> > கடலின் நண்பன் மீனவன் !

கடலின் நண்பன் மீனவன் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

கடலின் நண்பன் மீனவன் !

கடலுக்கு சென்றால்தான் 
கரையேறும் குடும்பம் கரையேத்திடும் 
திறமை வளர்சிக்காகும் பெருமை
வறுமையலையை தாக்குப்பிடித்து
பஞ்சத்தை எதிர்த்தால் மட்டுமே
இன்பத்தின் அருமை !

இயற்கை கண்ணீர் வடித்தால்
கரிக்கும் உப்பு கருவாடாக்கி வதைக்கும்
நீந்தும் பசி .....!- வசந்த வாழ்க்கை கடல்
சுமக்கும் மீனவனின் ஆழ்ந்த துயரத்தை
மீன்கள் மட்டுமே துடைக்கும் !

திசை மாறிப்போனால் எல்லை சுட்டு
பொசுக்கும் கிடைக்காமல் திரும்பிட்டால்
வாழ்க்கைத்தானே கசக்கும் !-கொழுத்த பணம்
பயிலிருந்தால் தினம் அகம்தானே மணக்கும்
மகிழ்ச்சியோடுதானே இல்வாழ்க்கை ருசிக்கும் !

Leave a Reply