கருச் சிதைப்பு !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
இன்பத்தின் மோகத்தால்
பெருக்கெடுத்தது வி(வெ)ந்துநீர்
சுகமிழுந்த கண்ணீராய்
பாரத்தோடு சோகமாய்
கதறுகிறது வயிறு !
சிசு உலகத்திற்கு
பாரமானதால் கொசுவாய்
கொன்றிடவே சிந்தனையில்
இரக்கமற்ற மனிதக் "கரு"
அறுத்து உமிழ்ந்திட்ட
மெச்சிலில் துயர்வோடு
வாழ்கிறது அனாதையாய்
தனித்து நிற்கும்
குப்பைத்தொட்டி!