> > குவைத் வசந்தம் மாத இதழுக்கு அனுப்பபட்டக் கவிதை .

குவைத் வசந்தம் மாத இதழுக்கு அனுப்பபட்டக் கவிதை .

Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011 | No Comments

குவைத் வசந்தம் மாத இதழுக்கு அனுப்பபட்டக் கவிதை .
வாருங்கள் உயர் சமுதாயமே அதரவுத்தாருங்கள் !
"கண்டால் மனித நேயம்  உருகும்" !"கதறும் பஞ்சம் "விடும் கண்ணீர் ஓலம் சோமாலியா !


வசந்தம்
வந்தது என்னுள்ளே...!
புது வசந்தம் பிறந்தது!
இன்பம் நிறைந்தது.!

ஏந்திய கரங்கள்
பூர்த்தது கண்கள்!
கண்ட மாத இதழின்
மேல் அட்டைப்படம்.!

களித்த கண்களோ..
கனத்து குளமாகியது!
கலங்கி... கண்ணீர்
துளியாகி சிதறியது!

எதிர்பார்த்த உள்ளத்தை
உறுகிட வைத்தது!
கண்ட காட்சியினால்...
உலைதல வைத்தது!

நமக்கு இங்கே...
பிறிவு மட்டும்...!
தொடர்ந்திடும் நல்லுறவும்
பண வரவால்...
மன நிறைவும் தருகிறது!

வறுமையின்றி...
வாழ்க்கையோடம்
வளமுடனும் - நலமுடனும்
உருண்டோடிக்கொண்டுள்ளது!

காலம் தவறாது
மூவேளைச்சோறும்
தாகத்திர்த்திடும்  தண்ணீரும்
அளவற்று கிடைக்கிறது!

தேவைக் கேற்ப ..
நாகரீக வண்ண வண்ண
உடுத்தும் உடைகள்
கிடைக்கவே செய்கின்றது!

சொமாலிய மக்களின்
நிலமை நாளுக்கு நாள்!
நொடிக்கும் ஒவ்வொரு நொடியும்
யுகங்களாகிறது.!

வறுமயினாலே ...
அவர்களின் வாழ்க்கை
போர்க்களமாக..
மாறி வருகிறது.!

சின்னஞ் சிறு குஞ்சுகளின்
கண்ணீர் குவலம்!
முடமாகிடும் ...பிஞ்சுகளின்
பெரும் அவலம் .!

உயிரற்ற சடலங்களாக
விழுந்து சரிகிறது.!
பிணமாகி .. புழுவுக்கு
உணவாகிறது.!

எம் சமுதாயமே...
நற்மனித நேயமே ...
இவர்களுக்கு.
நற்கருணைக்காட்டுங்கள்!
வறுமையினை மீட்டுங்கள்!

தட்டுங்கள் ....
பலரின் உள்ளக்கதவை
திறந்திட வைத்திடுங்கள்
அவர்களின் மனக்கதவை!

நெஞ்சத்தினுள்ளே ..
சிருத்துளி.. ஈரமிருந்தால்...!
அவர்களுடைய ! - அந்த
சிரமத்தை எண்ணிப்பாருங்கள்!

மனமுவந்து உதவிட
முன் வாருங்கள்!
அவர்களை உயர்த்திட
பேராதரவைத் தாருங்கள்.!

அள்ளிக்கொடுக்க..
இயலா விட்டாலும்...!
கிள்ளிக்கொடுக்காவது
முயன்றிடுவோம்.!

இவன்.,

Leave a Reply