Home > செப்டம்பர் 2011

செப்டம்பர் 2011

காதல்..!

வியாழன், 29 செப்டம்பர், 2011 Category : 0

காதல்..!

தேடிப்பார்த்தேன் ...
எங்கும் கிடைக்கவில்லை ..!
விழிகளுக்கு..!

தேடாதப்போது ...
உள்ளம் உணர்ந்த 
உணர்வுகள்..! 

ஆசை ..!

0

ஆசை ..!
சிலையாகவில்லை - நிலையாகவேண்டும் ..!
எனதுப்பெயர்
ஒரு கனமொன்றேப்போதும்..!
இறப்பதற்கு ..!
தயாராகவும் உள்ளேன் ..!
இவ்வுலகை விட்டுச்செல்ல ...!

நான் செய்ததென்ன  ?
இவ்வுலகம் போற்றிச்சொல்லும்..!
எப்போதும்..!
 நிலைத்து நிற்கும் 
எனது பெயர்...!

தீமையும் - நட்பும் ..!

Category : 0

தீமையும் - நட்பும் ..!

பணமிருந்தால் .
பத்தும் செய்யும் ..!
அதுத் தீமை ..!

நற்குணம்
ஒன்று இருந்தாலேப்போதும் ...!
சுற்றும் சுழவாகும் 
நட்பு..! 

உயர்ந்தது நற்குணம்..!

Category : 0

உயர்ந்தது நற்குணம்..!

பிறப்பிலிருந்து ..
இருக்கும்வரை ..!
தேவையானது பணம்..!

இ(ற)(ரு)ப்பினும் ..!
நிலைத்து போற்றிடும் 
நற்குணம்..! 



இவர்களைவிட உலகிலேது சிறந்தது..!

Category : 0

 இவர்களைவிட உலகிலேது சிறந்தது..!

எதையும் இழக்கவில்லை ..
இருக்கையில்...!
எதையும் பெறவுமில்லை ..
பிறக்கையில்..!

கருவைத்தந்த தந்தை ..!
கருவை சுமந்தத் தாய் ..!
கருணைக்காட்டும் உலகும் ..!
இவர்களைவிட உலகிலேது சிறந்தது..!

கெடிகாரம்.!

Category : 0

கெடிகாரம்.! 

பிறப்பு முதல்.. 
இறக்கும் வரை ...!
ஓயாது உழைக்கிறது ..!
தன்னலமற்ற , 
சுய நலம்கருதாத..
கெடிகாரம்.! 

நெறி.!

Category : 0

நெறி.!

ஒழுக்கத்தை பற்றிக்கூற ...
நல்லொழுக்கம் அவசியமில்லை..!
நல்ல மனிதனாகிருந்தாலே ,,,
போதுமானது.!  


முகவன்.!

Category : 0

முகவன்.! 

என்னுள்ளத்தை சிறிது ...
விரும்பிப்பாருங்கள் ...
என்னுணர்வுகள் சொல்லும் 
நான் யாரென்பதை ..!

நாணயம்.!
நாணயம் பெறும்போது ...
மட்டுமல்ல நாணயம் தேவை.. !
அதை திருப்பி திருப்பி 
தருவதற்காகவும் தேவை
நாணயம்.!  

வள்ளல் .!

Category : 0

வள்ளல் .!

வறுமையை புரட்டிப்பார்த்தால் ...
அதன் உண்மை உவமைகளை ...
எளிமையோடு எடுத்துரைக்கும் ..!

நீ .. எப்போதும் ..!
நன்(கொ)(கு)டையாகிரு ...
உன் நிழலில் ..
இளைப்பாறும் ஏழ்மை .! 

கவிதை

Category : 0


கவிதை 
மறுப்பு.!

என் இதயத்தில்...
அவளிட்ட கோளத்தால்....
நுழைவாயில்..எழிலானது.!
கண்ணீரை விரும்பாத...விழிகள்.!

தானம் செய்வோம்-வாழவைப்போம்.!

நித்தம், நித்தமாய்...
சாகும் மனிதனுக்கு..
உயிர் செய்யும் யுத்தம்.!

வெட்டுகளில்லை, கட்டுகளில்லை...
ஏதுமின்றி...!
வாழும் வாழ்கைக்கோர்..
புது அர்த்தம்.!

கீரல்பட்டால் சிந்தும்
சிறுத்துளி இரத்தத்தை
தானமாக்குவோம்.!

ஆயுள்வரை வாழவைக்க...
தானமிட்டு.!பலரை..
மரணத்திலிருந்து..
மீட்டெடுப்போம்.!

அன்றும் - இன்றும்.!

