> > கவிதையின் சிறப்பு !

கவிதையின் சிறப்பு !

Posted on வியாழன், 12 ஜூலை, 2012 | No Comments


கவிதையின் சிறப்பு !








என்றென்றும் மாறா குறையும் 

மனம் நிறைந்த பொக்கிஷ 
குவியலாய் ...இதயத்தில் 
புதையலாகிருக்கும் நிறைந்த பெட்டகம்!

இளமைக்குள்ளும்,முதுமைக்குள்ளும் 
ஈரெடுத்து எண்ணத்தில் செடிக் ,
கொடியாய்..!பீரிட்டு முளைக்கும் !
அழகு மொட்டாய் தோற்றமளிக்கும் !

மங்கையின் தலையிலே மெருகேறி 
உள்ளத்தில் குடியேற இதயம் 
பூக்க தரும் ஆனந்தம் கற்பனையில் 
சிறகாக விரிக்கும் மலரின் இதம் !

காணும் கண்களுக்கு கவர்ந்திழுத்து 
உணர்வுக்   குவியலின் தீண்டுதல் !
பதுமையாய் தொட்டு தாலாட்டி 
உறங்க வைத்து அழகு பார்ப்பது!

அதையேட்டிலே விடையாக சொல் 
நடையாக புதிர் எழுத்துக்களாய் 
உதிர்ந்த சொற்கள் மவுனமாய் 
விழிகளுக்குள் பிரம்மிக்கும் பிரகாசம் !

தொகுப்பாய் தலைனிமிருகையில் சிறப்பாய் 
நிலையாகும் வெண்பாக்கள் பண்பினை 
விளக்கும் விளக்கம் அடைமொழியாய்...
எழுச்சி பொலிவுத்தரும் பதிவு !

படைப்பாளனுக்கு  நெருங்கிய உறவாகி 
சிந்தனையில் தவழ்ந்து ,நிமிர்ந்து 
மழலை மொழியின் இனிமை !
எதகமொனையோடு அடங்கிய அடக்குமொழி !

வலிமையோடு இளமை மாறாத 
புத்துணர்வு எழுத்தணிவகுப்பு
தந்திடும்  வியப்பு கருத்தாகும் 
வே{ர்}(றொ)ன்றுமில்லை இதனின்தனிச் சிறப்பு ! 


Leave a Reply