Home > ஜூன் 2012

ஜூன் 2012

நான் படும் பாடு !

சனி, 30 ஜூன், 2012 Category : 0


கிட்ட தட்ட மணி 
பத்தை எட்ட 
வியாபாரம் முடித்து 
கூட்டிட சொன்னது கணக்கு !

கூட்டியதில் சில
நேரம் அதிகரித்து 
எழுத மறந்த விற்பனை !
பல நேரம் குறைந்து 
காலத்தை வீணாக்கி 
சிந்தித்திட ...!

இறுதியில் 
முதலாயின் பையில்
சிறிது சில்லறை 
சென்ற இடமறியாமல் 
தவிக்கையில் முடிவாய்
முடிவாகிய கணக்கு !

நள்ளிரவில் முடித்து 
ஓடோடி வர ....
வீதியோரம் ஓநாயை 
அஞ்சி பதற்றத்தோடு 
கடந்து விடுதியிலடைய ...

பூட்டிய அறை இருண்டு 
மவுனம் காக்கும் !
சாப்பாடு சட்டிகளில் 
மீதமிருந்தும்! ருசியாக 
கிடைக்குமா எண்ணுகிறது 
நாக்கு !

கட்டிலில் காத்திருக்கும் 
கணினி வரவை 
எதிர்நோக்கிட திறந்து 
அமர்ந்து சிந்தனைகளை 
பதிவு செய்ய காத்திருக்கும் 
கண்கள் !

அறிவுக் கூட்டை 
திறக்க நினைக்கும் 
சாவியான பதிவுகள் 
சில நேரம் என்னின் 
சிந்தனைப் பூட்டியே 
உடைக்கும் உறக்கம் !

நான் என்னிடம் 
சொல்லாமல் உறங்கியும் 
அதுவாக விழிக்கும் 
உணர்வு வேகமாய் 
ஓடும் கடிகாரம் 
செய்யும் பணியை குறிக்கும் !

அவசர அவசரமாய் 
குளியலறை நுழைந்து 
தேனீருடன் முடித்து 
கெளம்பும்முன்  ஒலிக்கும் 
கைப்பேசி விரைந்து 
அழைக்கும் வாடிக்கையாளர் !

கண் எரிச்சலோடு 
சென்று சிறிது 
ஓய்வெடுக்க நினைத்தால் 
சுத்தம் செய்யக் 
காத்துக்கொண்டிருக்கும் 
வியாபாரஸ்தலம் 
குப்பைக்கூளமாய் !

 மெருகேற்றி அலங்கரித்து
சுத்தமாக்கினாலும் அழக்காக்கும் 
காலணிகள் !வராதே 
சொன்னாலும் வீணாகும் 
வியாபாரம் !

நல்ல விற்பனை செய்ய 
நினைத்து ஓடோடி 
வாங்கி வித்து விட்ட 
பெருமூச்சு !பேச்சாக்கி 
வாங்கிப்பெற்ற சந்தோசம் !

சிந்தனைகள் விழுதுகளாய் 
எழ ...தொடுத்த எழுதுகோளின் 
போராட்டம் !மாராட்டமாய் 
அவ்வப்போது தடுத்து 
நிறுத்தும் வீண்தண்டவாட்டம் 
வாடிக்கையாளர்கள் !

தேரோட்டமாய் இழுத்து
பிடித்து சிதறிய 
எழுத்துக்களை தேக்கி 
எழுது முடித்து 
பதரப்படியே கூறிட  ...!

பிறர் முகம் சுழிக்க 
கேலி செய்தாலும் 
வெளியாகாத கற்பனை 
படைப்புகளாய் உதிர
வைத்து அழகுப்பார்த்து 
ரசிக்கும் ரசனை !

பிறருக்கென 
உரியதாக்குகையில் 
அளவுக்கடந்த சந்தோசம் 
எல்லை மீறி செல்கிறது 
ஆனந்தத்தில் !

முதலாளி திடீர் நுழைய 
எழுதிய எழுத்துக்கள் 
கலவானித்தனமாய்  மறைத்து 
நினைத்தப்பாதி காற்றில்விட 
மீதி காகிதத்தில் முடிவின்றி
மறந்த தொடர் !

