> > வாழ்க்கையில் துணிவு வேண்டும் !

வாழ்க்கையில் துணிவு வேண்டும் !

Posted on ஞாயிறு, 10 ஜூன், 2012 | No Comments

துணிவுகொள் !

தன்னம்பிக்கையிழுந்தால் 

துயரமுன்னை நெருங்கும் 
மூட நம்பிக்கையை 
வெரட்டினால் அது !-மிரளும் !

உருக்கிடும் வருத்தம் 
முடியாது நினைக்கையில் !
முயற்சியின் அர்த்தம் 
வெற்றிக்கொள்கையில்

இனிக்க செய்யும்  
துணிவு !- பிறக்க
 செய்யும் தோல்வி 
இழக்க செய்யும் 
வெற்றி! இலகுவாகும் 
வாழ்க்கை !
ரசனையை தூண்ட வைத்த புகைப்படத்திற்கு  இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன் !

தமிழச்சியே !

தலைகுனிகையில் 
தலைநிமிரும் சோகம் !
உருகுளைகையில் 
உருவாகும் வருத்தம் !

சிலருக்கு .....
சாபமாகும் இளமை !
பரிதாபமாகும் வாழ்க்கை 
வறுமையால்..... !

வாழ்க்கை பூந்தோட்டத்தில் 
பூக்கின்ற மலர்கள் 
வாடுவதெண்ணி
 வருந்துவதில்லை!

கண்ணீர் அவலத்தோடு 
இருப்பதில்லை !
புன்னகைக்கும் ஆயுள் 
இறைப்பதை நினைப்பதில்லை !

அழகு காலம் 
கடந்தோட வைக்கும் !
நாடிவரும் வண்டுகள் 
ரசித்துக்கொண்டே இருக்கும் !
இருக்கும் வரையில்!

கூடில்லை நினைத்து !
கூடாவதில்லை பறவைகள் !
சுதந்திரத்தோடு சிறகுகள் 
இருக்கவே செய்கின்றன ...!

கதிரவன் மறைத்து 
ஒளி "பட்டு"போவதில்லை
 வெண் நிலவு !-விடாமுயற்சியில் 
உருண்டோடும் பூமி !


Leave a Reply