> >
Posted on வியாழன், 5 ஜூலை, 2012 | No Comments

நிலவுப்பாட்டு !

  • அவப்பார்க்கையில அழகா ..!
நடக்கையில தெரிஞ்சா....!
மனசுக்குள்ள பதிஞ்சா ...
மெதுவாக நுழைஞ்சா ..!
மெல்ல மெல்ல...!

  • அவத் தேவதையா இருந்தா ...
புதுக் கவிதையா பிறந்தா ...!
நல்ல கற்பனைக்கு மருந்தா ....!
கனவில ...வளர்ந்தா....!
செஞ்சா...தொல்ல தொல்ல ...!

  • அந்த நிலவப்பார்த்து ரசிச்சா ...!
தனிமையில தவிச்சா ...!
சிந்தனையில நடிச்சா....
நாவிலப் படிச்சா....
என்னத் தப்புச் சொல்ல...!

  • உள்ளுக்குள்ள உலர்ந்தா .... 
இதயத்தில உருவமாகி தளர்ந்தா ..
அங்கதத்தில கலந்தா ....
காதலாகி மலர்ந்தா....
அதுவோர் வருத்தமே இல்ல !

  • நொடி விழியில வந்தா...
வழி நொடியில மறைஞ்சா...
உள்ளத்தில கடைஞ்சா....
மெழுகாக்கி உருக்கி கிட்டு 
நினைவா கரைஞ்சா ...அன்புத்தொல்ல !

  • பகலில் தேடிப்பார்த்து நொந்தா ...!
பொழுதை முடிக்க வந்தா...
கண்ணை பறிக்க நின்றா ..!
கொஞ்சிடும் ஆகினா கண்றா...!
வியக்க வைத்தவளே ...!

  • அவ மவுனமா சிரிச்சா ...
உலகத்திற்கே வெளிச்சம் ...
கோபப்பட்டு மறைஞ்சாலும்
தேயப்பிரையாகி தரும் வருத்தம்   

  • இறங்கி பூமியில நடந்தாலும் 
ஆனந்தத்தை தரும் உறக்கம் !
ரசிப்பவனுக்கு கவிஞனாக்கி 
வளர்ப்பதுதான் வழக்கம் !

  • இவ இயற்கையின் வரமா....!
செஞ்ச சிர்ப்பியின் கரமா !
அதனைவிடத்தரமா ...
எதளையும் குறையுமில்ல ....
இறைவனின் படிப்புல குற்றமில்ல....!




Leave a Reply