> > நண்பன் உயிரின் இருப்பிடம் !

நண்பன் உயிரின் இருப்பிடம் !

Posted on செவ்வாய், 17 ஜூலை, 2012 | No Comments




நண்பனே....நண்பனே பழக்கத்திற்கு அளவில்லையே ...!
அன்பிற்கு அணைப்போட்டால் பண்பாலே உடைப்பவனே !
வழக்கம் மாறாமல் உடனிருப்பான்...விருப்பத்திற்கேற்ப வழி நடப்பான் !
துயரம் நெருங்கினாலும் !விரைந்து தாங்கிப்பிடிப்பான் !

கண்ணீர் சிதைப்பதைக்கண்டால் !கண்களாக இருந்திடுவான் 
இன்பத்தில் சிரித்திட்டால் ,..புன்னகையாக மலர்ந்திடுவான் !
நட்பில் சாதி,மத,பேதமில்லை ஒற்றுமையே ...உணர்த்திடுவான் !
வேறுபாடின்றி பழகுவதால் சகோதரத்துவம் நிலைத்திடுவான் !

கள்ளம் ,கபடம் மனதிளில்லையே ,...ஆதரப்பதில் கருணையில் 
சிறுப் பிள்ளையே !-நட்புக்கு ஏதாவதென்றால் உயிரும்கூட பெரிதில்லையே !
உணவில் உப்பின்றி ஆகிவிட்டால் சப்பாகிப்போவதைப்போல 
தப்பாக பழகநினைத்தால் ஒப்புக்கு செப்பாக செதுக்குபவனே  !

நட்புக்கு உயிருமில்லை ,கொள்ளும் நட்புக்கு இறப்புமில்லை !
இருந்தாலும் உடனிருப்பான் !பிரிந்தாலும் உள்ளமாகிருப்பான் !
தாயாகி ,சேயாகி .கருவாக சுமந்திடுவான் !-வாங்கும் 
சுவாசிப்பில் காற்றாக உள்ளே நுழைந்திடுவான் !

மூச்சு முட்டு பிறக்கையிலே கண்டிருந்தால் துடித்திருப்பான் !
தவழத்தான் பழகையிலே தாய்க்கு நிகராக கண்டிருப்பான் !
நட்பைத்தான் தொடருகையில் பசிக்கூட மறந்திடுவான் !
உறவாக பழகுவதற்கு உள்ளத்தைவிட வேறேதவும் தேவைல்லையே !


Leave a Reply