> > பாடல்

பாடல்

Posted on செவ்வாய், 17 ஜூலை, 2012 | No Comments


சரணம் !


நெசமா,,,நெசமா ,,,தூங்கயிலே ....
கண்ண ரெண்டும் மூடிக்கிட்டேன்
இருட்டு மூழ்கி சூழ்கையிலே
மனசு மட்டும் தூங்கலையே ...!

இதயத்தில் ஒருக்குருவி கூடுகட்டி இருக்கிறதே ...!
கனவிலே பட்டாம்பூச்சி விண்ணிலே பறக்கிறதே ....!
{நெசமா }

பல்லவி !

எனக்குள்ளே மாற்றங்கள் தானாக வந்திடவே
என் வழியின் மூடியஜன்னல்கள் திறந்து வைத்திடவே!
விழியோரம் விழிவைத்து அவள்வரவை எதிர்காத்திடவே
ஏக்கங்களால் தவிக்கையிலே இமைகள் பூர்த்திடவே ...!

எங்கே ..எப்போ ..?காலம் சொல்லு வரேன் நில்லு
என்னை அல்லு என்னுணர்வுகள் சொல்கிறதே ....!-{எனக்குள்ளே }
{நெசமா}

பல்லவி 2 !

இதுதான் வாழ்க்கையென்று காதல் நூலை திறந்திடவே -பார்த்தால் ...
சுலபமில்லை கடினமென்று ஆகிடவே ...!படிக்கும் பாடம் கனத்திடவே ...!
தினந்தோறும் மனப்பாடம் செய்கிறேன் !
மறந்திடுவேன் என்றெண்ணி .ஏனோ ?உள்ளத்தில் சுமக்கிறேன் ....!

இப்போ ,அப்போ ,எப்போதுமே நினைவுக்கொள்ள-கொல்ல.கொல்ல ...
இல்ல ..இல்ல !இதுக்கற்பனையாக சிறகடித்துச் செல்ல ...!

நான் விழித்துப்பார்க்கைலே ....பூமி மவுனங்கள் காக்கிறதே
இருண்ட உலகத்திலே நிலவும்மட்டும் அழகாய் தெரிகிறதே ..!
வறண்ட நிலத்தினிலே கொடியொன்று புதிதாய் முளைத்திடவே ....!
ஆசை ஊற்றினிலே ...வந்த இரவும் பகலாகிறதே ...!

அங்கே .அப்போ ..!மெய்மறந்து நிற்க ! அவளை பராமரிக்க ....!
தண்ணீரை ஊற்றி உயிரத்தந்து காதலை வளர்க்கிறேன் !
எவர் விழியிலும் அகப்படாமலிருக்க மூடியே மறைக்கிறேன்
தெரிந்தாலும் கவலையில்லை அவளுக்காவே நான் இருப்பேன்

அவளை மறக்க சொன்னால் ,,ஜடமாக நான் இருப்பேன் {இதுதான் } (நெசமா )

Leave a Reply