> > ஏழை வயோதிகரின் குமுறல் !

ஏழை வயோதிகரின் குமுறல் !

Posted on வெள்ளி, 8 ஜூன், 2012 | No Comments

தள்ளாடும் வயது 
முதுமையை சுமக்கும் 
வறுமை அல்லாடுகிறது !

"இருள்"மூழ்கடித்த 
குடிசையில் எழிலாய் 
மின்னுகிறது நட்சத்திரம்!

எரியா "உளையால்" 
அடுப்பேறிய "பசி "
எரிகிறது குடல்!

தகுதியற்ற உடலால் 
பிழைக்கத் தெரியும் !
உழைக்க முடியாது !

பிறர் வீட்டில் 
ஏற்ற வேண்டிய 
குத்து விளக்கு 

குத்தகைக்கு போகாத 
விளக்குகளாய் பாழடைந்து 
 மூலையில் கெடக்கிறது!

முதிர் கன்னியாகிய  
கண்ணிகள் !நற்திரு-
மனத்தை தேடுகிறது!

தரம்பார்க்கும் வரன்  
தரத்தை நோக்குகிறது 
திரு-மணங்கள் !

ரூபாய் கூடினால் 
தட்டுகள் மாறும்
நோட்டினாலாகும் அர்ச்சனை !

உறக்கத்தை துறக்கும் 
விழிகள்-வலிய 
வேதனையோடு கவலை !

இன்று -நாளை 
மரண நாட்களுக்காக 
காத்திருக்கும் புதைக்குழி !

தொண்டைக் 
குழியடைத்து 
உயிர் பிரியும் முன்... !

இறுதியாசை ...கனக்கிறது 
கற்பனையோடு தவிக்கிறது 
வெறுக்கும் மரணம் !

கண்ணை காத்த
 இமை !-மூட
 மறுக்கிறது விழிகள் !

திருடர்கள் கிடைக்காவிட்டாலும் !
குருடர்களாவது கிடைக்கமாட்டாரா ?
தேடும் பார்வை !

நம்பிக்கையோடு கடக்கும் 
வாழ்க்கை உலர்ந்து 
 வாடும் குடும்பம் !
தேடலோடு ...முதியவர் !






Leave a Reply