நேரம் தவறாது 
பேசும் மனைவி 
பிரிவினை மறக்க 
ஆறுதல் தரும்
 குழைந்தைகள் !பாசம் 
பொழியும் பெற்றோர்கள் !

வாசத்தால் வறுமை
இருந்தும் துறந்த 
கடினங்கள் !வருந்தாமல் 
ஊக்கமளிக்கும் நட்பு !
படித்து விமர்சனம் கூறும் 
வாசகப்பட்டாலம் !

சுட்டெரிக்கும் வெயிலில் 
உருகிட வைக்கும் குளிரில்
நாடிவந்து -ஓடிவந்து 
ஓய்வின்றி மயக்கமாய் 
குட்டி உறக்கம் !

சமைக்க வேண்டும் 
நினைத்து எழுப்புகையில் 
மூட்டையாய் கடக்கும் 
அழைக்கு மூட்டைத்துணி 
துவைக்க அழைக்கும் !

முடியாமல் சலவை
செய்துப்போட்ட 
 சட்டை மின்மினுக்கும் 
அன்று மட்டும் 
அலுப்போடு !


மாதம் கடந்தால் 
சம்பளம் வாங்கும் முன் 
வீட்டு வாடகை பாக்கி !
தவறாது கட்டினால் 
மட்டுமே மின்சாரம் !

உரிய நேரத்தில் 
காசோலை வங்கியில் 
விழாவிட்டால் 
கோபப்படும் சம்சாரம் !

இப்படியே உருண்டோடும் 
என் பணி !சிலத்தருணம் 
என்னை சுற்றி 
பூமி சுற்றுவதில்லாமல் 
அதைச் சுற்றி நான் 
ஓடுவதாகவே தெரிகிறது !

ஏதுவாகிருந்தாலும் 
சலிக்காமல் ,மலைக்காமல் 
தன்னம்பிக்கையோடு 
உருண்டோடும் வாழ்க்கை 
பூமி நிற்கும் ஒருநாள் !-

என் மூச்சு பிரியம்போது !
அதுவரை ஓயாது 
ஓடிக்கொண்டிருக்கும்
தொடரும் செயல் !
 
நோயின்றி ,தொய்வின்றி 
 இருந்தால் வளமாகும் 
வாழ்க்கை இலக்கை 
நோக்கி செய்யும் 
பயணம் வெற்றிப்பெறும் !

பஞ்சத்தை தாங்கிப்பிடித்து 
வறுமை போக்கிட்டால் 
என் வாழ்க்கைக்காகும் 
வசந்தம் துயரத்திர்காகும் 
மறுமலர்ச்சி !





புத்தர் !

வியாழன், 28 ஜூன், 2012 Category : 0


போதி மரத்தில் 
அமர்ந்ததால் ஞானம் 
வளர்ந்தது !கற்ற ஞானத்தை 
உலகிற்கு தானமாக்கியதால்
புத்தரானது !

பக்தனாக உருவெடுத்த
சித்தர்களுக்கு  ஆசான்!
வழியேற்று நடந்தவருக்கு 
குருவாகி ..-சொல் வேத
வாக்காய் பிரதிபளித்ததால் 
மக்களின் நேசன் !

பாவத்தையும் கருணையையும் 
போதிக்கும் பித்தனாகிய கற்றான்  !
இறைவனுக்கு துதிப்பதில் 
உண்மை பக்தன் !

மூடப்பூட்டை 
உடைத்தெரிந்த இவன் ஒற்றன்!
மனித ஞானக்கூட்டை 
திறந்திட வைத்த
ஞான சாவி வித்தன் !

விலங்குகளை கொல்வதேப்
பாவம் கூறி!-
உயிரின் உன்னதத்தை 
உணரவைத்த தன்னலமற்ற 
மனித நேயன் !


இவன் மீதுப்பற்றினால்
ஆழமாகி பதிந்து மனதில் 
மனிதனால் உருவெடுத்தான்
இவனானான்  கடவுள் !


சிலையாகி நிலையாகி உலக 
வரலாற்றிலே பேரும் புகழும்
சொல்வடிவிலே பதிவாகி
பெருமை சேர்க்கிறது
ஏட்டு வடிவில் !

கவிஞர் வைரமுத்து!

