது கற்பனை!

எதிர்ப்பார்த்த பயணம்
மயானமாகிட.....!
கட்டிய கோபுரம்
நிலைகுலைந்தது"!

சிறகுகளாய் பறந்த
சிந்தனை"'!-மௌனமாய்
கூண்டிலடிப்பட்டு
சிறையாகி கடக்கிறது"!

உள்ளம் சுமந்த
பாரங்கள் யாவும்-தனிமையில்
கைப்பேசியில்
கண்ணீர்வடிக்கிறது"!

சுகவாழ்வைத்தேடி"
வந்தவர்களுக்கு"-
வெளி நாடு வாழ்க்கை
மோகம் கானலானது".!

இளமையைத் தொலைத்து
சரிந்த வாலிபம்-முதுமையோடு
வருந்தி வாடி"
புது விடையத்தேடுது:!

பிறிந்து-இழந்து!
தவிக்கும் உறவுகளால்
 முடிவை மாறிப்போனது"!

கூலி,-வேலை செய்து
பிழைத்தாவது
நிறைவான நிம்மதியை
கிடைக்குமா?தேடலாகுது "!

தாயகமேசிறந்தத
நினைத்தால்உயர்ந்த 
சிகரத்தையும்
எட்டி பிடிக்கலாம்"!

வெளி நாடு மோகம்"
உயர்வாய் கொண்டால்..
பண தேகத்தால்..அடியோடு
நம்மை மாய்க்கலாம் "!

 தேசம் விட்டு
தேசம் கடக்க அறவே
மறந்தால்  "-இனிமையான 
 வாழ்கையை சுவைக்கலாம் ..!

நம் தாயகத்தில்
விடையலை பார்ப்போம்"!
உழைப்போம் உயர்வோம்"
நம் தாயகத்தில்""!