> > தோழர் யாகுப் அலி நோய்வாய் பட்டப்போது பிரார்த்தித்து எழுதியனுப்பிய வருத்தமடல் ''!

தோழர் யாகுப் அலி நோய்வாய் பட்டப்போது பிரார்த்தித்து எழுதியனுப்பிய வருத்தமடல் ''!

Posted on திங்கள், 16 ஏப்ரல், 2012 | No Comments

சமீபத்தில் தோழர் யாகுப் அலி நோய்வாய் பட்டப்போது பிரார்த்தித்து எழுதியனுப்பிய வருத்தமடல் ''!



 உயிரை கொடுப்பவனும் அவனே
உயிர் பிய்ப்பவனும் அவனே !
கவலை மறந்திடு நண்பா
கடவுளை நினைத்திடு !

உன் கடமைகளை 
செய்திட மறவாதே
காண பல கண்கள் 
உள்ளதையும் மறவாதே !

உள்ளம் உயர்வாக 
நீ  நினைத்ததினால்...
இவ்வுலகம் நலம்பெற
 உன்னை பிரார்த்திக்கிறது!

தவறுகள் நடப்பது -இயல்பே ...!
மறப்பதும் மன்னிப்பதும் மரபே...!

கர்வம் கொண்டிருந்தால்...
உள்ளே "அது" அழிக்கும் !

எதையும் மறந்து...
 நீ நடந்தால் ...
உன் வளர்ச்சிக்கு
அது வழி வகுக்கும்!

நல் உள்ளம்
உன்னிடம் உள்ளதினால்
என்னுள்ளத்தில் உள்ளதை
கூறுகிறேன் ...!

பல்லாயிரம் வருடங்களுக்கு ...
மேலாக ,, உன் எழுத்துகள்
 நிலைத்திடவே  பார்க்கிறேன் ..
மனமுவந்தும் வேண்டுகிறேன்!

தமிழன்  பலகவிகள்
 நாம் படிக்க-விரைவில்,,,
உன் செவியில் 
அது ஒலிக்கும்  !

சிகிச்சை இன்றி 
குணமாக ...
அந்த மருத்துவரின்
மருந்து பலன் சிறக்கும் !


மருத்துவர் தந்த 
நாளை எண்ணி
வருந்தாதே நண்பா !
தன்னம்பிக்கையை 
ஒருபோதும்  இழுக்காதே ...!
வருத்தத்தில் இருக்கும்
 உன் குடும்பத்தை -உடனே 
இன்பத்தோடு இருக்க வழி வகுத்திடு  !
கடவுள் மீது பாரத்தைப்ப்போடு  
அவன் நிச்சயம்
நற் மனிதனை காப்பான்
கவலையை மறந்திடு!

நீ நலமுடன் வளமுடன்
வாழ ,,,உளமாற வாழ்த்தி
வேண்டிக் கொள்ளும்!

சகோதரர் - கவிஞர் இ.முபாரக்.  

Leave a Reply