அன்று மரம் நட்டார்கள்.!
நாடு செழிப்பதற்க்கு..!
அதை... வெட்டுகிறார்கள்..!
தான் செழித்து.. நாட்டை 
அழிப்பதற்கு.!

தேடல்கள் !

அவள் பயணிக்கும்
அதே பேருந்தில்தான்..
தினம்.... நானும்
 பயணிக்கிறேன்...!
இறங்குமிடமறியாமல்.!

பூங்காவணத்தில்..
பூர்த்த பலப்பூக்கள்..!
அழகாய் எதுவும்
பூர்க்கவில்லை..புன்னகையோடு...!

இவள் மட்டும்
மனதில்,,,
பூர்த்தவளாய்....!

சில நேரம் ...
பயணம் சுமையாகும்..!
விரும்பையில்..மனதிர்க்கு
இதமாகும்.!

இப்போது...
எப்போதும் சுகமாகிறது.!
கற்பனையோடு...
உலாவருகையில்...
பேருந்து இரதமாகிறது.!

ஒரு நாள் வரவில்லை..!
வரவேற்காத..
வாரம் ஒன்று
 ஞாயிற்றுக்கிழமை..!

உறக்கமின்றி...
நிம்மதியின்றி..!
காணாத கண்கள்..
வருதத்துடன்...
வாடிய உள்ளம்.!
பலப்பேருந்து...
நிழற்குடயிலும்..
ஆவலோடு கல்லூரி..
வாசல்களிலும்..
காதிருக்கிறது .

அவள் வருவாளென்று.. .
தன்னம்பிக்கையோடு..!
காத்துக்கொண்டிருக்கும் 
என் கால்கள்.!







நினைவுகள் .!

Category : 0

கருவாக சுமக்காவிட்டலும் ..
கருணையோடுதான்
 மகனாக ஈன்றெடுத்தாள்...!
என்னை   வளர்த்தத் தாய்..!

அவளென்னை விட்டு
 பிரிந்தாலும் .... மறைந்தவளை!
என்னிதயம் சுமக்கிறது ..! 

கனவில் வாழும் ...
நினைவுகள்...!

மனிதநேயம்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011 Category : 0

உயந்தது நற்மனித நேயமே...!

சம்பிரதாயம் வேண்டாம்!
வீண் சஞ்சலங்கள் வேண்டாம்!
சமுத்துவம் பிறக்க ....
தேவை சகோதரத்துவம்.!

விவாதங்கள் வேண்டாம்!
வீண் வினையங்கள் வேண்டாம்!
நற்கருமங்கள் செய்திட.....
தேவையானது நல்லதோர் மனமே...!

உதவிட நினைப்போர்க்கு...
சிரம்பணிந்து வரவேற்போம்.!
வறுமைதனை அகற்றுவோர்க்கு...
கைகோர்த்து பலம் சேர்ப்போம்.!

அறியாமைகளை விறட்டுவோர்க்கு
ஊக்கத்தை அளித்திடுவோம்...!
தீண்டாமையை கொளுத்துவோர்க்கு...
"தீ" யாக நாமிருப்போம்...!

மதம் மனிதனை வாழவைக்காது!
இறக்க குணமொன்றிருந்தால்...
விழுப்பம் மதத்தை ஆதரிக்காது...!
உயர்ந்தது நற்மனித நேயமே....!

கவிஞர் இ. முபாரக்.

கவிதை

Category : 0

வசந்தம்
வந்தது என்னுள்ளே...!
புது வசந்தம் பிறந்தது!
இன்பம் நிறைந்தது.!

ஏந்திய கரங்கள்
பூர்த்தது கண்கள்!
கண்ட மாத இதழின்
மேல் அட்டைப்படம்.!

களித்த கண்களோ..
கனத்து குளமாகியது!
கலங்கி... கண்ணீர்
துளியாகி சிதறியது!

எதிர்பார்த்த உள்ளத்தை
உறுகிட வைத்தது!
கண்ட காட்சியினால்...
உலைதல வைத்தது!

நமக்கு இங்கே...
பிறிவு மட்டும்...!
தொடர்ந்திடும் நல்லுறவும்
பண வரவால்...
மன நிறைவும் தருகிறது!

வறுமையின்றி...
வாழ்க்கையோடம்
வளமுடனும் - நலமுடனும்
உருண்டோடிக்கொண்டுள்ளது!

நமக்கோ... காலம் தவறாது
மூவ் வேளைச்சோறும்
தாகத்திர்க்கு தண்ணீரும்
அளவற்று கிடைக்கிறது!

தேவைக் கேற்ப்ப ..
நாகரீக வண்ண வண்ண
உடுத்தும் உடைகள்
கிடைக்கவே செய்கின்றது!

