> > எங்கே எமது மனித நேயம் !

எங்கே எமது மனித நேயம் !

Posted on ஞாயிறு, 24 ஜூன், 2012 | No Comments

பொல்லாருலகில் இல்லாரில்லை 
உள்ளார் சொல்வார்  நல்லவரில்லை !

கள்ளவருள்ளார் கல்லாரிள்ளார் 
ஒற்றுமையை போதிக்க ஒருவருமிள்ளார் !

கடவுள் ஒன்று சொல்பவருண்டு 
தெய்வங்களாகும் மதங்களுக்கென்று !

ஏசுப்பிறந்தும் கருணை புதைந்தது !
முகமதுவின் தனித்துவம் ஏகத்துவத்தை இழந்தது !

புத்தரின் ஞானம் சோபிக்கவுமில்லை 
திருவள்ளுவனின் ஓலை கிடைத்தும் சாதிக்கவுமில்லை !

சாதிக்காக நீதிகளானால் வீதிகள் 
தோறும் உருவாகும் போர்க்களம் !

நீயா -நானாவென திரிகையில் 
இருண்ட குளங்களால் உடல்கள் சரிந்திடும் !  

 பிரிந்தசாதிகள் மதங்களை மறந்தால்  
துறந்திடும் பகைமை உதயமாகும் ஒற்றுமை !

மனிதனுக்கென்று ஒருவனே கடவுளானால் ...
ஏற்றமும் தாழ்வும் மனிதனுக்கில்லை பிரிவினை !


நட்புறவை பேணினால் சகோதரத்துவமாகும் 
உறவாய் கருதினால் அங்கு சமத்துவம் பிறக்கும் !

சத்தமும் ,யுத்தமும் பந்த உறவானால் 
மனித நேயத்தால் கருணை மகத்துவம் பிறக்கும் !

இணைந்த மனிதன் பிரிந்திட்டால் ....
சமூகம் அழியும் ,பலச்சமுதாயங்கலுருவாகும் !

புதிய சட்டங்கள் கையில் அதிகாரங்கள் 
பெருகும் மதவாதிகளுக்கு தீவிரவாதம் சிறகாகும் !


உயிரை கொள்வதே பாவமென உணரினால்
சிதைந்த ஒற்றுமையும் இணைந்த உறவாகும் !

ஒற்றுமையை கடைப்பிடிப்போம் 
நல்ல நட்புறவை பற்றிப்பிடிப்போம் !






Leave a Reply