> > புத்தர் !

புத்தர் !

Posted on வியாழன், 28 ஜூன், 2012 | No Comments


போதி மரத்தில் 
அமர்ந்ததால் ஞானம் 
வளர்ந்தது !கற்ற ஞானத்தை 
உலகிற்கு தானமாக்கியதால்
புத்தரானது !

பக்தனாக உருவெடுத்த
சித்தர்களுக்கு  ஆசான்!
வழியேற்று நடந்தவருக்கு 
குருவாகி ..-சொல் வேத
வாக்காய் பிரதிபளித்ததால் 
மக்களின் நேசன் !

பாவத்தையும் கருணையையும் 
போதிக்கும் பித்தனாகிய கற்றான்  !
இறைவனுக்கு துதிப்பதில் 
உண்மை பக்தன் !

மூடப்பூட்டை 
உடைத்தெரிந்த இவன் ஒற்றன்!
மனித ஞானக்கூட்டை 
திறந்திட வைத்த
ஞான சாவி வித்தன் !

விலங்குகளை கொல்வதேப்
பாவம் கூறி!-
உயிரின் உன்னதத்தை 
உணரவைத்த தன்னலமற்ற 
மனித நேயன் !


இவன் மீதுப்பற்றினால்
ஆழமாகி பதிந்து மனதில் 
மனிதனால் உருவெடுத்தான்
இவனானான்  கடவுள் !


சிலையாகி நிலையாகி உலக 
வரலாற்றிலே பேரும் புகழும்
சொல்வடிவிலே பதிவாகி
பெருமை சேர்க்கிறது
ஏட்டு வடிவில் !

Leave a Reply