Category : 0

வைரமுத்து !
வைரம் பாய்ந்த வரிகள் 
முத்தாய் சொலிக்கும் எழுத்துக்கள் 
கவிதைக்கு கிடைத்த
வைரமும் ,முத்துவும் 
தமிழனுக்கும் ,தமிழ்நாட்டிற்கும் 
கிடைத்த ஈடற்ற சொத்து !

வித்தாய் எழுந்த மெட்டு 
குரலில் பட்டு மின்சாரமாய் 
தாக்கிய பாடல்கள் 
இசை சங்கமத்திற்கு 
திசைகள் மாற்றிய 
விசைப்படகு !

தொடரும் ஏடுகளில் 
பதித்த பதிவு -பெருத்த 
வைக்கும் தொகுப்புகளால் 
ரம்மடித்து போதையேரிடும் 
முத்துக் குளியல் 
கவிஞர் வைரமுத்து!

இன்றைய கவிப்பிரியர்களின் 
நெஞ்சை தைத்த ஊசி !
கனத்த வழியில் எளிமையாய் 
பயணிக்க ஆர்வமாய் 
வழி வகுத்து செல்கிறது! 
படைப்பாளனாக்கி அழகு 
பார்க்கிறது எழுத்தாளனாய் 
உருவாக்கும் இவனொரு சிற்பி !

வெளி நட்டு வாழ்க்கை !

திங்கள், 25 ஜூன், 2012 Category : 0


இறகுகள் முளைத்து
சிறகுகளாய் பறக்கிறது
ஆசை !-இளமை 
பட்டு புழுவாய் 
துடிக்கிறது ஆயுள் !

திரவியத்தை தேடியப்
பசி உடலை அற்ப்பணம்
செய்திட்ட உணர்வு 
தியாகியானது வாலிபம் !

நாடிய வெளிநாடு 
தேடிய செல்வம் 
வறுமையை போக்கும் !
காணலாகும் பிரிவு 
தேடலாகும் வாழ்க்கை !

நபிகள் நாயகம் !

ஞாயிறு, 24 ஜூன், 2012 Category : 1


ஒழுக்கம் ஒன்றே உயர்வாகக்கொண்டார் 
பிறர் விழிக்க அதில் தன்னையே விதைத்தார்  !

மறைமொழியறிந்து அறவழி கடந்தார் 
அது இறைவழியென அதன் வழிப் பணிந்தார் !

சொல்லால் ,செயலால் தனித்தே நின்றார் 
வேதனையும் போதனையும் தந்தாலும் நாடியே  சகித்தார் !

சென்ற வழியில் பாதகம் வந்தும் 
கண்டு அஞ்சி பின் விலகிட மறுத்தார் !

சமுதாயம் சிறக்க சமுத்துவத்தை போதித்தார் 
நற்குணத்தாளையே சமுதாயத்தையே பேணிட்டார் !

இறைத் தூதராகி {நபியாகி }ஒருவராகி சாதித்தார் 
மனித நேயத்திற்கு நாயகமாகியே  வாழ்ந்திட்டார் !

கற்பித்தவருக்கு ,கற்றவராவார் உண்மைஆசான் !
நல்லடியனாய் திகழ்ந்திட்ட இவர் !உண்மை இறை நேசான் !

எங்கே எமது மனித நேயம் !

Category : 0

பொல்லாருலகில் இல்லாரில்லை 
உள்ளார் சொல்வார்  நல்லவரில்லை !

கள்ளவருள்ளார் கல்லாரிள்ளார் 
ஒற்றுமையை போதிக்க ஒருவருமிள்ளார் !

கடவுள் ஒன்று சொல்பவருண்டு 
தெய்வங்களாகும் மதங்களுக்கென்று !

ஏசுப்பிறந்தும் கருணை புதைந்தது !
முகமதுவின் தனித்துவம் ஏகத்துவத்தை இழந்தது !

புத்தரின் ஞானம் சோபிக்கவுமில்லை 
திருவள்ளுவனின் ஓலை கிடைத்தும் சாதிக்கவுமில்லை !

சாதிக்காக நீதிகளானால் வீதிகள் 
தோறும் உருவாகும் போர்க்களம் !

நீயா -நானாவென திரிகையில் 
இருண்ட குளங்களால் உடல்கள் சரிந்திடும் !  

