> > வேதனை ""!

வேதனை ""!

Posted on புதன், 12 டிசம்பர், 2012 | 2 Comments

வேதனை ""!

சாதனையாளர் 
எவரென்றறியாது 
ஏற்றிட்டொருவனை 
உயர்த்தியே .......
புகழாடுகிறது 

தன் பிறப்பை 
மறந்து பெற்றிட்ட 
தாயை துறந்த 
மானுடம் இன்புற்றே 
கொண்டாடுகிறது 
தீவிர இரசிகனென்று 

குடும்பம் மறந்த 
குடிமகன் குடியை 
இழந்தான் பொழுது 
போக்கிட்ட திரை 
விலகவில்லை 

வறுமையில் வீழ்ந்த 
போக்கு இருளை 
நீக்கவில்லை
வாழ்க்கையில்  
எரியாத விளக்கு 

வளிமையிழந்து எரிகிறது
 குடும்ப சுமையோடு 
கலாச்சார சீரழிவில் 
விரையமாக்கும் 
இளமை  !

Comments:2

  1. வணக்கம்!

    நிந்தனை வாழ்வைப் போக்க
    நெருப்பினைக் கண்கள் கக்கும்!
    சிந்தனைத் துளிகள் கண்டு
    சிவந்தன நெஞ்சம்! தோழா!
    சந்தனக் காட்டில் தோன்றித்
    தண்ணிள நீரில் நீந்தித்
    தந்தன பாடும் என்றன்
    தமிழினில் வாழ்த்து கின்றேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
  2. நன்றிகள் சகோதரர்
    பாரதியின் நேசரே '''''
    சிறுக் கவியின் உச்சுதனை
    முகர்ந்த வாசகரே ""மகிழ்ச்சி !
    உலகைக் கண்டு நகைக்கத்தான்
    விழைகிறது என்னெழுத்தார்வம்
    கொந்தெளித்து எழுகிறது
    அடப்பாவிகளே ....பாரதி
    வாழ்ந்த மண்ணில் இன்னுமா
    அப்பாவிகள் வாழ்கிறார்களென
    வருந்தச் செய்கிறது மானுடத்தின்
    விழிந்திடா செயல்கள்
    கவலையைத் தருகிறது !

    பதிலளிநீக்கு