> > தந்தையின் அவல நிலை !

தந்தையின் அவல நிலை !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


குழந்தைகளை பிரசிவித்து 
அங்க்கீகாரம் அடைந்திட
மிதக்கும் இளமைத துடிப்பு
வேகமாய் கடந்தோடும்
திரவியத்தை தேடும் !

கட்டத்தை கடன்வாங்கி
மானத்தை அடகு வைத்து
மானத்தை விற்றாவது காத்திடும்
குடும்பம் பாதுகாத்திடும் திறமை !

போதனைகள் பலக் கற்றாலும்
வருத்தங்கள் உலுக்கினாலும்
துன்பத்தை சகித்து துயரேற்று
கடந்தே சிகரத்தை தொடுபவர் !

வாலிபத்தை அடுப்பேற்றி
உணர்வுகளை வறுமையின்
உலைக்குள் எரியும் விறகாய் .....
தணித்திடும் பசிக்கு புசித்திடும்
இளமைக் காலம் மகிழ்ச்சி பந்திக்கு
முந்தி ஆயுளை இறைப்பவர் !

பொருளாதாரம் நிமிர்த்திட்டு வளர்ச்சியோடு
உயர் சாதனையை எட்டிப்பிடித்து தானொரு
மழலையாய் மாறிப்போகும் காலம்
உன்னத போதனை சொல்லால் ,செயலால்
பாசத்தை உதிர்க்கும் மதிப்பு குறையும்!

அரவணைக்க உலகம் மறுக்கும்
தருணம் நாட்களை நினைக்கும்
வருணம் கணிதமாகும் நாட்களுக்கு!
விவேகமாய் செயல்பட்டு வேகமாய்
செயலிழந்து மூலையிலே முடங்கும் !
ஊனமாகுகையில் விரும்பியே கேட்கும்
மரணம் வருத்தத்தோடு தழைக்கும்
அந்த நாளை எதிர்நோக்கும் !

Leave a Reply