 பிரிந்தசாதிகள் மதங்களை மறந்தால்  
துறந்திடும் பகைமை உதயமாகும் ஒற்றுமை !

மனிதனுக்கென்று ஒருவனே கடவுளானால் ...
ஏற்றமும் தாழ்வும் மனிதனுக்கில்லை பிரிவினை !


நட்புறவை பேணினால் சகோதரத்துவமாகும் 
உறவாய் கருதினால் அங்கு சமத்துவம் பிறக்கும் !

சத்தமும் ,யுத்தமும் பந்த உறவானால் 
மனித நேயத்தால் கருணை மகத்துவம் பிறக்கும் !

இணைந்த மனிதன் பிரிந்திட்டால் ....
சமூகம் அழியும் ,பலச்சமுதாயங்கலுருவாகும் !

புதிய சட்டங்கள் கையில் அதிகாரங்கள் 
பெருகும் மதவாதிகளுக்கு தீவிரவாதம் சிறகாகும் !


உயிரை கொள்வதே பாவமென உணரினால்
சிதைந்த ஒற்றுமையும் இணைந்த உறவாகும் !

ஒற்றுமையை கடைப்பிடிப்போம் 
நல்ல நட்புறவை பற்றிப்பிடிப்போம் !






இறுதி நாளன்று நரகத்தில் கொண்டு சேர்க்கும் ஆட்சதிகாரம் !

செவ்வாய், 19 ஜூன், 2012 Category : 0


எங்கே எமது மனிதாபிமானம் 
தேடலாகும் சமுதாயம் 
வேரறுந்த ஒற்றுமை 
சீர்குலைந்து நிற்கிறது !

உள்ளத்தில் ஈரமின்றி 
இரக்கமின்றி மிருகமாய் 
இனம் மனிதனை 
கொன்று குவிக்கிறது !

வீடிருந்தும் நடுவீதியிலே 
கேட்பார் நாதியின்றி 
விலங்குகளாய் சுதந்திரத்தை 
தேடி உயிரை மாய்க்கிறது !

கணவனைப்பிரிந்த 
மனைவியும் -மகனை 
இழுந்த தாயும் 
பாசத்தால் ஓலமிடுகிறது !
முகவரிமறந்த 
பிஞ்சுகள் பரிதவித்து 
அவல கண்ணீரோடு 
உறவை தேடி ஏங்குகிறது !

வானத்தில் வட்டமிடும் 
கழகுகளும் !-தெருக்களில் 
ஓடும் ஓநாய்களும் 
இரத்தத்தை குடிக்கவே விரும்புகிறது !

மறுமலர்ச்சி நாடும் 
நாடு -விளங்குகளிலான
காடு சர்வாதிகாரத்தின்
பிடியில் வேட்டையாடுகிறது !

விட்டு விட்டு துடிக்கும் நாடி !
கண்டு தவிக்கும் விழிகள்  
ஒரு நொடி  துடிக்க மறுக்கும் 
இதயம் கனத்து நிற்கும்  !

காணும் காட்சிகளால் தீவிர 
வாதத்தை உருவாக்கும் !
ஆட்சி அதிகாரத்தில் அரசாட்சி !
புரட்சியால் ஆள நினைக்கிறது !

மங்கையின் சிறப்பை 
உணர்த்தும் நீதியின் 
புனித கற்பை அற்ப கேவல 
அவலப்பசிக்கு இறையாகுகிறது ! 
தன்னை ஈன்றவள் 
பெண் ஒருவள் என்பதை 
மறந்தும் !பெற்ற தாயின் 
நினைவை துறந்த 
மனித நேயம் !

மண்ணில் புதைந்த கேவலம்  !
சிறகுளாய் விழிக்கும் 
உறவுகள் பிரிவுகளை கொடுக்கும் 
தவிக்கும் தனிமை !

 இறப்பான் விரைவில் ..!
படைத்த கடவுளை
மறப்பவனும் ,மறுப்பவனும் 
மிதிப்படுவான் ஒருநாள் !

கொடூர நரகத்தின்
 பிடியில் விரைந்தோடும்
 காலம் முதுமையை 
சுமக்கும் ஆயுள் !

