> > தமிழுக்கோர் மடல் !

தமிழுக்கோர் மடல் !

Posted on புதன், 18 ஜூலை, 2012 | No Comments



ஊற்றெடுத்த உன்நெழுத்தில் நீரோடையாய்
பெருக்கெடுத்த தமிழலை ஓயாது 
உணர்வுக்குள்ளே தேரோட்டமாய் 
ஓடிக்கொண்டிருக்க வித்திட்ட விதை ....!

பூந்தோட்டத்தில் பூத்த பூக்களாய்
வண்டீர்த்திட இணைத்திட்ட பூச்செண்டுகளாய்
அழகியப்படைப்பு !உள்மனதில் தைத்து !-பிடித்து
ஆர்வத்துடன் படித்துப்பார்த்ததிலே உருவானது !

கருவிலே விதையுற்ற சிசுவும்
உணரவேண்டும் பைந்தமிழே அன்னைமொழி
அதுவென பற்ப்பல பொன்மொழிகளை வழங்கிடுவே !
ஞானம் பெற்ற போதிமரத்தடியில் தினந்தோறும் ஏக்கத்தோடு !

வந்தவர்கலனைவருமே மரத்தைக் கூருப்போடவந்தவர்களே
கூரையிலே அமர்ந்தவனாய் கூறுகெட்டு போவதைக்கண்டு
வீறெடுத்த எதிர் போராளியாய் களத்திலிறங்க முயற்சித்தவனாய் !-அப்போது !
வறுமைதனை இறுக்கிட்டு பாலையிலே குருடனாய் தள்ளிவிட்டது !

பாவம் சாதனைகள் பலச் செய்ய யாம்செய்ததென்னவோ ......
வேதனையால் வந்துதிர்த்த போதனைகள் ஆனதுவோ
வெண்பாக்கள் !பந்தியிலே வயிறார உண்டிடுவே ...
தமிழுணர்வு பருகிடுவே ...!உறங்காமல் பிரிவோடு வருந்துகிறேன் !

கரத்தினிலே பணமிருந்தால் தமிழை கரையைசேர்த்திருப்பேன்
தமிழனாகிருந்தும்கூட தமிழக்கு பிழைக்கவழியில்லையே ...!
வந்த மனங்கள் நந்தவனம் கூறிடவே கற்பனையை மேருகேற்றிடவே
யாம் கொள்ளும் முயற்சிகளோ எல்லைஇன்றி நீண்டிடுவே ..!

காலமேன்னைப் பிரித்தாளும் தன்னம்பிக்கையில் வாழ்ந்திடுமே
என்னைப்பெற்றுடுத்த தமிழன்னைக்கு அரபுலகம் ஏற்றுடுமே !
புகழோங்கி பெற்றிடவே ...அரியணையில் உயரேற்றிடவே
படும் கட்டங்களுக்கு பலனாய்கிட்டிடுமே .முயற்சியோடு ...!

உதடு பேசுமொழியாக உருதுமொழிஎனதுவே ...!
உயிர்நேசம்கொண்டதிலே தமிழ்மொழியானதுவே !
உறவாகிருப்பவர்கள் ,உயிரோடு கலந்தவர்கள் !-எம்முயிர்
பிரிகையிலே சிறிதுளிக்கண்ணீர் என்னைஎண்ணியாவது விடுவிரோ?

பலர் பொழுதைபபோக்கிகொள்ள,எழுத்தாக்கிக்கொள்ள ...
எம்மேழுத்தோவாகும் பொழுதுப்போக்குகிற சிந்தனையிலே
காலம்கடந்தோடும் வேளையிலே மூலைமுடுக்குகளெல்லாம்
விளைக்கும் விதையாகும் வெண்பாவாய் முளைத்து நிற்கும் !

படைப்பாலநோக்கிடும் லட்சியங்கள் வேறெதுவோ
அதுவாகிருந்திடுவே மெய்மறந்து !-அப்போதே
இன்பத்தில் என்னின் நாடித்துடிப்பு நின்றிடுமோ?
ஆவல்தன்னை வைத்துள்ளேன் தமிழலையே நிறைவேற்றுவீரா?

இளமையிலே வருமைப்பெற்றேன் வருத்தத்தாலே
வாழ்க்கையைக்கற்றேன் பள்ளிவாயல் போகலையே
ஆசானைப்பார்க்களையே ...ஒழுக்கம்கற்பித்த வேதனைகள்
தந்திட்டப்பக்குவங்கள்....!சொற்க்களிலாகும் தத்துவங்கள் !

உம்பகுதியிலே அமைத்திட்டது விலையிலா நிலங்கள்
இனியதை பிறர் விழியிலே மெருகூட்டுவதும்
அவர்வழியிலே உயிரூட்டுவதும் உமபொருப்பு
எம்மிருபபு உமக்கு வழங்குகிறேன் பரபபிடுவீறோ ?

Leave a Reply