> >
Posted on சனி, 15 அக்டோபர், 2011 | No Comments


அழிவை நோக்கி ஆராய்ச்சி



உலக அழிவுக்கு..
பாதகமளித்திடும்..
மனிதனின்
ஆராய்ச்சி.!

அறிவியல்
முன்னேற்றங்கள்
கண்டிடும்..அறிவியல்
வளர்ச்சி.!

ஊனப்பிறவிகளாய்..
மானிடம்.!-அறிய
கண்டு பிடிப்புகளாய்
மருந்து.!

வியப்பிளாழ்த்திடும்
பலப் புதிய ...
நோய்கள்.-
பூமியில்.!

விண்ணில்
 சாதனை தொடக்கம்.!
மண் புதையும்
வேதனை.முற்று!

சுற்று சூழலைக்காக்க சூளுரைப்போம்.!


மண்ணிலிருந்து
விண்ணைத்தொட்டது
விஞ்ஞானம்.!

பூமியின்
சேட்டையால்
ஓசோனிலோட்டை.!

சீர்கெட்டு
கேடு விளைவித்தது
மாசுக்கேடு..!

கட்டிய வீடு..
வெட்டியக்காடானது
விறகுக்கட்டை.!

சாய்ந்துறங்கிய
நிழல்..வெட்டவெளி
பாலைவனமானது.!

சுடுகாடானது
காடுகள்
நி(ர்)(று)வனமானது.!

தொழிலுட்பமானது
அனுவுலை..
உ(ற்)(ரு)பத்தி.!

சிறு உதவியது
பொசுங்குவதற்காகிய
ஊதுவத்தி.!

புகை-
வாகன(ப்)ம்-
போக்குவரத்து!

நெரிசல்..
விரிசலானதால்..
புகைத்தது..!

புகை
உடலுக்கு பகை
பூமிக்கு.!

சிறந்தது மூலிகை
மகத்துவமானது
மருந்துவம்.!

உருவானது
பல நோய்கள்-முன்னேறிய
மருந்து.!

யுக்திகளானது!
எரிவாயு சக்தி
எரிந்தது ,,

கருத்த கதிர்வீச்சால்
கருகியது
மேகம்.!

ஏற்றமும்-தாழ்வும்
மனித இனத்தில்..!
போர்க்களமாய்..!

பிளந்த பூமி..
கண்டுஇரசித்த
வானவேடிக்கை.!

கிழிந்த விண்திரை
திகைப்பை..
வெளிப்படுத்தியது!

தீய..-கதிர்-
அணுசக்தியால்
ஓட்டையானது.!

கற்ற ஞானம்
மரம்..
போதித்தது.!

கற்றிட..கட்டிட
பள்ளிக்கூடங்களின்று
போதிக்கிறது!

பெற்ற ஞனம்
போதையானது.!
மதுபானம் மேதையானது.!











Leave a Reply