> > நான் படும் பாடு !

நான் படும் பாடு !

Posted on சனி, 30 ஜூன், 2012 | No Comments


கிட்ட தட்ட மணி 
பத்தை எட்ட 
வியாபாரம் முடித்து 
கூட்டிட சொன்னது கணக்கு !

கூட்டியதில் சில
நேரம் அதிகரித்து 
எழுத மறந்த விற்பனை !
பல நேரம் குறைந்து 
காலத்தை வீணாக்கி 
சிந்தித்திட ...!

இறுதியில் 
முதலாயின் பையில்
சிறிது சில்லறை 
சென்ற இடமறியாமல் 
தவிக்கையில் முடிவாய்
முடிவாகிய கணக்கு !

நள்ளிரவில் முடித்து 
ஓடோடி வர ....
வீதியோரம் ஓநாயை 
அஞ்சி பதற்றத்தோடு 
கடந்து விடுதியிலடைய ...

பூட்டிய அறை இருண்டு 
மவுனம் காக்கும் !
சாப்பாடு சட்டிகளில் 
மீதமிருந்தும்! ருசியாக 
கிடைக்குமா எண்ணுகிறது 
நாக்கு !

கட்டிலில் காத்திருக்கும் 
கணினி வரவை 
எதிர்நோக்கிட திறந்து 
அமர்ந்து சிந்தனைகளை 
பதிவு செய்ய காத்திருக்கும் 
கண்கள் !

அறிவுக் கூட்டை 
திறக்க நினைக்கும் 
சாவியான பதிவுகள் 
சில நேரம் என்னின் 
சிந்தனைப் பூட்டியே 
உடைக்கும் உறக்கம் !

நான் என்னிடம் 
சொல்லாமல் உறங்கியும் 
அதுவாக விழிக்கும் 
உணர்வு வேகமாய் 
ஓடும் கடிகாரம் 
செய்யும் பணியை குறிக்கும் !

அவசர அவசரமாய் 
குளியலறை நுழைந்து 
தேனீருடன் முடித்து 
கெளம்பும்முன்  ஒலிக்கும் 
கைப்பேசி விரைந்து 
அழைக்கும் வாடிக்கையாளர் !

கண் எரிச்சலோடு 
சென்று சிறிது 
ஓய்வெடுக்க நினைத்தால் 
சுத்தம் செய்யக் 
காத்துக்கொண்டிருக்கும் 
வியாபாரஸ்தலம் 
குப்பைக்கூளமாய் !

 மெருகேற்றி அலங்கரித்து
சுத்தமாக்கினாலும் அழக்காக்கும் 
காலணிகள் !வராதே 
சொன்னாலும் வீணாகும் 
வியாபாரம் !

நல்ல விற்பனை செய்ய 
நினைத்து ஓடோடி 
வாங்கி வித்து விட்ட 
பெருமூச்சு !பேச்சாக்கி 
வாங்கிப்பெற்ற சந்தோசம் !

சிந்தனைகள் விழுதுகளாய் 
எழ ...தொடுத்த எழுதுகோளின் 
போராட்டம் !மாராட்டமாய் 
அவ்வப்போது தடுத்து 
நிறுத்தும் வீண்தண்டவாட்டம் 
வாடிக்கையாளர்கள் !

தேரோட்டமாய் இழுத்து
பிடித்து சிதறிய 
எழுத்துக்களை தேக்கி 
எழுது முடித்து 
பதரப்படியே கூறிட  ...!

பிறர் முகம் சுழிக்க 
கேலி செய்தாலும் 
வெளியாகாத கற்பனை 
படைப்புகளாய் உதிர
வைத்து அழகுப்பார்த்து 
ரசிக்கும் ரசனை !

பிறருக்கென 
உரியதாக்குகையில் 
அளவுக்கடந்த சந்தோசம் 
எல்லை மீறி செல்கிறது 
ஆனந்தத்தில் !

முதலாளி திடீர் நுழைய 
எழுதிய எழுத்துக்கள் 
கலவானித்தனமாய்  மறைத்து 
நினைத்தப்பாதி காற்றில்விட 
மீதி காகிதத்தில் முடிவின்றி
மறந்த தொடர் !

நேரம் தவறாது 
பேசும் மனைவி 
பிரிவினை மறக்க 
ஆறுதல் தரும்
 குழைந்தைகள் !பாசம் 
பொழியும் பெற்றோர்கள் !

வாசத்தால் வறுமை
இருந்தும் துறந்த 
கடினங்கள் !வருந்தாமல் 
ஊக்கமளிக்கும் நட்பு !
படித்து விமர்சனம் கூறும் 
வாசகப்பட்டாலம் !

சுட்டெரிக்கும் வெயிலில் 
உருகிட வைக்கும் குளிரில்
நாடிவந்து -ஓடிவந்து 
ஓய்வின்றி மயக்கமாய் 
குட்டி உறக்கம் !

சமைக்க வேண்டும் 
நினைத்து எழுப்புகையில் 
மூட்டையாய் கடக்கும் 
அழைக்கு மூட்டைத்துணி 
துவைக்க அழைக்கும் !

முடியாமல் சலவை
செய்துப்போட்ட 
 சட்டை மின்மினுக்கும் 
அன்று மட்டும் 
அலுப்போடு !


மாதம் கடந்தால் 
சம்பளம் வாங்கும் முன் 
வீட்டு வாடகை பாக்கி !
தவறாது கட்டினால் 
மட்டுமே மின்சாரம் !

உரிய நேரத்தில் 
காசோலை வங்கியில் 
விழாவிட்டால் 
கோபப்படும் சம்சாரம் !

இப்படியே உருண்டோடும் 
என் பணி !சிலத்தருணம் 
என்னை சுற்றி 
பூமி சுற்றுவதில்லாமல் 
அதைச் சுற்றி நான் 
ஓடுவதாகவே தெரிகிறது !

ஏதுவாகிருந்தாலும் 
சலிக்காமல் ,மலைக்காமல் 
தன்னம்பிக்கையோடு 
உருண்டோடும் வாழ்க்கை 
பூமி நிற்கும் ஒருநாள் !-

என் மூச்சு பிரியம்போது !
அதுவரை ஓயாது 
ஓடிக்கொண்டிருக்கும்
தொடரும் செயல் !
 
நோயின்றி ,தொய்வின்றி 
 இருந்தால் வளமாகும் 
வாழ்க்கை இலக்கை 
நோக்கி செய்யும் 
பயணம் வெற்றிப்பெறும் !

பஞ்சத்தை தாங்கிப்பிடித்து 
வறுமை போக்கிட்டால் 
என் வாழ்க்கைக்காகும் 
வசந்தம் துயரத்திர்காகும் 
மறுமலர்ச்சி !





Leave a Reply