எவ்வித சர்வதிகாரத்தாளையும்....
வெல்ல முடியாத 
விதி !ஒரு நாள் ,,,,
வந்தடையும்!

 ஆடிய ஆட்டத்தின் முடிவு !
தவறை உணர்ந்தும்!
திருந்த முயன்றாலும் 
செய்திட்ட தவருக்காகும் 
அப்போது சேதாரம்!

செயகூலியால் மிஞ்சியது 
ஆதாரம் சாட்சிகளாகும்!
உண்மை வெள்ளவாகும் 
இறுதிநாளின் அந்நேரம் !

நாட்டிற்காக போராடியவன் 
புரிந்த செயல் !-நல்லறத்தால் 
சொர்க்க வாயிலைடைவான்   
இன்பத்தோடு உலாவருவான் !

கொடுங்கோலாட்சி புரிந்தவன் 
தீய நெருப்பில் எரிவது திண்ணம் ! 

முரண்பாடுகள்!

சனி, 16 ஜூன், 2012 Category : 0


மண்ணை நேசித்து 
முத்தமிட்டு நித்தம் !-
நித்தமாய் சத்தமின்றி விட்ட 
சொட்ட சொட்ட இரத்தம் !

சாதியின்றி,மத பேதமின்றி 
வீதியிலே நீதிக்காக
போராடிய மனிதநேயம் 
கூண்டோடு அடிமைகளாய் ..!

குண்டு துளைத்தும் உறவு
தொலைத்தும் சிறையிலே 
அகதிகளாய் சித்தரவதித்தும் 
விடா..முயற்ச்சியில் ..!

போராளிகளாய் உயிர் 
நீத்தேடுத்து பெற்றுடுத்த
சுதந்திரம் !தேடியும் 
கிடைக்கவில்லை தேடியப்போது !

சுரண்டிட வந்த 
களவாணிகள் விரண்டோடிட 
நிரந்திரமாய் தந்திரங்களிட்ட 
மதவாதிகளின் மந்திரங்கள்!

நாட்டை வேரறுத்து 
கூறுப்போட்டு விற்ப்பனைக்கு 
கூவி விற்று வருகின்ற 
நிலையில் தியாகிகளின் !

சிந்திய வியர்வைத்துளி 
தியாகங்கலாய் யாகங்கள் செய்ய 
வறுமையோடு பிச்சைகேட்டு 
கையேந்துகிறது ஜனநாயகம் !

பண நாயகத்தால் ...தூண்டிவிட்ட
வன்முறைகள் -தீவிரவாதம் 
தீவிரமாய் தலைவிரித்து விளையாட 
வேடிக்கைப்பார்க்கிறது அரசியல்!

வருடா..-வருடமாகும் சுதந்திரம் 
பிறக்கும் நம் தேசிய கோடிக்கு !
ஒரு நாளுக்காவது கிடைக்குமா?
அகிம்சையில் எதிர்நோக்கும் பாரதம் !

துயர்வில் உருவாகும் சந்தோழம் !

வெள்ளி, 15 ஜூன், 2012 Category : 0


உணர இயலா 
உணர்வுகளை உணரும் !
துடிக்கையில் பிறக்கும் 
வலிகள்... துளைக்கும்!

கனக்கும் மனது 
 இரணக்கும் வலிமையைத் 
தாங்கிய பிரசவம் 
சுகத்தை கொடுக்கும்!

சுகப்பிரசவத்தில் 
பிறக்கும் குழந்தை
மறக்கடிக்கும் துயரம் !
இனிக்க  வைக்கும் 

உறவு சிறக்கும் !
துன்பம் மறந்து
 யுகங்களாகும்  சுகங்கள் 
நிறைவு காணும் !

கணவன் -மனைவி 
இன்பத்தில் ..!ஆறுதல் 
தரும் குழந்தை 
ஊக்கத்தை அளிக்கும் 
இனப்புரியா ...பாசம் 

அடுத்த பிரசவத்தை 
நோக்கி ...!

முயற்சி!

Category : 0


தோல்வி உன்னை
 தோற்கடிக்கும் முன் !
தோல்வியை நீ ...
தோற்கடித்திடு 

வெற்றி உன்வசமாகும் 
தன்னம்பிக்கையில் ...!
பிறக்கும் விடா ...முயற்சி 
நிலைக்கும் !