சொமாலிய மக்களின்
நிலமையோ..- அவர்களின் கெதியும்!
நாளுக்கு நாள்
ஒவ்வொரு நொடியும்
யுகங்களாகிறது.!

வறுமயினாளே...
அவர்களின் வாழ்க்கை
போர்க்களமாக..
மாறி வருகிறது.!

சின்னஞ் சிறு குஞ்சுகளின்
கண்ணீர் குவலம்!
முடமாகிடும் ...பிஞ்சுகளின்
பெரும் அவலம் .!

உயிரற்ற சடலங்களாக
விழுந்து சரிகிறது.!
பிணமாகி .. புழுவுக்கு
உணவாகிறது.!

எம் சமுதாயமே...
நற்மனித நேயமே ...
இவர்களுக்கு.
நற்கருணைக்காட்டுங்கள்!
வறுமையினை மீட்டுங்கள்!

தட்டுங்கள் ....
பலரின் உள்ளக்கதவை
திறந்திட வைத்திடுங்கள்
அவர்களின் மனக்கதவை!

நெஞ்சத்தினுள்ளே ..
சிருத்துளி.. ஈரமிருந்தால்...!
அவர்களுடைய ! - அந்த
சிறமத்தை எண்ணிப்பாருங்கள்!

மனமுவந்து உதவிட
முன் வாருங்கள்!
அவர்களை உயர்த்திட
பேராதரவைத் தாருங்கள்.!

அள்ளிக்கொடுக்க..
இயலா விட்டாலும்...!
கிள்ளிக்கொடுக்காவது
முயன்றிடுவோம்.!

இவன்.,

கவிஞர் இ. முபாரக்.

(அல்- இஃலாஸ் மனித நீதிப்பாசறை& தமிழோசை
கவிஞர்கள் குழாம்)

வியாழன், 15 செப்டம்பர், 2011 0


 உயிரை கொடுப்பவனும் அவனே
உயிர் பிய்ப்பவனும் அவனே !
கவலை மறந்திடு நண்பா
கடவுளை நினைத்திடு !

உன் கடமைகளை செய்திட மறவாதே
காண பல கண்கள் உள்ளதையும் மறவாதே !

உள்ளம் உயர்வாக 
நீ  நினைத்ததினால்...
இவ்வுலகம் நலம்பெற
 உன்னை பிரார்த்திக்கிறது!

தவறுகள் நடப்பது இயல்பே ...
மறப்பதும் மன்னிப்பதும் மரபே...!

கர்வம் கொண்டிருந்தால்...
உன்னுள்ளே அது அழிக்கும் !

எதையும் மறந்து...
 நீ நடந்தால் ...
உன் வளர்ச்சிக்கு
அது வழி வகுக்கும்!

நல் உள்ளம்
உன்னிடம் உள்ளதினால்
என்னுள்ளத்தில் உள்ளதை
கூறுகிறேன் ...!

பல்லாயிரம் வருடங்களுக்கு ...
மேலாக ,, உன் எழுத்துகள்
 நிலைத்திடவே  பார்க்கிறேன் ..
மனமுவந்தும் மன்றாடியும்  வேண்டுகிறேன்!

தமிழ் பலகவிகள் நாம் படிக்க
விரைவில்,,,
உன் செவியில் 
அது ஒளிக்கும் !

சிகிச்சை இன்றி 
குணமாக ...
அந்த மருத்துவரின்
மருந்து சிறக்கும் !

வருத்தத்தில் இருக்கும்
 உன் குடும்பம்
இன்பத்தில் மிதக்கும் !

மருத்துவர் தந்த 
நாளை எண்ணி
வருந்தாதே நண்பா !
தன்னம்பிக்கை இழுக்காதே ...!

உன் குடும்பத்தில்
நற் சேதியை சொல்லி
வருத்தத்தில் இருந்து
முதலில் அவர்களை நீ  மீட்டு !

கடவுள் மீது பாரத்தைப்ப்போடு  
அவன் நிச்சயம்
நற் மனிதனை காப்பான்
கவலை மறந்திடு!

நீ நலமுடன் வளமுடன்
வாழ ,,,
உளமாற வாழ்த்தி
வேண்டிக்கொள்ளும்!

கவிஞர் இ.முபாரக்.  

வியாழன், 1 செப்டம்பர், 2011 Category : 0

கற்பதும்  பிறரை கற்பிப்பதும்..
ஒவ்வொரு வருக்கும்  கடமையாகும் !
குடும்பமென்பதோர் நூலகமாகும்   
வாழ்க்கை என்பதோர் படிப்பினையாகும்  !
படித்தால் மட்டுமே மேதையாகலாம்
அறிந்தால் மட்டுமே அறிஞராகலாம் !