வள்ளல் !

Category : 0


பிறர் வறுமைதனை 
புரட்டிப்பாருங்கள் ! -உண்மை 
உவமைகளை விளக்கிடும் 
ஏழ்மை !

தர்மமே !ஏழைக்கு 
எப்போதும் நீ நன்
 (கு){கொ}டையாகிருந்திடு 
உன் நிழலில் இளைப்பாறும் 
வறுமை !

முகவன் !

Category : 0


என்னுள்ளத்தை திறந்து 
படித்துப்பாருங்கள் அதில் 
இடம்பெற்றிருக்கும் படைப்புகள் 
நான் யார் என்பதை சொல்லும் 
என்னுணர்வுகள் !  

ஆசை !

Category : 0


நொடியொன்றே போதும் 
இறப்பதற்கு !தயாராகவும் 
உள்ளேன்.!என்ன செய்தேன் ?

விட்டுச் செல்ல....!
இருந்த போதே 
செய்ய துடிக்கும் கரம் !
செய்யாதப்போது துடிக்கிறது !
செய்திட்டப்பிறகு 
எதிர்பார்க்கும் மறைவு !
மறைந்தப்பிறகும் எடுத்துக்
 காட்டாய் நிலைக்கும் பெயர் !


அன்றும் இன்றும் என்றும் நினைவுக்கூறும் என் எழுத்து !

செவ்வாய், 12 ஜூன், 2012 Category : 0

என்னைப்படைத்த
கடவுளுக்கு முதல் நன்றி !

பெற்றடுத்த தாய்க்கும் 
சிரமமெடுத்த தந்தைக்கும் 
அரவணைத்த பெரியம்மாவுக்கும் 
தோள்தந்த சகோதரர்களுக்கும் 
தரமுயர்ந்த சகோதரிக்கும்   
   
ஒழுக்கம் கற்பித்த பள்ளிக்கும் 
உறுதுனையாகிருந்த நட்புக்கும் 
நினைக்கும் உறவுக்கும் 
வந்த காதலுக்கும்!
பிரிந்த காதலிக்கும் !

வளர்ந்த திறமைக்கும் 
அறியாமை தோல்விக்கும் 
அறைந்த காவலுக்கும் 
அவமதித்த தீயவருக்கும் !
அள்ளிக்கொடுத்த கவிதைக்கும் 

ஏற்ற வாழ்க்கைக்கும் 
தூணாய் இருக்கும் மனைவிக்கும் 
ஆனந்தம் தரும் பிள்ளைகளுக்கும் 
அருகாமை மாமியாருக்கும் 
பிழைக்கும் தொழிலுக்கும் 

உழைக்கும் முதலாளிக்கும் 
காணும் வாசகருக்கும் 
குறைகூறும் ஞானிகளுக்கும் !
நிறைகானும் அறிஞர்களுக்கும் 
உதவும் சேவர்களுக்கும் !

சிறக்கும் மாணவர்களுக்கும் 
சிந்திக்கும் ஆசிரியர்களுக்கும்
உதவும் கணினிக்கும் 
உயிர்த்தியாகம் செய்யும் எழுதுகோலுக்கும் !
சரித்திரம் படிக்கும் எழுத்துக்கும் !

சகித்துக்கொள்ளும் குப்பைக்கும் 
ஓடாய் தேயும் செருப்புக்கும் !
மானத்தை மறைக்கும் ஆடைக்கும்!
நிழல்தரும் மரத்திற்கும் 
மழையை காக்கும் குடைககும் !

வளங்களாலான பழவகைக்கும் 
நிலங்கலாளான தானியத்திற்கும் 
என்னை சுமக்கும் பூமிக்கும் 
மாய்ந்தால் கொள்ளும் மண்ணுக்கும் 
இருக்கும் முதல் இறக்கும் வரை 

நினைவிற்கொள்ளும் என் எழுத்து 
நான் வாழ்வதை பொருட்டு! 
நடத்தை ,அறத்தை, பொருத்து
அகந்தை விட்டு ,ஒற்றுமையோடு 
வாழ நினைக்கிறேன் ..!

மறைந்தாலும் விடுத்துசெல்லும் 
ஒழுக்கம் நற்பெயரோடு உலாவரவே ஆர்வம்!